பச்சை கற்பூரம் அனைத்து இனிப்புப் பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் யன்படுத்தும் பொருட்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள். கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு. பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். இது ‘காம் ஃபர் லாரல்’ என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. பச்சை கற்பூரம் சீனா, ஜப்பான் நாடுகளில் விளையும் கற்பூர மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கக் கூடிய பொருளாகும். இந்த பச்சை கற்பூரமானது எந்தவித பக்குவமும் அடையாத மரப்பட்டை மூலம் கிடைக்கிறது. இது உணவின் சுவைக்காகவும் வாசனைக்காகவும்ப போடப்படுகிறது என்பதுதான் பெரும்பாலானோருக்குத் தெரியும். பச்சைக் கற்பூரம் ஒரு சித்த மருத்துவப் பொருள். இது எட்டு விதமான குன்மங்களையும், மூட்டுகளில் ஏற்படும் வலி, வாதநோய் போன்றவற்றை நீக்கும். இதில் ஈசன், வீமன், பூதாச்சிறையன் என மூன்று வகை உண்டு.
நுகர்ந்தாலே மருத்துவப்
பலன்களை அள்ளித் தரும் பச்சை கற்பூரம்......!!!
பச்சை கற்பூரம் அனைத்து இனிப்புப் பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் யன்படுத்தும் பொருட்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள். கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு.
பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம்.
இது ‘காம் ஃபர் லாரல்’ என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. பச்சை கற்பூரம்
சீனா, ஜப்பான் நாடுகளில் விளையும் கற்பூர
மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கக் கூடிய பொருளாகும்.
இந்த பச்சை கற்பூரமானது எந்தவித
பக்குவமும் அடையாத மரப்பட்டை மூலம் கிடைக்கிறது. இது உணவின் சுவைக்காகவும்
வாசனைக்காகவும்ப போடப்படுகிறது என்பதுதான் பெரும்பாலானோருக்குத் தெரியும்.
பச்சைக் கற்பூரம் ஒரு சித்த மருத்துவப் பொருள்.
இது எட்டு விதமான குன்மங்களையும், மூட்டுகளில் ஏற்படும் வலி, வாதநோய் போன்றவற்றை நீக்கும். இதில்
ஈசன், வீமன்,
பூதாச்சிறையன்
என மூன்று வகை உண்டு.
ஈசன் கற்பூரம்
ஈசன் கற்பூரத்தை வசியம் செய்யப்
பயன்படுத்துகிறார்கள். மேலும், மயக்கம், மூக்கு
நோய், தாக ரோகம் போன்றவை இது நீக்கும்.
வீமன் கற்பூரம்
தாக நோய் தணிக்க, உடலில் குளிர்ச்சி ஏற்பட உதவும்.
பூதாச்சிறையன்
என்பது இருமல், வாதம் பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களைப் போக்கும்.
பெண்கள் பயன்படுத்தி வரும் மருந்துகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த பச்சை கற்பூரத்தை உணவில்
சேர்த்தால் பூஞ்சைகள் பிடிக்காது. அந்த காலத்தில் உணவுகள் கெட்டு போகாமல் இருக்க
இதைத்தான் செய்தார்கள். கோயில் தீர்த்தங்களிலும் இந்த பச்சை கற்பூரம் இருக்கும்.
இந்தப் பொருள் அலர்ஜி , சைனஸ்
பிரச்னைகளைத் தீர்க்கும்.
பச்சை கற்பூரம்
சளி தொல்லை மற்றும் சுவாச கோளாறுகளை
குணப்படுத்தும் தன்மை கொண்டது.
சிறந்த நறுமணம் கொண்ட பச்சை கற்பூரத்தை
ஒரு துணியில் அல்லது கை குட்டையில் முடிந்து நுகர்ந்தால் சளி பிடித்தல் மற்றும்
மூக்கடைப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இதே பக்குவத்தை செய்வது ஒற்றை தலைவலி, வாயு , அஜீரணம் மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவைகளுக்கும் நல்ல
நிவாரணம் தருகிறது.
இதை வீட்டில் வைத்திருந்தால் காற்றில்
பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியமானது. கால் பாத வெடிப்பு
உள்ளவர்கள் பச்சை கற்பூரத்தை தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும். இந்த பச்சை
கற்பூரம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் இளமையையும் பாதுகாக்கிறது.
பச்சைக் கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை
உருவாக்கும். நல்ல எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை மேலோங்கச் செய்யும்.
பாக்டீரியாக்களை அழிக்கச் செய்யும்.
இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது .அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்களை குணமாக்க
பச்சைக் கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும். சேற்றுப்புண் உள்ள இடத்தில்
தேங்காய் எண்ணெயுடன் பச்சைக் கற்பூரத்தை கலந்து பூசி வர சேற்றுப்புண் குணமடையும்.
வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதைத் தடுக்க சந்தனத்துடன் சிறிது
பச்சைக் கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதைத் தடுக்கலாம்.
பல் வலி உள்ளவர்கள் கிராம்புடன்
கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.
குளவி கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். காயம் ஏற்பட்ட
இடத்தில் கற்பூரத்தை தடவி வந்தால் விரைவில் குணமடையும்.
சிறிது கற்பூர எண்ணெய்யை தலையணையில்
இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்கச் செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை
பெறலாம். இது உடலை குளிர்ச்சிப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக்
கலந்து தலையில் தடவினால் தலைவலி விரைவில் நீங்கும். ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை
பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட, ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த தீர்வு
கிடைக்கும்.
தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர
எண்ணெயை தடவி வர குணமாகும். தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து
தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : நுகர்ந்தாலே மருத்துவப் பலன்களை அள்ளித் தரும் பச்சை கற்பூரம். - குறிப்புகள் [ ] | Welfare : Green camphor has medicinal benefits when consumed. - Tips in Tamil [ ]