
நவக்கிரகங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வாகனங்கள் உள்ளது அந்த வாகனங்கள் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தரும் குறியீடுகளாக அமைகின்றன. அதாவது சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை குறைக்கக்கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்கள் அல்லது சிறிய சிலைகளாக, உரிய இடத்தில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை* சூரிய தசா அல்லது புத்தி காலகட்டமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப்பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம் சந்திர தசா அல்லது புத்தி நடக்கும் காலகட்டம் நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம் செவ்வாய் தசா அல்லது புத்தியில் பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலை வைக்கலாம்.
நவகிரக வாகனங்கள்
வழிபாடு பற்றிய பதிவுகள்
நவக்கிரகங்கள் அனைத்திற்கும்
ஒவ்வொரு வாகனங்கள் உள்ளது அந்த வாகனங்கள் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தரும்
குறியீடுகளாக அமைகின்றன.
அதாவது சம்பந்தப்பட்ட
கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை
குறைக்கக்கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்கள் அல்லது சிறிய
சிலைகளாக, உரிய இடத்தில் வைத்து
பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை*
சூரிய தசா அல்லது புத்தி
காலகட்டமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப்பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவச்சிலை
வைக்கலாம்
சந்திர தசா அல்லது புத்தி நடக்கும்
காலகட்டம் நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம்
செவ்வாய் தசா அல்லது புத்தியில்
பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலை வைக்கலாம்
புதன் கிரகத்தின் தசா அல்லது புத்தி
நடக்கும்போது நன்மைகள் ஏற்பட, வீட்டின் வடகிழக்கு பகுதியில் குதிரையின் படம் அல்லது சிறிய அளவிலான
சிலை வைக்கலாம்
குருவின் தசா அல்லது புத்தி காலங்கள்
நன்மை தருவதற்கு, வீட்டின் வடக்கு பகுதியில் யானையின் படம் அல்லது உருவத்தை வைத்து
பராமரித்து வரலாம்
சுக்ரனின் தசா, புத்தி காலம் நன்மையாக
அமைய, வீட்டின் கிழக்கு பக்கம்
கருடன் படம் அல்லது சிலை வைக்கலாம்
சனி கிரகத்தின் தசா, புத்தி காலம் நல்லவிதமாக
அமைய, வீட்டின் மேற்கு பக்கத்தில்
பறக்கும் நிலையில் உள்ள காகத்தின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம்
ராகு தசா அல்லது புத்தி நடக்கும்
காலம் நல்லவிதமாக இருக்க, வீட்டின் தென்மேற்கு பகுதியில் ஆட்டின் படம் அல்லது சிறிய சிலை வைக்கலாம்
கேது தசாபுத்தி நடக்கும் சமயத்தில்
நன்மைகள் நடக்க,
வீட்டின் வடமேற்கு பகுதியில்
சிங்கத்தின் படம் அல்லது சிலை வைக்கலாம்
இதுபோன்ற பல பயனுள்ள
ஆன்மீக தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம்
தொடரும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : நவகிரக வாகனங்கள் வழிபாடு பற்றிய பதிவுகள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Records of worship of Navagraha vehicles - Tips in Tamil [ ]