உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்

குறிப்புகள்

[ விழிப்புணர்வு சிந்தனை ]

Live for yourself as long as you live - Notes in Tamil

உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள் | Live for yourself as long as you live

ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது. அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள். உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள். உங்களுக்கா கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம். ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும். இப்போது சொல்லுங்கள்.

உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்!!!

 

ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார்

 

 நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது.

 

அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு  பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர்.

 

புரிந்து கொள்ளுங்கள்...

 

நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்.

 

இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள். உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள்.

 

உங்களுக்கா கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்.

 

ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும்.

 

இப்போது சொல்லுங்கள்.

 

உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்.

 

இது உங்கள் வாழ்க்கை இறைவனைத் தவிர யாரையும் நீங்கள் திருப்திப்படுத்த தேவையில்லை யாரும் உங்களை திருப்திப்படுத்த போவதும் இல்லை.

 

எனவே நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்.  

 

இது தான் யதார்த்த வாழ்வு.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

விழிப்புணர்வு சிந்தனை : உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள் - குறிப்புகள் [ ] | Awareness thoughts : Live for yourself as long as you live - Notes in Tamil [ ]