
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகத்தின் தேவை என்ன?
ஆன்மீகம் என்றால் என்ன?
நம்மில் அனைவரும் அடிக்கடி விவாதிக்கப்படும் தலைப்புகளில்
ஒன்று ஆன்மீகம் ஆகும். விவாதங்கள் தான் கேள்விகளாக உருவாகி வருகின்றன: உதாரணமாக:
ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகத்தின் தேவை என்ன?
ஒருவர் எவ்வாறு ஆன்மீக வாழ்வு வாழ முடியும்?
இந்த மாதிரியான கேள்விகள் நமது உள்ளத்தில் எழுகின்றன.
ஆன்மீகத்தை அறிவு சார்ந்த ஒரு ஞானம், அல்லது இறைவனோடு சேரக்கூடிய கலை அல்லது இறைவனோடு இணைய ஒரு
கோட்பாடு கொண்ட கட்டுப்பாடு  என பலவிதமாக வரையறுக்கலாம்.
ஆகையால் ஆன்மீகம் என்பது நம்மை நமது வாழ்க்கையோடு இறைவனை ஈடுபடுத்தி நமது வளர்ச்சியைப்
உயர்த்த ஊக்குவிக்கிறது. ஆன்மீகத்திற்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் வேறுபாடு
இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கோட்பாட்டுக்கான ஆன்மீகம் என்பது ஒரு
நபரை ஆன்மீக வாழ்க்கையை தெரிந்து வாழ்க்கை நடத்த உதவுகிறது. இறைவனோடு ஒன்றாக இணைந்து
வாழும் வாழ்க்கையை வாழ்வதே ஆன்மீகத்தின் நோக்கம் ஆகும். இப்போது நமது மனதில்
மற்றும் சில கேள்விகள் வரலாம்: நாம் ஏன் ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும்? என்றும் நாம் ஏன் கடவுளோடு கலந்து ஒரு வாழ்க்கையை நாம் வாழ
வேண்டும்? என்றும் நமக்குள் எழக் கூடிய கேள்விகளுக்கு பதில் நாம் மகிழ்ச்சியை
தேடும் எந்த ஒரு செயலுமே ஆன்மீகத்தின் கோட்பாடுகளுக்கு உள்ளேயே இருக்கும். எல்லா
தலைமுறையினரும் சொல்லாவிட்டாலும், மனிதர்கள்
மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என இடைவிடாது தேடி கொண்டே தான் இருக்கிறார்கள்; இன்னும் சிலர் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத்
தேடுகிறார்கள். தற்காலிக மகிழ்ச்சியை தரும் பொருள்களையும், உணர்ச்சிகளையும் நாடிச் செல்கிறார்கள். இவ்வாறு இவ்வுலக
பொருள்களை நாடிச் செல்வதாலோ அல்லது புதிய பொருள்களை கண்டுபிடிப்பதன் மூலமாகவோ
மனிதர்கள் உண்மையில் திருப்தி அடைவதில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
அதாவது,
தற்கால மகிழ்ச்சி, சந்தோசம் என்னவென்றால் நிரந்தர
மகிழ்ச்சியை தேடுவதை விட்டு அவர்கள் அப்போதைக்கு மகிழ்ச்சியை தேடி அனுபவவிப்பதே மிகப்
பெரியக் காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு  பரிச்சையில்
வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சி, திருப்தி கொடுக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி
தான் நம் வாழ்நாள் முழுவதும் அளிக்குமா என்றால் அது கேள்விக் குறியே?. இதேபோல், ஒரு தேர்வில் தோல்வி அடைவது நம்மை சோகமாகவும்
அதிருப்தியாகவும் ஆக்குகிறது. ஆனால் அது நம் வாழ்நாள் முழுவதும் சோகமாகவும்
அதிருப்தியயாகவும் இருக்க வைப்பதில்லை. நம்மை நிரந்தர மகிழ்ச்சியாக வைத்திருக்கும்
ஒன்றே ஒன்றுதான். அது என்ன? இது
ஹெடோனிசம் மற்றும் எபிகியூரியனிசம் போன்ற தத்துவங்களுக்கு வழிவகுத்தது. இது ஒரு
நுகர்வோர் கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது. சந்தோசம் என்பது உடனடி திருப்தியை கொடுக்கிறது
என்பதை மனிதனுடைய சில செயல்கள் வெளிப்படுத்துகிறது. நம் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தமும் கொடுக்க முடியாது.
இன்பம்,
சக்தி, செல்வம்
மற்றும் புகழ் ஆகியவற்றைப் பின்பற்றிய பல நபர்களின் பரிதாபகரமான வாழ்க்கை நமக்கு
முன் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. நம் அனைவருக்கும் உண்மையிலேயே அர்த்தத்தை
கொடுப்பது அன்பு, அரவணைப்பு,
சமத்துவ நீதி ஆகியவை ஆகும். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நிபந்தனையின்றி
நேசித்தார். இந்த அன்பே சீடர்களின் வாழ்க்கையை குறிப்பாக அர்த்தமுள்ளதாக மாறச்
செய்தது. அந்த நிபந்தனையற்ற அன்பை ஒருவர் மறுபரிசீலனை செய்யும்போது தான்
அர்த்தத்தின் முழுமை வரும். அன்பினால் நிறையப்பட்ட மனிதனின் நிறை வாழ்வு மற்றும்
உண்மையான திருப்தி, தளர்வு அல்லது பதற்றம் போன்ற அளவுகோல்களால் அளந்து விட
முடியாது. அவை அனைத்திற்கும் நம் அன்றாட வாழ்க்கையில் இடம் உண்டு. ஆனால் அவை
நிறைவேறிய வாழ்க்கையின் ஆதாரங்களாக இருக்க முடியாது. இந்த “நிபந்தனையற்ற அன்பு”
தான் கடவுள். எனவே, உலகளாவிய
பொருளைத் தேடுவது கடவுளில் முடிகிறது. கடவுளில், சத்தியத்திற்கான மனித தேடலை திருப்திப்படுத்தும் உண்மை
உள்ளது; கடவுளில்
நம்பிக்கை ஒவ்வொரு மனித விரக்தியையும் சமாளிக்கிறது; கடவுளில் நாம் ஒவ்வொரு தனிமையிலும் மற்றும் ஏழ்மைலும் மன
நிம்மதி அடைவோம். பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் வித்தியாசம்  என்ன என்ற கேள்வி அனைவருமே கேட்கத் தோணும்.
பக்தி மார்க்கம் என்பது இறைவன் மேல் அன்பு வைத்து எம் எண்ணங்களை வெளிமுகமாகச்
செலுத்தி அவரவர் சார்ந்துள்ள மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு சிலை வழிபாட்டை, மத
வழிபாட்டை, மத கட்டுப்பாடுகளை
மேற்கொள்ளுவது. இதுவே பக்தி வழிபாடு என அழைக்கப்படும். சித்தர்கள் பார்வையில் இது
புறவழிபாடு என அழைக்கப்படுகிறது. 
ஆன்மீகம் என்பது மனதை, எண்ணங்களை உட்புறமாகச் செலுத்தி தான் யார்? என அறிவது. சித்தர்கள் இதனை அகவழிபாடு என அழைக்கிறார்கள்.
இது இறைவனை தன்னுள் தேடும் வழிமுறையாகும். இவர்களுக்கு மீண்டும் பிறப்பில்லை, இதனால் இவர்களுக்கு மரணமும் இல்லை. இவ்வாறு ஞானம்
பெறுவதட்குரிய வழிமுறையே யோகம், தியானம்
ஆகும். இதுவே ஆன்மீக மார்க்கமாகும். 
“மதத்தை தேடுபவனுக்கு கடவுள் தெரியாது
கடவுளைத் தேடுபவனுக்கு மதம் தெரியாது“
யோகம், யோகமார்க்கம்
என்றால் என்ன? பக்தி என்றால் என்ன? நாம் ஏன் யோகம் பயிலவேண்டும்? கோவில்களை சென்று வழிபட்டால் போதாதா? 
பக்தி என்பது புற வழிபாடாகும். புறக் கணங்களால் இறைவனைத்
தேடுவது. மனிதன் மனிதனாக வாழ மதங்கள் போதிக்கின்றன. அகத்திய மாமுனிவர், திருமூலர், அவ்வையார், வள்ளலார், ரமண
மகரிஷி போன்ற ஞானிகள் நமக்கு ஞான மார்கத்தைப் போதித்து தாமும் கடைப்பிடித்து
முத்தி அடைந்தவர்கள் ஆவார்கள். 
தனது சிந்தையில் தீர்த்தம் உணர்ந்து – (மூலாதாரத்தினில்
அக்கினியாக இருக்கும் குண்டனி சக்தியானது சாதனையின்போது சிரசை அடையும்போது அது
குளிர்ச்சி அடைந்து அமுதம் சுரக்கும்) தமது கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தம்மை
அலங்கரித்து ஆலயம் சென்று மதக் கடவுளை, சிலை வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் பக்தர்களாவார்கள். யார்
சாமி?
யார் கடவுள்? கடவுள் எங்கே இருக்கிறார்? என்று தேடிக் கொண்டிருப்பவர்கள் “சாமியார்?” ஆவார்கள். இதுவே ஞான மார்க்கமாகும். இதுவே ஆன்மீக மார்க்கம்
எனவும் அழைக்கப்படும். ஆன்மீக மார்க்கத்தினை மேற்கொள்பவர்கள் “ஆன்மீகவாதிகள்” என
அழைக்கப்படுவர். தன்னை அறிந்து, தன்
முன் பிறவிகளை அறிந்து, தனக்குள்
இறைவனைக் கண்டறிந்து அவன் மூலம் தான் செய்த பாவங்களைப் போக்கி அந்த இறைவனுடன்
சங்கமமாவதே “ஞானம்” அல்லது “முக்தி” எனப்படும். ஞானம் அடைவதற்குரிய வழிமுறையே
“யோகம்” அதாவது யோகப் பயிற்சியாகும். தனக்குள் இறைவனைக் கண்டு அந்த ஜோதியுடன்
இரண்டறக் கலந்து முக்தி அடைந்தவர்கள் “முனிவர்கள்” என்றும் சித்தம் தெளிந்தவர்
“சித்தர்கள்” எனவும், ஞானம் பெற்றவர்கள்
“ஞானிகள்” எனவும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தம்மை ஒருபோதும் வெளிக்காட்டிக்
கொள்வதில்லை. முற்றும் திறந்தவனிடம் எவ்விதமான அடையாளமும் இருக்காது. அவர்கள்
உலகப் பற்றிலிருந்து விடுபட்டவர்கள். எவ்விதமான விருப்பு வெறுப்பும் இல்லாதவர்கள்.
உலகமக்களை துன்பங்களில் இருந்து விடுவிக்க முயல்பவர்கள்.
நாம் ஏன் யோகம் பயிலவேண்டும்? அதனால் என்ன பயன்? கோயில்கள் சென்று இறைவனை வழிபட்டால் போதாதா? என்ற பல கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. பாவம் செய்தாலும்
அவற்றை அனுபவிக்க மறுபிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் அவற்றை அனுபவிக்க மறுபிறவி
உண்டு. என்பதே விதியாகும். யோகப் பறிற்சியானது தன்னுள்ளே தேடித் தன்னை அறிந்து
தான் செய்த பாவங்களை அறிந்து அவற்றைப் போக்கி பிறவிப் பிணி அறுத்து அந்தப்
பரம்பொருளுடன் ஐக்கியமாகும் வழிமுறைகளைப் போதிக்கின்றது.
நாம் ஒரு ஊருக்குப் போவதற்கு பல வழிகள் இருக்கும். அதிலே மிக விரைவாக இலக்கை அடைவதற்குரிய மார்க்கத்தைக் கண்டறிந்து சென்றடைவதுபோல, ஞான மார்கமானது பல பிறவிகளைத் தவிர்த்து தன்னுள்ளே தேடி எங்கிருந்து வந்தோமோ மீண்டும் அந்தப் பரம்பொருளுடன் ஐக்கியமாகும் வழிமுறையாகும். நாம் கடவுள்மீது மிகுந்த பக்தி உள்ளவர்களாக இருந்து நம்பிக்கை வைத்து பல திருத்தலங்கள் சென்று வணங்கி வந்த போதும் எங்கு சென்று தேடியும் கடவுள் என்ற சக்தியை அந்த ஜோதியை எம்மால் தரிசிக்க முடியாதபோது, அந்த ஆன்மீகச் சிந்தனை தான் நமது உள்ளத்தில் விதைக்கப்பட்டுள்ளதற்கான ஆரம்ப நிலையாகும். அந்த உண்மையான உள்ளகத்து தேடலே நமக்கு ஒரு குருவை அடையாளப்படுத்தி நம்மை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்லும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம் 
ஆன்மீகம் : ஆன்மீகம் என்றால் என்ன? - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : What is spirituality? - Spiritual Notes in Tamil [ spirituality ]