வணக்கம் ஒரு விழிப்புணர்வு செய்தி அனைவரும் அவசியம் படித்துப் பாருங்கள்,
மரம் நாட்டின் வரம்? எப்படி?
வணக்கம் ஒரு விழிப்புணர்வு செய்தி அனைவரும் அவசியம் படித்துப் பாருங்கள்,
விரிவான சாலைகள்
வீணாகிப்போன மரங்கள் சாலை எங்கும் அனல் காற்றுகள் மரம் இல்லாதது மனிதனுக்கு
புரியவில்லை ஏனென்றால் ஏசி காற்றில் வாகனத்தில் உள்ளே இருப்பதால் மனிதனுக்கு எது
தேவை எது தேவையில்லை என்பதை மனிதன் சிந்திக்காத வரை சிலர் அதை லாபமயமாக
உருவாக்குகிறார்கள்,
ஏசி அமோக விற்பனை ஒசியாக
நோய் வாங்குவதற்கு ஏசி போடுகிறார்கள், வீட்டில் மழைநீரை சேமிக்க மறந்துவிட்ட மனிதர்கள்
எந்திரத்தை வைத்து தண்ணீரை தேடுகிறார்கள் பல லட்சம் செலவு செய்து நிலத்தடி நீர்
எடுப்பதை விட சில ஆயிரம் செலவு செய்து மழை நீரை சேமித்தால் அது உங்களுக்கு தேவையான
தண்ணீரை தரும் இல்லையென்றால் மனிதர்கள் கடைசிவரை கண்ணீரோடு தான் இருக்க வேண்டும்
அது கூட வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,
மழை வரும் போது அதிக மழை
வருகிறது என்று கவலைப்படுகிறோம் பனி இருக்கும் போது அதிகமான பனி இருக்கிறது என்று
கவலைப்படுகிறோம் வெயில் இருக்கும் போது அதிகமாக வெயில் இருக்கிறது என்று
கவலைப்படுகிறோம்,
இந்தப் பருவநிலை
மாற்றங்களை நாம் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் எல்லாம் இயல்பானது இல்லை
என்று புரியும்,
நம்முடைய உணவு முறை
மாறிவிட்டது உறக்கம் முறை மாறிவிட்டது வேலை செய்யும் முறை மாறிவிட்டது மனிதர்களோடு
பேசும் முறை கூட மாறிவிட்டது இப்படி எல்லாம் மாறும் போது பருவநிலை மட்டும் மாறாமல்
இருக்குமா?
இவை எல்லாம் ஒரு ஒரு
மனிதனும் தன் சுய ஆசைக்காக பல்வேறு விஷயங்கள் அத்தியாவசிய தேவை மிஞ்சும் பணத்தை
சம்பாதித்து வைத்திருப்பது நல்ல குணத்தை இழந்து இருப்பது இவையெல்லாம் மாற வேண்டும்,
வளரும் பிள்ளைகளுக்கு
மரங்களில் வரலாறுகளை சொல்ல வேண்டும் நம்முடைய பகுதி தன் வீடு தன் குடும்பம் தன்
ஊரின் வரலாறுகளை சொல்ல வேண்டும்,அதோடு மாதம் ஒரு முறையாவது எங்கு காலி இடம் உள்ளதோ அந்த இடத்தில்
மரக்கன்று வைக்க வேண்டும் அது ஆக்கிரமிப்பாக உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,
நீர் நிலைகளை சரியான
முறையில் பராமரிக்க வேண்டும் அதேபோல் இடம் வாங்குவது தேவைக்கு ஏற்றவாறு
வாங்குங்கள் தேவையில்லாமல் வாங்கி வைப்பது உங்களை நீங்களே அழித்துக் கொள்ளும்
செயல்,பல இடங்கள் விவசாயம்
செய்ய முடியாமல் காலியாக இருக்கும் இடத்தை பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது,
அதனால் தான் சொல்கிறேன்
தேவைக்கு ஏற்ற இடங்களை வாங்குங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்ய விரும்புபவர்கள்
லாபத்துக்காகவும் நஷ்டத்துக்காகவும் இல்லாமல் விவசாயம் செய்யும் இடங்களில்
இன்வெஸ்ட்மென்ட் செய்யுங்கள் இது மண்ணையும் காப்பாற்றும் மனிதன் சாப்பிடும்
உணவையும் காப்பாற்றும்,
இவை அத்தனையும் நமக்கு
தெரியாதா என்றால் தெரியும் ஆனால் கடந்து செல்கிறோம் எத்தனை நாள் மறந்து செல்ல
போகிறோம் இனியாவது உணர்ந்து வாழ்வோம் உலகம் அறியல்ல உனக்குள் இருக்கும் ஆற்றலை
அறிய உணர்ந்து வாழ்வோம் எல்லோரும்,
தேவைகளை உணருங்கள்
தேவையில்லாததை குறையுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்
குப்பையாக இருக்கும்
எண்ணங்களை எரித்து விடுங்கள் தேவையில்லாத குப்பைகளை வாங்காமல் வாழ்ந்து விடுங்கள்,வாழ்க்கை எப்போதும்
அழகானது அதை நாம் மட்டும் ரசிப்பதோடு நம் தலைமுறையும் ரசிக்க வேண்டும் என்று
சிந்தித்து வாழுங்கள்,
வாழ்க பிரபஞ்சம்!
வளர்க நல் எண்ணம்
மற்றும் செயல்பாடுகள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விழிப்புணர்வு: தகவல்கள் : மரம் நாட்டின் வரம்? எப்படி? - குறிப்புகள் [ ] | Awareness: Information : Tree is the country's boon? How? - Tips in Tamil [ ]