பெண்ணின் அருமை

குறிப்புகள்

[ பெண்கள் ]

The beauty of a woman - Tips in Tamil

பெண்ணின் அருமை | The beauty of a woman

கணவனை இழந்த மனைவியை விடவும்... மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்துப் போகிறான். காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள். ஆனால்... மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை நோய்வாய்படும் போது தானும் நோகும் தாயை என பலரை இழக்கிறான்.

பெண்ணின் அருமை...

 

கணவனை இழந்த மனைவியை விடவும்...

மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்துப் போகிறான்.

 

காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.

 

ஆனால்...

மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை நோய்வாய்படும் போது தானும் நோகும் தாயை என பலரை இழக்கிறான்.

 

ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?

 

கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்

ஊர், பெயர், முகவரி, வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக் கொள்ள முன் வருகிறாள்.

 

தான் கண்ட கனவுகள் அனைத்தையும் கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.

 

வீட்டின் வேலைக்காரியாக, சலவைக்காரியாக, சமையல் செய்பவளாக, கணக்குப் பிள்ளையாக, பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்.

 

அவள் இருக்கும் வரை இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதே இல்லை.

 

பொன்னின் அருமை அதைத் தொலைத்த பின் தான் தெரியும்.

பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் .

 

கவிப்பேரரசு அருமையாக எழுதியிருப்பார்

” காதலி அருமை பிரிவில்

மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை கோடையிலே”

 

ஆம்..

மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஆடவன் உணர்கிறான்.

 

கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசைப் போடுவார்கள். நல்ல நினைவுகளைக் கூறுவார்கள்.

மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக் கூறி புலம்புவார்கள்.

 

இன்னும் நல்லா கவனிச்சிருக்கலாம் சார் அவளை..

இப்டி சரியா பாக்காமல் விட்டுட்டேனே சார். என்று அழுதுப் புலம்புவார்கள்.

 

கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணத்தையும் மன வலிமையும் கிடைத்து விடுகிறது

 

ஆனால்...

மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதைப் போன்று தான் இருக்கிறார்கள்.

 

தனது சுக துக்கம் இன்ப துன்பம் தோல்வி வெற்றி அனைத்திலும் கூடவே இருந்து தன்னைச் சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும் போது ஒவ்வொரு ஆடவனும் இறந்தே தான் விடுகிறான்.

 

அதற்குப் பிறகு அவனுக்கென்று எதையும் பெரிதாய் அவன் யோசிப்பதில்லை.

 

மனைவியை அவள் உயிரோடு இருக்கும் போதே முடிந்தவரை நேசிப்போம்.

 

அவள் இல்லாத போது அசைப் போடவும் புசித்து வாழவும் நினைவுகள் தேவையன்றோ…

 

இருக்கும் வரை மதியுங்கள்...

போன பின்பு புலம்பிப் பயனில்லை...

ஒரு ஆண் தன்னுடைய இளமைக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து அவருடைய அம்மா...

ஒரு ஆண் தன்னுடைய கடைசிக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து அவருடைய மனைவி மட்டும் தான்...

 

தாய்க்குப் பின் தாரம்

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம் 

பெண்கள் : பெண்ணின் அருமை - குறிப்புகள் [ ] | Women : The beauty of a woman - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்