மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?

குறிப்புகள்

[ ஊக்கம் ]

How to keep the mind? - Tips in Tamil

மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? | How to keep the mind?

எந்த ஒன்றினால் மனம் வருத்தப்படுகிறதோ அதில் நாம் சிறை பட்டு அடைபட்டு கொண்டு உள்ளோம் என்று தான் அர்த்தம் ஆகும்.

மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?


எந்த ஒன்றினால் மனம் வருத்தப்படுகிறதோ அதில் நாம் சிறை பட்டு அடைபட்டு கொண்டு உள்ளோம் என்று தான் அர்த்தம்  ஆகும்.

(பணம், பதவி, பாசம், புகழ், அதிகாரம், உறவுகள், தொழில் இன்னும் பல.)

எதுவும் நமக்கு சிறை என்பது இல்லை. நம் மனம் நினைக்கும் எண்ணங்களே தான் நமக்குச் சிறையாகி போகிறது.

இதற்கு ஒரு சிறுகதையுடன் அர்த்தத்தை காண்போம்.

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒரு பழையத் தகரப்பெட்டியின் மேலே உக்கார்ந்துக் கொண்டு ரொம்ப நாளாக பிச்சை எடுத்துக் கொண்டு வருகிறான். ஒரு கட்டத்தில்  ஒரு நாள் அவன் இறந்தும் விடுகிறான். இறந்தப் பிறகு அவனை தூக்கி செல்லும் போது அவன் அமர்ந்திருந்த பெட்டியை திறந்து பார்க்கலாம் என்று திறந்துப் பார்கிறார்கள். என்ன ஒரு ஆச்சரியம்!

அதில் மிகவும் விலை உயர்ந்த நகைகள், ஆபரணங்கள் இருப்பதைக் கண்டு வியந்தேப் போனார்கள். பிச்சைக்காரன் இது தெரியாமல் அவனுடைய மொத்த வாழ்க்கை முழுவதுமே பிச்சை எடுத்தான். அவன் தொழிலே பிச்சை ஆகி போனது. இது தான் தொழிலில் சிறை என்பார்கள். தொழில் என்பது பணத்தை நம் நோக்கி ஈர்க்க வைப்பதே ஆகும். மாறாக பணம் நம்மிடம் ஈர்க்கப்பட்டு நமக்கு தெரியாமலே போவது இல்லை.

இன்னொரு மனிதர் நிறைய பணம் சேர்த்து தன் வீட்டுக்கு கீழ் பாதாளம் அமைத்து அதில் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் அவர் ஒரு நாள் கூட அதை சரி பார்த்ததே இல்லை.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அறையின் அடுத்தப் பக்க சுவரை துளையிட்டு அனைத்து பணத்தையும் எடுத்து செல்கிறார்.

அது இவருக்கு தெரியாமலேயே பணம் பத்திராமாக இருப்பதாக எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறார்

இது தான் மனித மனம்.

ஒருவன் இருக்கிறது என்பது தெரியாமல் பிச்சை எடுக்கிறான். 

மற்றொருவன் இல்லாததை இருப்பதாக எண்ணி திருப்தி கொள்கிறான்.

இதுவே சிறை கொண்ட மனித மனதின் மாய விளையாட்டு.......!!! 🎭

 

மனதை பரந்த பரப்பில் பறக்க விடுங்கள். சுருக்கி அடக்கி விடாதீர்கள். நல்ல நினைவுகளுடன், நல்ல சூழ்நிலைகளில், முற்போக்கு சிந்தனைகளுடன், யாவர்க்கும் கெடுதல் நினைக்காத மனதை சொந்தமாக்குங்கள். அப்புறம் பாருங்கள் இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு சொந்தங்களை  உங்கள் அருகில் கொண்டு வரப் போகிறது என்பதை நீங்கள் வாழ்க்கையில் உணரலாம்.

 

எதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் மனசு மட்டும் இருந்து விட்டால் உலகத்தில் நம்மை விட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்க முடியாது!

 

அபரிமிதமான_வாழ்க்கை… வாழலாம்....!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஊக்கம் : மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : How to keep the mind? - Tips in Tamil [ Encouragement ]