விழிப்புணர்வு சிந்தனை

குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: விழிப்புணர்வு சிந்தனை
உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள் | Live for yourself as long as you live

உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்

Category: விழிப்புணர்வு சிந்தனை

ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது. அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள். உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள். உங்களுக்கா கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம். ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும். இப்போது சொல்லுங்கள்.

ஒரு வரி உண்மைகள் | A line of facts

ஒரு வரி உண்மைகள்

Category: விழிப்புணர்வு சிந்தனை

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்… *வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!! *எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

விழிப்புணர்வு சிந்தனை | Awareness thoughts

நேரம் இருந்தால் வாசியுங்கள்…மனதை கலங்க செய்யும் வரிகள். படியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!! சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று…… முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று……. கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா? நீ தான் எங்கள் கண்மணி என்று.,….. விடியலும் விலாசமுமாய் நம்பிக்கையும் எதிர்காலமுமாய் நம்பியிருக்கிறோம் உன்னை…… ஐந்து நிமிடங்கள் காத்திருந்து அடுத்து வரும் பேருந்திற்காக காத்திருக்க முடியாத உனக்காக நீ பிறந்த நாள் முதல் இன்று வரை காப்பாற்றுவாயென்று காத்திருக்கிறோம் காலமெல்லாம் உடனிருப்பேனென்று கட்டியத்தாலி நினைவிருக்கிறதா கண்ணாளா காத்திருப்பேன் கடைசிவரை விரல் பிடித்து நான் நடந்து கரை தாண்டவும், கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே விழித்திருப்பேன் நீ வரும் வரை…,..

: விழிப்புணர்வு சிந்தனை - குறிப்புகள் [ விழிப்புணர்வு சிந்தனை ] | : Awareness thoughts - Notes in Tamil [ Awareness thoughts ]

விழிப்புணர்வு சிந்தனை

 

கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.

 

நேரம் இருந்தால் வாசியுங்கள்…மனதை கலங்க செய்யும் வரிகள். படியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!!

 

சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

 

விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று……

 

முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று…….

 

கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா? நீ தான் எங்கள் கண்மணி என்று.,…..

 

விடியலும் விலாசமுமாய் நம்பிக்கையும் எதிர்காலமுமாய் நம்பியிருக்கிறோம் உன்னை……

 

ஐந்து நிமிடங்கள் காத்திருந்து அடுத்து வரும் பேருந்திற்காக காத்திருக்க முடியாத உனக்காக நீ பிறந்த நாள் முதல் இன்று வரை காப்பாற்றுவாயென்று காத்திருக்கிறோம்

 

காலமெல்லாம் உடனிருப்பேனென்று கட்டியத்தாலி நினைவிருக்கிறதா கண்ணாளா காத்திருப்பேன் கடைசிவரை

 

விரல் பிடித்து நான் நடந்து கரை தாண்டவும், கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே விழித்திருப்பேன் நீ வரும் வரை…,..

 

அலுவலகத்திற்குத் தானே சென்றிருக்கிறாய் அப்படியே திரும்பி வருவாயென்று காத்திருக்கிறோம்

 

உடையாமலும் உரசாமலும் கவனமுடன் திரும்பி வா நீ செல்லும் பாதைகள் உனக்கு வெறும் பயணமாக இருக்கலாம் காத்திருக்கும் எங்களுக்குத்தான் தெரியும் காலனிடம் போராடிக் கொண்டிருக்கிறாய் என்று……

 

அம்மாவும், அப்பாவும் தம்பியும், தங்கையும் மனைவியும், மகளும் மகனுமென வாழக்கிடைத்த இந்த வாழ்க்கையொரு வரமென்று உணர்ந்து கொள்ளுங்கள்

 

தொங்கிச் செல்வதும் துரத்திச் செல்வதும் உங்கள் குருதியின் வேகமாக இருக்கலாம் ஆனால், மரணமிடருந்து எப்போதும் தப்பித்து விட முடியாது

 

விவேகமுடன் செயல்படாவிட்டால் வீட்டில் காத்திருக்கும் உயிருக்கும் மேலான உங்கள் உறவுகளையெல்லாம் அரசு மருத்துவமனையில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,……..

 

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்

 

நீங்கள் ஒரு மகனாக இருந்தால் ஓரு குடும்பத்தின் வாரிசு போச்சு!

கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு!

தந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே இருண்டு போச்சு!

 

கண நேர கவன குறைவால் கதை முடிகிறது நண்பா!

கவனமாக செல் !

காத்திருக்கு உறவுகள் உனக்காக!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

: விழிப்புணர்வு சிந்தனை - குறிப்புகள் [ விழிப்புணர்வு சிந்தனை ] | : Awareness thoughts - Notes in Tamil [ Awareness thoughts ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: விழிப்புணர்வு சிந்தனை