புதுசுக்கு மாறவில்லை என்றால் என்ன ஆகும்?

வணிகம்

[ வணிகம்: அறிமுகம் ]

What happens if you don't upgrade? - Business in Tamil

புதுசுக்கு மாறவில்லை என்றால் என்ன ஆகும்? | What happens if you don't upgrade?

"நோக்கியா" தொலைப்பேசி நிறுவனத்தை மற்றொரு மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் குறைந்த விலைக்கு அந்த நிறுவனத்தை வாங்கியது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

புதுசுக்கு மாறவில்லை என்றால் என்ன ஆகும்?

"நோக்கியா" தொலைப்பேசி நிறுவனத்தை மற்றொரு மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் குறைந்த விலைக்கு அந்த நிறுவனத்தை வாங்கியது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு செய்தியாளர் சந்திப்பின் பொழுது அந்த நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான் இன்றைய தொழில் முனைவோரின் அனுபவத்திற்கு தேவையான ஒரு சாராம்சம் ஆகும். அவர்கள் சொன்னது என்னவெனில்,

 "எங்களுடைய நிறுவனம் மற்றும் நிருவனத்தார்கள் எந்தவித தவறுகளும் செய்ய வில்லை, இருப்பினும் நாங்கள் தொழில் உலகில் தோற்று போய் விட்டோம். " என்று சொன்னார்.

அவர் அப்படி சொன்ன வார்த்தைகளை கேட்டு  அவர் மட்டும் அல்ல, அந்த நிறுவனத்தின்  மொத்த நபர்களுமே கண்ணீர் விட்டு அழுதே விட்டனர். மிகப்பெரிய வலிகளின் ரணமாக இருந்தது.


நோக்கியா நிறுவனம் ஆரம்பக்காலங்களில் மிகவும் உலகப் புகழ் பெற்ற ஒரு பெரிய மரியாதைக்குரிய நிறுவனம் ஆகும். தொழில்ரீதியாக அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் உலகம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் மாறிக்கொண்டே இருந்தது. நோக்கியாவின் எதிர்காலம் எப்படி மாறும் என்று நோக்கியாவின் நிர்வாகம் கணிக்கத் தவறி விட்டது. அந்த நிறுவனம் தங்கள் தொழிலின் முன்னேத்திற்கான எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை வகுக்கவும் தவற விட்டதால் இந்த பாதிப்புகள் வந்து விட்டது. மேலும் அந்த நிறுவனம் உலகத்தின் எதிர்காலத்திற்குத் தகுந்தவாறு தங்கள் நிறுவனத்தின் போக்குகளை மெருகேற்றிக் கொள்ளவும் தவறி விட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக, கடைசியில் உலகத்தின் மிகப் பெரிய தொலைப்பேசி நிறுவனமாக மாறக்கூடிய வாய்ப்புகளையும் அந்த நிறுவனம் இழந்தது. அதுமட்டுமல்ல.  ஒரு மிகப்பெரும் பொருள் ஈட்டக் கூடிய ஒரு நிறுவனமாகும் ஒரு வாய்ப்பையும், அந்த தொழில் உலகத்தில் நீண்ட காலங்கள் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

தொழில் செய்யும், தொழிலில் ஈடுபட காத்திருக்கும், தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு மிகப்பெரிய பாடம்.

நாம் காலத்திற்குத் தகுந்தாற்போல நாமும், நம்முடைய தொழிலையும் காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி, மெருகேற்றாவிட்டால், போட்டியிலிருந்து நாம் வியாபார சந்தையில் தகுதி நீக்கம் செய்யப்படுவோம்.

மேலும் நாம் புதிய விஷயங்களைக் குறித்தும், நவீன வழிமுறைகள், அதி நவீன செயல்பாடுகள் நாம் தொழிலில் செய்யவில்லை என்றால் பின்னுக்கி தள்ளி விட்டு நம் மேலே ஏறிப் போய் விடுவார்கள்.  மற்றும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் கால ஓட்டத்திற்கு தகுந்தவாறு விரைவாக ஓடாது வெகு குறைந்த காலங்களிலே நம் சகாப்தம் முடிந்துவிடும்.

ஒரு மனிதன் அல்லது ஒரு வணிகன் புதிது புதிதாக கற்றுக் கொள்ளும் வரை தான் அனைத்து காரியங்களிலும் வெற்றிகரமாக இருப்பான். அனைத்தையும் நாம்  கற்றுக்கொண்டுவிட்டோம், இனி புதிதாக எதுவும் இல்லை என்கின்ற மன நிலையில் இருக்கு போதும், தன்னைவிட சிறியவர்களிடமும் அனுபவத்தை கேட்டு தெரியவும் யோசிக்க கூடாது. குறிப்பாக சின்னவர்களுடன் கலந்து கொண்டு ஆலோசனை கேட்பது புதுவித யோசனைகளை உருவாக காரணமாய் அமையும். அதுபோல தன்னை விட பெரியவர்களை வழிகாட்டியாக அவர்களுடைய அனுபவங்கள் நம் தொழில்களுக்கு கட்டாயம் தேவைப்படும். அதையும் செயல்படுத்த யோசிக்க கூடாது. நல்லவைகளை யார் சொன்னாலும் உடனே செயல்படுத்துங்கள். அது செயல்படுத்தும் நேரம் மட்டுமே நல்ல நேரம். அதை விட்டு ஜோசியம் என்று நல்ல நேரம் பார்க்க வேண்டாம்.  இந்த செயல்களே உங்களுடைய வாழ்க்கையில் விரைவில் வெற்றி பெறத் தகுதியான, தேவையான ஒரு உண்மையான, அனுபவத்தின் வாயிலான, அடிப்படையிலான கிடைத்த படிப்பினை ஆகும்.

எனவே உங்கள் எதிர் காலம் வளமுடன் நலமாக இருக்க இன்றே திட்டமிங்கள். நன்றி.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

வணிகம்: அறிமுகம் : புதுசுக்கு மாறவில்லை என்றால் என்ன ஆகும்? - வணிகம் [ வணிகம் ] | Business: Introduction : What happens if you don't upgrade? - Business in Tamil [ Business ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்