மகிழ்ச்சி

குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: மகிழ்ச்சி
இல்லத்தில் அலுவலகத்தில் பொது வாழ்வில் மனித உறவுகள் சீராக இருக்க | At home, in the office, in public life, human relations should be smooth

இல்லத்தில் அலுவலகத்தில் பொது வாழ்வில் மனித உறவுகள் சீராக இருக்க

Category: மகிழ்ச்சி

🔔APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள் 🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள் 🔔COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்

மகிழ்ச்சி  | happiness

து உண்மையான ஆனந்தம்? ஆனந்தமான வாழ்வில் மகிழ்ச்சி தானாக வந்து சேர்ந்து விடும். மகிழ்ச்சியைத் தேடி நாம் செல்ல வேண்டியது இல்லை. அது தானாக நம்மிடம் வந்து சேர வாழ்வில் சில விஷயங்களை பின்பற்றினாலே போதும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடி விடலாம்.

: மகிழ்ச்சி - குறிப்புகள் [ மகிழ்ச்சி ] | : happiness - Notes in Tamil [ happiness ]

ஆனந்தம் ஆனந்தமே! எது உண்மையான மகிழ்ச்சி?

 

எது உண்மையான ஆனந்தம்? ஆனந்தமான வாழ்வில் மகிழ்ச்சி தானாக வந்து சேர்ந்து விடும். மகிழ்ச்சியைத் தேடி நாம் செல்ல வேண்டியது இல்லை. அது தானாக நம்மிடம் வந்து சேர வாழ்வில் சில விஷயங்களை பின்பற்றினாலே போதும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடி விடலாம்.

 

மகிழ்ச்சி எங்கே கிடைக்கும்? கிலோ என்ன விலை? என்று சிந்திப்பதை விட நம் மனதில் பெருகும் ஆனந்தமே மகிழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் மகிழ்ச்சியை எங்கு தேடினாலும் கிடைக்காது. அது நம் உள் மனதிலே இருக்கின்ற விஷயம். அதை எளிதில் கண்டு வாழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

 

ஒரு சின்னக் கதையின் மூலம் இதனை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒரு சுவாரசியமோ, மகிழ்ச்சியோ இல்லை என்று தோன்ற அவன் நேராக பக்கத்து ஊரில் இருந்த ஒரு சாமியாரிடம் சென்றான்.

 

"என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. ஆனால் நீங்களோ எப்போதும் ஆடிப்பாடி உற்சாகமாக இருக்கிறீகள். அது கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டான்.

 

அதற்கு அந்த சாமியாரோ வா என்னுடன் என்று பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏகப்பட்ட பட்டாம்பூச்சிகள் சிறகடித்து அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. பறக்கும் பட்டாம்பூச்சிகளைக் காட்டி இதில் ஏதேனும் ஒன்றிரண்டை பிடித்துக் கொண்டு வா என்றார். இவனும் பட்டாம்பூச்சி பின்னாடி ஓடிச் சென்று பிடிக்க முயன்றான். ஒன்று கூட அவன் கையில் சிக்கவில்லை. வருத்தமுடன் சாமியாரிடம் வந்து கூற அவரோ "பரவாயில்ல வா தோட்டத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம்" என்று தோட்டத்தின் நடுவே அவனை அழைத்து வந்தார்.

 

இருவரும் அமைதியாக தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சிகள் சில அவர்களைச் சுற்றி வட்டம் அடிக்கத் தொடங்கின. ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள் அவர்கள் கைகளில் வந்தமர்ந்தன. அவனுக்கோ ஒரே சந்தோஷம். தேடிச் சென்றபோது கிடைக்கவில்லை. இப்படித் தானாக நம்மிடம் வந்து அமர்கின்றதே என்று.

 

 

அவனது சந்தோஷத்தைக் கண்டு சாமியார் சிரித்துக் கொண்டே "இதுதான் வாழ்க்கை. மகிழ்ச்சியைத்தேடி இங்கும் அங்கும் அலையும் பொழுது கிடைக்காது. அதுவே நமக்கு கிடைத்த வாழ்க்கையை அமைதியாக ரசிக்க கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி தானாகவே நம்மிடம் வந்து சேரும். வாழ்க்கையை ஆனந்தமாக எந்தக் குறையும் இன்றி அனுபவித்து வாழலாம் என்றார்.

 

எதுவும் நாமாக தேடிச்சென்று அலைவதை விட அதுவாக கிடைப்பது மகிழ்ச்சிதானே! வாழ்க்கையை அமைதியாக ரசிக்க கற்றுக் கொண்டால் போதும் மகிழ்ச்சி தானாக நம்மை வந்தடையும்.

 

 

இதுதான் சந்தோஷம் என்ற ஏதோ ஒரு தேடலில் உண்மையில் நம்மிடம் இருக்கும் சந்தோஷங்களை எல்லாம்  நம்மை அறியாமலேயே இழந்து கொண்டிருக் கிறோம். சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒருவகை தொற்று. மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால்தான் மற்றவருக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியும். எனவே மகிழ்ந்து மகிழ்விப்போம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

: மகிழ்ச்சி - குறிப்புகள் [ மகிழ்ச்சி ] | : happiness - Notes in Tamil [ happiness ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: மகிழ்ச்சி