குடும்பம் நல்லபடி நடக்க ஆண் நல்லவனா இருக்கணும், பெண் புத்திசாலியா இருக்கணும்
நல்ல பெண்ணா இருப்பதின் அவசியம்?
குடும்பம் நல்லபடி நடக்க
ஆண் நல்லவனா இருக்கணும், பெண் புத்திசாலியா இருக்கணும்
எத்தனை மோசமான பெண்ணாக
இருந்தாலும் ஒரு நல்ல ஆண் கிடைத்தால் அவனை வாழ்நாள் முழுக்க ஆதிக்கம் பண்ணி தனக்கு
கட்டுபடுத்தி வைத்துக்கொள்ளனும் என தான் நினைப்பாள்.
சூர்ப்பநகைக்கு கூட
ராமனை தான் பிடித்தது. அவனை கல்யாணம் பண்ணியிருந்தால் ராமன் நல்லா இருப்பானோ
இல்லையோ, அவள் நல்லா இருந்து
இருப்பாள் :-)
ஆனால் சீதைக்கு ஒப்பான
பத்தினி என சொல்லப்படும் மண்டோதரிக்கு அத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் தன் கணவனை
அவளால் கட்டுபடுத்த முடியலையே?
அவன் வீழ்ந்தபின் அவன்
மேல் விழுந்து அழதான் முடிந்தது
அவள் சாமர்த்தியமானவளா
இல்லாம நல்லவளா இருந்துட்டாள். அதற்கான பெருத்த விலையை கொடுத்தாள்
பொண்ணுங்க குடும்ப
அரசியலில் கைதேர்ந்தவங்களா , டெர்ரர் பீசா இருந்தால் தான் குடும்பம் நல்லா இருக்கும், அவங்களும் நல்லா
இருப்பாங்க
ஒரு ஆண் சம்பாதிக்க
ஆரம்பிச்சால் அவனது மத்திம வயதில் மற்ற ஆண்கள் அவனை புகழ்ச்சியால் சுரன்ட
பார்ப்பார்கள். பெண்கள் காமத்தால் சுரண்ட முனைவார்கள்.
சரவணபவன் அண்ணாச்சி
நிலைமைதான் அதன்பின்
எத்தனை வலுவான ஆண்
என்றாலும் புகழ்ச்சிக்கும், காமத்துக்கும் தப்பமுடியாது. அவனது மனைவிதான் அப்ப அவனையும், குடும்பத்தையும்
பாதுகாக்கணும்
தற்காத்துத் தற்கொண்டாற்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண்
மணக்குடவர் உரை:
தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும்
படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள். இது பெண்களில்
சிறந்தாளது இலக்கணம் கூறிற்று.
(ராமாயண உதாரணம் எளிமையா
புரியும்ணு சொன்னது. அதை வெச்சுட்டு பின்னூட்டங்களில் மல்லுகட்டிட்டு இருக்ககூடாது :-)
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
பெண்கள் : நல்ல பெண்ணா இருப்பதின் அவசியம்? - குறிப்புகள் [ ] | Women : The necessity of being a good woman? - Tips in Tamil [ ]