ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன

குறிப்புகள்

[ பெண்கள் ]

What would you like to say to young women as a man - Notes in Tamil

ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன | What would you like to say to young women as a man

• ஆண்கள் கிட்ட கொஞ்சம் பார்த்தே பழகு. இதுல நண்பன், தோழன், பாய் பெஸ்டி, அண்ணனா பழகுறான், தம்பியா பழகுகிறானன், நல்லபையன் அப்படிங்கற சர்டிபிகேட்-லாம் வேணாம். ஆம்பளனாளே ஆம்பள தான். எங்களோட எண்ணங்கள் பூரா, பெண்களை எப்படி கவரனும்னு தான் இருக்கும். அது எங்களுடைய பயாலஜிக்கல் டிசார்டர். அதுக்காக நாங்க எல்லாருமே கெட்டவங்கனு அர்த்தம் கிடையாது. நாங்க தப்பா பேசுனா பதிலடி குடு, பயந்து ஓடாத.

ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன?

 

ஆண்கள் கிட்ட கொஞ்சம் பார்த்தே பழகு. இதுல நண்பன், தோழன், பாய் பெஸ்டி, அண்ணனா பழகுறான், தம்பியா பழகுகிறானன், நல்லபையன் அப்படிங்கற சர்டிபிகேட்-லாம் வேணாம். ஆம்பளனாளே ஆம்பள தான். எங்களோட எண்ணங்கள் பூரா, பெண்களை எப்படி கவரனும்னு தான் இருக்கும். அது எங்களுடைய பயாலஜிக்கல் டிசார்டர். அதுக்காக நாங்க எல்லாருமே கெட்டவங்கனு அர்த்தம் கிடையாது. நாங்க தப்பா பேசுனா பதிலடி குடு, பயந்து ஓடாத.

 

தல குனிஞ்சுலாம் நடக்க வேணாம். நெஞ்சை நிமித்தி நடந்து பழகு. உன் தைரியம் தான் ஒரு கட்டத்துல உன்ன காப்பாத்தும்.

 

ஒரு நிமிஷம் கண்ண திறந்து, உன்ன சுத்தி நடக்கிற விஷயங்கள உத்து பாரு. பெண்கள் இன்னும் அடிமைப்பட்டு தான் இருக்காங்க. அதிலிருந்து நீ வெளிய வரணும்னா, உன்னோட தகுதிய நீ உயர்த்திகனும்.

 

உன்னோட பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள முழுமையா படிப்புக்காக மட்டுமே அற்பணி.

 

காதல்ன்ற பேர்ல, அவசரப்பட்டு உன்னோட கன்னித்திரைய கிழிச்சிக்காத. நீ எடம் கொடுத்துட்டு அடுத்தவனை கொற சொல்லி பிரயோஜனம் இல்ல.

 

கண்மூடித்தனமா உன் அப்பனையும் ஆத்தாளயும் நம்பாத. அவங்க நீ நல்லா இருக்கணும்னு தான் நினைப்பாங்களே தவிர, உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு யோசிக்க மாட்டாங்க. இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும், குறிப்பா கல்யாணத்துல.

 

உன்னால கல்யாணம் வரைக்கும் உன்னோட காதல கொண்டு போக முடியும்னா, காதல் பண்ணு. இல்லனா மூடிட்டு சும்மா இரு. நம்பிக்கை கொடுத்துட்டு அடுத்தவன் லைஃப்ப கெடுக்காத.

 

உன்னோட கனவுகள், லட்சியங்கள், ஆசைகள் பத்தி யோசி. நமக்கு எப்போ கல்யாணம் ஆகும், கொழந்தை பெத்துப்போம், புருஷனுக்கு சோறாக்கி போடுவோம்னு யோசிக்காத.

 

உன்னோட சொந்த கால்ல நிக்க பழகு. கல்யாணம் வரைக்கும் அப்பனோட கால்லயும், கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனோட கால்லயும் நிக்க நினைக்காத.

 

கடைசியா, எதுவாயிரந்தாலும் வாழ்ந்து காட்டு. நீ செத்துட்டா மட்டும் இங்க எதுவும் முடிஞ்சிற போறது இல்ல.

 

இத நான் உனக்கு ஒரு அண்ணாவோ, தம்பியாவோ, மாமனாவோ,  இல்ல நீ நல்லா இருக்கணும்னோ சொல்லல.

 

நீயும் உயிர் தான், நானும் உயிர் தான்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

பெண்கள் : ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன - குறிப்புகள் [ ] | Women : What would you like to say to young women as a man - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்