சூரியக்குடும்பம் (SOLAR SYSTEMS)

கோள்கள், ஏழு கண்டங்கள், பெருங்கடலகள்

[ TNPSC பாட குறிப்புகள் ]

Solar Systems - Planets, seven continents, oceans in Tamil

சூரியக்குடும்பம் (SOLAR SYSTEMS) | Solar Systems

சூரியனும், அதனைச் சுற்றிவரும் அமைத்துப் பொருள்களும் சேர்ந்து இருக்கும் அமைப்பு சூரியக்குடும்பம் ஆகும். நமது சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும், நிலவுகளும், சிறு கோள்களும் வால் மீன்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ என்பன ஒன்பது கோள்களாகும். சூரியன் மட்டுமே ஒளியை உமிழ்கிறது. நிலவு உள்ளிட்ட மற்ற அனைத்தும் சூரி ஒளியை எதிரொளிக்கின்றன.

சூரியக்குடும்பம் (SOLAR SYSTEMS)

சூரியனும், அதனைச் சுற்றிவரும் அமைத்துப் பொருள்களும் சேர்ந்து இருக்கும் அமைப்பு சூரியக்குடும்பம் ஆகும். நமது சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும், நிலவுகளும், சிறு கோள்களும் வால் மீன்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ என்பன ஒன்பது கோள்களாகும். சூரியன் மட்டுமே ஒளியை உமிழ்கிறது. நிலவு உள்ளிட்ட மற்ற அனைத்தும் சூரி ஒளியை எதிரொளிக்கின்றன.

கோள்களை அவற்றின் அமைப்பைக் கொண்டு பாறைக் கோள்கள் வாயுக் கோள்கள் என இருபிரிவுகளாகப் பிரிக்கலாம். புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய கோள்கள் சிறிய உருவத்துடன் பெருமளவு பாறைகளையும் சிறிதளவு வாயுக்களையும் கொண்டுள்ளன.

எனவே இக்கோள்கள் யாவும் பாறைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. வியாழன், சனி, யூரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கோள்கள் பெரிய உருவத்துடன் பெருமளவு வாயுக்களையும் சிறிதளவு பாறைகளையும் கொண்டுள்ளன. எனவே இக்கோள்கள் யாவும் வாயுக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.

கோள் ஒன்றினைச் சுற்றிவரும் சிறிய பொருளை நிலவு என்கிறோம். புதன் மற்றும் வெள்ளி கோள்களைத் தவிர மற்ற அனைத்துக் கோள்களுக்கும் நிலவுகள் உண்டு. நமது புவிக்கு ஒரு நிலவு இருக்கிறது.

சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் என்ற கோளாகும். ஒன்பது கோள்களில் மிகச் சிறியது புதன் கோள் ஆகும். வியாழன் மற்றும் சனிக் கோள்கள் மிகப் பெரியவை. சூரியனுக்கு வெகு தொலைவில் புளூட்டோ உள்ளது.

கோள் ஒன்றிலிருந்து உடைந்து போன சிறு பகுதி சூரியனைச் சுற்றி வருகிறது. அதற்கு சிறு கோள் (Asteroid) என்று பெயர். திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் வால்மீன் (Comet) எனப்படும். இதற்கு வால் போன்ற அமைப்பு உண்டு. வால்மீனும் சூரியனைச் சுற்றி வருகிறது.

 

கோள்கள்

புதன்

சூரியனுக்கு மிக அருகில முதல அமைவிடத்தில் காணப்படுவது புதன் கோளாகும். ஆகையால் இதன் பகல் நேர வெப்பநிலை 290 டிகிரி செல்சியஸ் வரை உயருகிறது. இந்த வெப்பநிலை புவியில் நிலவும் அதிபட்ச வெப்பநிலையை விட ஏறக்குறைய ஆறு மடங்கு அதிகமானது. அதுபோலவே இரவில் - 1700 செல்சியஸ் வரை வெப்பநிலை குறைகிறது.

புவியைப் பாதுகாக்கும் காற்றுமண்டலம் போல ஒரு அமைப்பு இக்கோளில் இல்லாத காரணத்தினாலேயே பகலில் கிடைக்கும் வெப்பத்தைத் தன்னிடத்திலேயே தக்க வைத்துக்கொள்ள இக்கோளால இயலவில்லை. சூரிய குடும்பத்திலேயே மிக விரைவாக சூரியனை வலம் வருவது புதன் ஒன்றே என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி

புதன் கோளுக்கு அடுத்து சூரியனிடமிருந்து இரண்டாவது அமைவிடத்தில் காணப்படுவது வெள்ளிக் கோளாகும். இக்கோளில் அதிபட்சமாக 480 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை காணப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகமிக அதிக அளவு வெப்பநிலையைக் கொண்ட கோள் இதுவேயாகும். மேலும் நம் புவிக்கு அருகாமையில் அமைந்திருப்பதினால் கிழக்கு வானத்தில் விடியற்காலையில் வெள்ளியை உருக்கியது போன்ற பேரொளியுடன் இக்கோள் காட்சியளிக்கும். எனவேதான் இக்கோள் "விடிவெள்ளி” எனவும் அழைக்கப்படுகின்றது. அதுபோலவே அந்திவேளையில் மேற்கு வானத்தில் பேரொளியுடன் இக்கோள் காட்சியளிக்கும். அப்பொழுது இக்கோள் “மாலை நட்சத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. சூரிய குடும்பத்தில் இக்கோள் மட்டுமே கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலுகின்றது.

புவி

புவி சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்தில் அமைந்துள்ளது. ஏனைய கோள்களுடன் ஒப்பிடும் போது புவிக்கோளம் சூரியனிடமிருந்து சரியான தொலைவில் அமைந்துள்ளது. ஆதலால் உயிரினங்கள் தோன்றி வளரத் தகுந்த வெப்பநிலை நம் புவியில் நிலவுகின்றது. புவியின் மொத்தப்பரப்பில் 29 சதவீதம் நிலமும் 71 சதவீதம் நீரும் காணப்படுகிறது. உலகின் ஏழு கண்டங்களும் நான்கு பெருங்கடல்களும் இப்பரப்பில் தான் அமைந்துள்ளன.

ஏழு கண்டங்கள்

1. ஆசியா

2. ஆப்பிரிக்கா

3. வட அமெரிக்கா

4. தென் அமெரிக்கா

5. ஐரோப்பா

6. அண்டார்டிக்கா

7. ஆஸ்திரேலியா

 

பெருங்கடலகள்

1. பசிபிக் பெருங்கடல்,

2. அட்லாண்டிக் பெருங்கடல்

3. இந்தியப் பெருங்கடல்

4. ஆர்க்டிக் பெருங்கடல்

புவியைச் சுற்றிக் காற்று மண்டலம் ஒரு போர்வை போல அமைந்துள்ளது. இக்காற்று மண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜனும், 21சதவீதம் ஆக்ஸிஜனும், 1 சதவீதம் கரியமிலவாயு உட்பட மற்ற வாயுக்களும் உள்ளன. இவற்றைத் தவிர நீராவியும் தூசுகளும் காற்று மண்டலத்தில் காணப்படுகின்றன.

புவியில் நிலமும், நீரும், காற்றும் உகந்த வெப்பநிலையும் அமைந்திருப்பதினால் உயிரினங்கள் இங்கு உருவாகிப் பெருகுகின்றன. இதனால் புவிக்கு உயிர்க்கோளம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சூரிய குடும்பத்தில் வேறு எந்த ஒரு கோளிலும் உயிரினங்கள் கிடையாது.

செவ்வாய்

நமது புவிக்கு அடுத்து சூரியனிடமிருந்து நான்காவது அமைவிடத்தில் காணப்படுவது செவ்வாய்க் கோளாகும். சூரியனிடமிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் இக்கோளில் பகலில் - 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இரவில் -101 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவுகிறது. இக்கோளில் வறண்ட ஆறுகள், செயலிழந்த எரிமலைகள், பாறைகள் நிறைந்த பாலைவனங்கள் மற்றும் பனி மூடிய துருவங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தோற்றங்கள் யாவும் புவியில் நாம் காணும் நிலத்தோற்றங்க ளை நினைவூட்டுகின்றன. இருப்பினும் புவியில் காணும் செழிப்பு இக்கோளில் இல்லை எனலாம். இக்கோளில் எல்லாப்பகுதியிலும் இத்தகைய வறண்ட நிலமே காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் செவ்வாய்க் கோளில் காணப்படும் பாறைகளிலும் மண்ணிலும் இரும்பு ஆக்ஸைடு நிறைந்துள்ளது.

இக்கோளில் மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து மாதக்கணக்கில் வீசுவதினால் பெருமளவில் புழுதிப் படலத்தைத் தோற்றுவிக்கிறது. இக்கோள் சிவந்த நிறத்துடன் காட்சியளிப்பதற்கு இப்புழுதிப்படலமே காரணமாக உள்ளது எனவும் விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வியாழன்

சூரியனிடமிருந்து ஐந்தாவது அமைவிடத்தில் காணப்படுவது வியாழன் கோளாகும். இக்கோள் சூரியனிடமிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் மிகக் குளிராக உள்ளது. சூரிய குடும்பத்தில் அளவில் மிகமிகப் பெரியது வியாழன் கோளாகும். இருப்பினும் சூரியனுடன் ஒப்பிடும்போது வியாழனின் உருவம் பத்தில் ஒரு பங்கு மட்டுமேயாகும். இக்கோளின் அச்சு ஏறக்குறைய செங்குத்தாக உள்ளது.

செங்குத்து கோண அளவிலிருந்து 2,0 மட்டுமே சாய்ந்த நிலையில் வியாழன் தனது அச்சில் சுழல்வதால் புவியில் காணப்படும் பருவகாலங்கள் இங்கு கிடையாது.

சனி

சூரியனிடமிருந்து ஆறாவது அமைவிடத்தில் காணப்படுவது சனிக் கோளாகும். இக்கோள் உருவ அளவில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கிறது. சனிக் கோளத்தைச் சுற்றி ஏழு அழகிய வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்கள் பலவித நிறங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. சனிக்கோளின் காற்று மண்டலத்தில் மணிக்கு 1500 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றை வீசுகிறது.

யூரேனஸ்

சூரியனிடமிருந்து ஏழாவது அமைவிடத்தில் காணப்படுவது யூரேனஸ் கோளாகும். இதன் அச்சு 980 சாய்ந்துள்ளது. ஆதலால் ஏனையகோள்களைப் போன்று பம்பரம் போலத் தனது அச்சில் சுழலாமல் உருண்டு கொண்டு சூரியனை வலம் வருகின்றது. இக்கோளைச் சுற்றியும் வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நெப்ட்யூன்

சூரியனிடமிருந்துஎட்டாவது அமைவிடத்தில் காணப்படுவது நெப்ட்யூன் கோளாகும். இது1846ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் சூரியனை வலம் வரும் இக்கோளின் முதற் சுற்று 2010ஆம் ஆண்டில் தான் முடிவடையுமென்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புளூட்டோ

சூரிய குடும்பத்திலேயே புளூட்டோ உருவில் மிகச் சிறியது.

இக்கோள் சூரிய குடும்பத்தில் கடைசியாக அமைந்துள்ளது. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தூரத்துடன் ஒப்பிடும்பொழுது புளூட்டோ சூரியனிடமிருந்து 40 மடங்கு அதிக தூரத்தில் உள்ளது. ஏனைய கோள்களைப் போல் அல்லாமல் புளூட்டோ சில நேரங்களில் நெப்ட்யூன் பாதையில் நுழைந்து வெளியேறுகிறது. இவ்வாறு புளூட்டோ ஒருமுறை நுழைந்து வெளியேறியதால் 1979முதல் 1999 வரையிலான 20 வருடங்களுக்கு நெப்ட்யூன் சூரிய குடும்பத்தில் தற்காலிகமாக கடைசிக் கோளாக இருந்தது. புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட 1930 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை தனது நீள் வட்டப் பாதையில் ஐந்தில் ஒரு பங்கு தொலைவினை மட்டுமே அது கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புவியைத் தவிர எந்த ஒரு கோளிலும் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பது ஒரு கணிப்பு. இருப்பினும் பேரண்டத்தில் 10மில்லியனுக்கும் மேலான சூரியன்கள் இருப்பதால் ஏதாவது ஒன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கோள் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. இன்று வரை நமது சூரிய குடும்பம் மட்டுமே நிகரற்றதாக இருந்து வருகிறது. இக்குடும்பத்தில் அமைந்துள்ள கோள்களில் புதன், வெள்ளி ஆகிய இருகோள்களைத் தவிர மற்ற கோள்களுக்குத் துணைக்கோள்கள் உள்ளன.

சூரியக் குடும்பத்தில் மிக முக்கியமானதாக இருப்பது சூரியன். சூரியன் ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்று பில்லியன்

(100கோடி) விண்மீன்கள் உள்ளன. பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூடடத்தை விண்மீன் திரள்கள் (Galaxy) எனக் கூறுகிறோம். நம் விண்மீன் திரள் பால்வழித்திரள் ( Milkyway galaxy ) எனப்படுவதாகும். பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்ததே இந்த அண்டம் ( Universe)ஆகும். விண்மீன்களைப் பார்க்கும் போது,அவைகள் சதுரம் போல, எழுத்துக்கள் போல மற்றும் சில வடிவங்களில் இருப்பது போன்று நமக்குத் தெரிகிறதல்லவா? ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்மீன்கள் இருப்பதை விண்மீன் குழுக்கள் என்கிறோம், தரூஸ் மற்றும் உர்சா மேஜர் போன்றன சில விண்மீன் குழுக்களாகும்.

எரிகற்கள் (Meteors)

பாறைத்துண்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் நேரத்தில் சில புவியின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் வந்துவிடுகின்றன. அவ்வாறு புவியை நோக்கி விழும் பாறைத்துண்டுகளில் சில வளிமண்டலத்தை ஊடுருவும் போது உராய்வின் காரணமாக எரிந்து விடுகின்றன. எரிந்து விழும் இப்பாறைத் துண்டுகளே “எரிகற்கள்” என அழைக்கப்படுகின்றன.

வீழ்கற்கள் (Meteorites)

புவியை நோக்கி விழும் பெரிய பாறைத்துண்டுகளில் சில புவியின் வளிமண்டலத்தை மிக வேகமாக ஊடுருவுகின்றன. அப்பொழுது ஏற்படும் உராய்வால் அவை முழுமையாக எரிந்து விடுவதில்லை. எரியாத பகுதிகள் புவியின் மேற்பரப்பில் வீழ்கின்றன. இவ்வாறு வேகமாக விழும் இத்தகைய பாறைத்துண்டுகள் “வீழ்க் கற்கள்” என அழைக்கப்படுகின்றன. இவை புவியின் மேற்பரப்பில் மிகப்பெரிய பள்ளங்களை உருவாக்குகின்றன.

வால்நட்சத்திரம் ( Comet)

வால் நட்சத்திரங்கள் யாவும் புளூட்டோ கோளுக்கு அப்பாலிருந்து வியாழனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை நோக்கி வருகின்றன. அங்கு நிலவும் மிகத் தாழ்ந்த வெப்பநிலையால் வாயு உறைந்து போகின்றது. அவ்வாறு உறையும் பொழுது சிறிய பாறைத்துண்டுகளையும் உலோகங்களையும் தன்னுள் இறுக்கிக் கொள்கிறது. இவ்வாறு உறைந்த வாயுக்கள் 'பனிப்பந்துகள்' என அழைக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு பனிப்பந்து சூரியனுக்கு அருகில் வரும் பொழுது அதனுள் உறைந்துபோன வாயுக்கள் சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றன. பனிப்பந்திலிருந்து வெளியேறும் வாயுக்கள் சூரிய வெளிச்சத்தில் ஒளிருகின்றன, இப்பகுதி 'கோமா' என அழைக்கப் வால் நட்சத்திரம் படுகிறது. கோமாவிலிருந்து தூசுகள் சூரிய கதிர்வீச்சினால் வெளியே தள்ளப்படுகின்றன. இந்தத் தூசுகள் சூரியனிலிருந்து வீசும் சூறாவளிக் காற்றால் வெகுதொலைவிற்கு நகர்த்தப்படுகின்றன. இவ்வாறு நகரும் இந்த தூசுப்படலமே வால் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதுவே வால் நட்சத்திரம் எனப்படும்.

ஹேலி வால் நட்சத்திரம் ( Halley,s Comet)

எட்மாண்ட்ஹேலி என்பவர் 1682 ஆம் ஆண்டு பார்த்த வால்நட்சத்தி ரம் ஹேலி வால்நட்சத்திரம் என அனைவராலும் அழைக்கப்படுகின்றது.

இது 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் என ஹேலி கருதினார். அதன்படி 1758 ஆம் ஆண்டு இந்த வால்நட் சத்திரம் தோன்றியது. இதைக் காண எட்மாண்ட் ஹேலி அப்பொழுது உயிருடன் இல்லை.

மீண்டும் 1986 ஆம் ஆண்டு இந்த நட்சத்திரம் தென்பட்டது. இனி எதிர்காலத்தில் 2062 ஆம் ஆண்டு தென்படும் எனக் கருதப்படுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

TNPSC பாட குறிப்புகள் : சூரியக்குடும்பம் (SOLAR SYSTEMS) - கோள்கள், ஏழு கண்டங்கள், பெருங்கடலகள் [ ] | TNPSC Course Notes : Solar Systems - Planets, seven continents, oceans in Tamil [ ]