தற்கொலை என்பது பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஒரு சிக்கலான மற்றும் பன்முகப் பிரச்சினையாகும்.
தற்கொலை ஏன் நடக்கிறது?
தற்கொலை என்பது பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஒரு சிக்கலான மற்றும்
பன்முகப் பிரச்சினையாகும். இந்த தலைப்பை உணர்திறன் மற்றும் பச்சாதாபத்துடன்
அணுகுவது முக்கியம், ஏனெனில்
இது தனிநபர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த துயரம் மற்றும்
சோகமான விளைவுகளை கொடுக்கிறது. தற்கொலைக்கு ஒரே காரணம் இல்லை என்றாலும், சில பொதுவான காரணிகள் மற்றும் அது நிகழும் காரணங்கள் பின்வருமாறு:
செப்டம்பர் 10-ஆம் நாள். உலக
தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தற்கொலைகளை தடுக்க முடியுமா? எதனால் இந்தத் துயரச்
சம்பவங்கள் ஏற்படுகின்றன? இந்த கேள்விகளை குறித்து
சிந்திக்கவும், உங்களுடைய பங்கை எப்படி பயன்படுத்தி
தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைப்பதும் ஏன் நடக்கவே கூடாது என்று சொல்வதுமே இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள்
நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிகளில்
நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, ஆசிரியராகவோ, மனைவியாகவோ
இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்கிறது
ஆய்வு.
பரீட்சையில்
தோல்வி,
அதனால் ஒரு மாணவன் தற்கொலை செய்கிறான் என்றால், அந்த சூழ்நிலையில் இருந்த மற்ற மாணவர்கள் ஏன் அந்த விபரீத முடிவை
எடுக்கவில்லை. எது அவர்களை காப்பாற்றியது?
தற்கொலைகள்
ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை
அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத
தற்கொலைகளுக்கு காரணமாகிறது.
உலகளவில் கடந்த 45
ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும்
உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய
பாட்டி, தாத்தாக்கள்
ஏன் நம் தாய் தந்தையர்கள் கூட பெரிய சுனாமியை எதிர்த்து நின்று ஜெயித்து இருப்பதை
நாம் பார்க்கத் தான் செய்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் ஒரு சிறு அலை கூட இன்றைய
தலைமுறையினரை விரக்தி அடையச் செய்து ஏன் அடித்து மரண வாசலுக்கு கொண்டுச் செல்கிறது?
உளவியல் ரீதியாக ஆய்வாளர்கள் இதை 'Resilience' என்கிறார்கள். அதாவது ஒரு பந்தை தரையில் தட்டினால், அது
மீண்டும் மேலே எழும் இதில் இன்னும் அழுத்தம் கொடுத்து தட்டும் போது விண்ணை தொடும்
அளவுக்கு சக்தியுடன் மேலே எழுகிறது. அதே மாதிரி நாம் ஒவ்வொருவர் உள்ளங்களிலும்
ஆழ்மனத்தின் உள்ளிலும் சவால்களை சமாளிக்கும் திறன், புதிய தீர்வுகளை எடுக்கும் தன்மை
நம்மில் புதைந்து கிடக்கத் தான் செய்கிறது.
தற்காலங்களில் நவீன உலகில் விண்ணில்
பறக்கும் நாம், வெறும்
கைபேசிகளையும், வெறும் கணிணிகளையும் மட்டுமே உற்ற உறவுகளாவும்,
நண்பர்களாகவும் பார்க்கிறோம். நம்மில்
ஏற்படுகின்ற சிறு சந்தோஷமான தருணங்களை கூட சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம்,
நம்முடைய துக்கங்களையும், துயரங்களையும், துரோகங்களையும்,
ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா? இன்றைய காலங்களில். நாம்
அழுதால் சாய்வதற்கு தோள் இல்லை. துணை கொடுக்க தோளும் இல்லை. நம் பிரச்சனைளை
கேட்பதற்கு கூட நேரமும் இல்லை காது கொடுத்து ஆத்மார்த்தமாக கேட்க செவியும் இல்லை. 'Blue
Whale Challenge", "Momo Challenge" என்று
குழந்தைகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் சவால்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
தன் குழந்தைகளுக்கு இல்லை
என்ற சொல்லவே கூடாது அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து
வளர்க்கும் பெற்றோர்கள் கொஞ்சம் அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும்
சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை ஏற்படுத்த தவறக் கூடாது. உங்களுடைய
ஒரு வார்த்தை அந்த ஆதரவு கை அவனுக்கு தரும் ஏகப்பட்ட நம்பிக்கை. ஒரு தகப்பன் தன்
மகனை தோளுக்கு மேல ஏத்தி இந்த உலகை காண்பிக்கிறானே ஏன் தெரியுமா? தான் பார்த்த
உலகை மட்டுமல்ல தான் பார்க்காத, தெரியாத உலகை கூட தன் மகன் கண்டு ரசிக்கத் தான்.
அப்பேற்பட்ட தந்தை தான் நம் உலகப் பெற்றோர்கள். அவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும்
ஒரு நொடி அவர்கள் சுமந்த தோளை நினையுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு உரிய உற்ற நண்பன்.
அவர்களுக்கு அப்புறம் தான் மற்ற அனைவரும். தயவு செய்து பெற்றவர்களிடம் எதையும்
மறைக்காமல் சொன்னாலே தற்கொலை எண்ணமே தலையில் ஏறாது. யாரும் மன பலவீனம் உடையவர்கள்
மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை
எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக்
கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து
விடுவதில்லை. அந்த முயற்சிகள் முறியடிக்க வேண்டும் அவ்வளவு தான். கஷ்டம் வந்தால், அது
நடந்தால், இப்படி ஆகிவிட்டால், இப்படி ஒரு பொழுதும் எண்ணாதீர்கள்! எப்படி
நடந்தாலும் என்ன? நாம் சமாளிப்போம் என்று வீறு கொண்டு நடை போடுங்கள். உண்மையாக
சொன்னால் அப்பேற்பட்ட ரகம் தான் நீங்கள். என்னத்த செஞ்சு! என்னத்த பண்ணி! என்னத்த
நடக்கப் போகுது என்று என்னத்த கண்ணையாய் போல் பேசுவதை குறையுங்கள் இன்னும் சொல்லப்
போனால் என்னத்த அப்படி எண்ணத்தை நிறுத்தி வாழ்ந்துப் பாருங்கள். அப்படிபட்ட
பட்ட உங்கள் எண்ணம் எங்கே போய் உச்சத்தை தொடப் போகுது என்று நீங்களே உணர்வீர்கள்.
தற்கொலையால் இறக்கும்
பலருக்கு மனச்சோர்வு, பதட்டம், இருமுனைக் கோளாறு,
எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறு அல்லது ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலப்
பிரச்சினைகள் உள்ளன. இந்த நிலைமைகள் மிகுந்த உணர்ச்சி வலி மற்றும் நம்பிக்கையற்ற
உணர்வுக்கு வழிவகுக்கும்.
தற்கொலை எண்ணம் கொண்டவர்கள்
பெரும்பாலும் விரக்தியின் சுழற்சியில் சிக்கியிருப்பதை உணர்கிறார்கள் மற்றும்
அவர்களின் உணர்ச்சி வலியிலிருந்து தப்பிக்க ஒரே வழி தற்கொலை தான் என்று தங்கள்
வாழ்க்கையை முடிப்பதாக நம்புகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் தீர்க்க முடியாதவை
என்றும் வேறு வழியில்லை என்றும் அவர்கள் நினைக்கலாம்.
நாம்
தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது.
மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து
விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை
மனச்சோர்வையும், தற்கொலை
எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின்
பார்வையில், தற்கொலை
முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய
மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு
தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே.
தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின்
எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.
தனிமை மற்றும் சமூக தனிமை,
ஒதுக்கி வைக்கப்படுதல், இயலாமை, விரக்தியின் உச்ச தன்மை ஆகியவை தற்கொலை எண்ணங்கள்
மற்றும் அது சம்பந்த நடத்தைகளுக்கு வழிவகுக்கும்.. சமூக ஆதரவின் பற்றாக்குறை,
ஆதரவு வார்த்தைகள், ஊக்கமளிக்கும் செயல்கள் செய்ய உதவாமை, துரோகம் நடந்தமை,
அவமானங்கள் அதிகமாக உணரும் தன்மை இது போன்ற பல செயல்கள் ஆனது விரக்தியின்
உணர்வுகளை அதிகப்படுத்தலாம் மற்றும் தனிநபர்கள் உதவி பெறுவதையும் கடினமாக்கலாம்.
இதற்கு
முதல்படி, தற்கொலைப்
பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல
மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள்
நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு
போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள்
என்றால், அவர்களை
விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா
என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள். என்ன செய்வது என்று தெரியமால்
தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு
சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன்
மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால்
விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.
வாழ்க்கை
இருட்டாகத் பயமாகத் தெரிகிறதா? அச்சம் வேண்டாம்‚ ஆச்சிர்யங்கள் விரைவில் நடக்கும்.
எதிர்பாராதது எதிர் பார்த்ததை விட தரமான முடிவை கொடுக்கும். தாமதம் ஆனால் என்ன? அந்த
தாமதம் மற்றும் பொறுமைக்கும் சேர்த்து வட்டியுடன் இந்த பிரபஞ்சம் கொடுக்கும்.
உங்களிடம் எதை வேண்டுமானாலும் இழந்தால் கவலை படாதீர்கள். இழந்தவை மட்டும் அல்ல
நீங்கள் நினைத்தது, கனவில் கூட நினைக்க கூச்சம் கொண்டு இதுவெல்லாம் நமக்கும்
கிடைக்குமா என்று நினைத்தது கூட தருவதற்கு உங்களுக்கு ஒரு கை இருக்கிறது. அது எந்த
கை என்று தெரியும் உங்களுக்கு! ஆம் அது தான் நம்பிக்கை! உங்கள் நம்பிக்கை !!
தன்னம்பிக்கை!!! நீங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அவ்வளவு தான்.எதையும் கடக்கத் துணிந்து விட்டால், அந்த சூட்சுமம் தெரிந்தால், இன்ப
துன்பத்தை சமநிலையில் எடுக்கும் மனநிலை புரிந்தால் நீங்கள் தான் KING MAKER.
அதிர்ச்சிகரமான வாழ்க்கை
நிகழ்வுகள்:
நேசிப்பவரின் இழப்பு, உடல் அல்லது
உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் அல்லது குறிப்பிடத்தக்க வாழ்க்கை நெருக்கடி போன்ற
அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை அனுபவிப்பது தற்கொலை ஆபத்தை அதிகரிக்கும். அதிர்ச்சியானது
நம்பிக்கையற்ற உணர்வுகள் மற்றும் உணர்ச்சி வயப்படுதலை அதிகப்படுத்தி மீளாத் துயரங்களுக்கு
வழிவகுக்கும்.
ஒன்று
தெரியுமா ? உங்கள் கொலை வெறியை தற்கொலை செய்யும் எண்ணங்களை கொலை செய்வதில்
காட்டுங்கள். அதுவே ஆரோக்யமான கொலை வெறி தாக்குதல். இன்றைய இளம் வயதினர்
தற்கொலைக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கற்கும் திறன் குறைவாக
இருப்பதால் போட்டியிட மாணவர்கள் பயப்படுகிறார்கள். ஒன்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான் ஒவ்வொரு விதத்தில். ஆசிரியர்
கண்டித்தார் என்றோ காதல் தோற்று போய்விட்டது என்றோ பாலியல் தொல்லை அச்சுறுத்தல்
என்றோ பெருத்த அவமானம் என்றோ பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்று நீங்களே நினைத்தோ
இன்னும் பல காரணங்கள் ஏன் வெளியே ஒருவரிடம் கூட சொல்லக் கூடாது என்றோவெல்லாம்
நினைத்து தவாறான முடிவை எடுக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளின் எண்ணங்களுக்கு
அடிக்கடி நீர் ஊற்றி நம்பிக்கை வேரை மனதில் தங்க வைக்க வேண்டும். மாறாக தவறு நடந்த
பிறகு நாம் ஏன் தவறு நடக்கவிடாமல் செய்ய தவற விட்டோம் என்று பின்னாடி அழுது என்ன
பயன்? குழந்தைகளை எப்போதும் குழந்தைகளாய் பார்ப்பதில் தவறு இல்லை? சிறு வயதில்
குழந்தை அழுதால் கேட்காமல் பசிக்கு உணவு அளிப்போம். அதே குழந்தை பெரிவனாய் ஆனால்
அழமாட்டான். நாம் தான் புரிந்து கொண்டு அவனை குழந்தையின் போது கவனம் செலுத்துவதை
விட இன்னும் கூடுதல் கவனம் தேவை. தும்பை விட்டு வாலைப் பிடித்தால் என்ன செய்யும்!
வலுக்கத் தான் செய்யும். வாழ்க்கை பாதையின் பயணத்தில் வலுக்க விடாமல் ஜெய்க்க
வைப்பதே பெற்றவர்களின் கடமை ஆகும். தற்கொலையின் அடிப்படைத் தன்மையை வேரோடு அறுத்து
விடலாம். ஒரு முறை தற்கொலை எண்ணம் வந்தால் மறுபடி மறுபடி வர அதிக வாய்ப்பு உள்ளது.
அந்த நபருக்கு கவனம் மற்றும் ஊக்குவிப்பு ஒன்றே உந்துதல் கொடுத்து வேற உலகத்தை
அவனுக்கு காட்டும். அந்த உந்து சக்தி தரும் ஆற்றல் அளப்பரியது. அந்த ஆற்றலை அழிக்க
முடியாது. மேலும் நம் அனைவருக்கும் தெரியும் ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலாக மாறும்
என்பது. நாம் அந்த ஆற்றல் ஊற்றெடுக்க போராடுவோம்.
போதைப்பொருள் துஷ்பிரயோகம்:
ஒவ்வொரு
ஆண்டும், ஒவ்வொரு
100,000 இளைஞர்களில் 10 பேர் தற்கொலையில் தங்கள் வாழ்க்கையை முடிக்கிறார்கள்.
ஒவ்வொரு
இரண்டு மணி நேரம் மற்றும் 11 நிமிடங்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட ஒருவர் தனது
உயிரை மாய்த்துக் கொள்கிறார். போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் அடிமைத்தனம்
தற்கொலையுடன் நெருக்கமாக இணைக்கப்படலாம். போதைப்பொருள் அல்லது ஆல்கஹால்
துஷ்பிரயோகம் செய்பவர்கள் உணர்ச்சி வலியைச் சமாளிக்க இந்த பொருட்களைப்
பயன்படுத்தலாம், இது இறுதியில் அவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக்கும் மற்றும் அந்த
மனநிலையே தற்கொலை அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
வழிமுறைகளுக்கான அணுகல்:
துப்பாக்கிகள் அல்லது
மருந்துகள் போன்ற ஆபத்தான வழிமுறைகளை எளிதாக அணுகுவது, தற்கொலை முயற்சியின்
அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை கொண்டு வரும் மேலும் மனநிலையானது மாறும் நிலையை
மாற்றும். அத்தகைய வழிமுறைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கியமான
தடுப்பு உத்தியாகும்.
முந்தைய முயற்சிகள்:
முந்தைய தற்கொலை
முயற்சிகளின் வரலாறு குறிப்பிடத்தக்க ஆபத்துக் காரணியாகும். இதற்கு முன்
தற்கொலைக்கு முயற்சித்த நபர்கள் எதிர்கால முயற்சிகளுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
தற்கொலை எண்ணங்கள் பலருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது தற்போதைய
சூழ்நிலை மற்றும் தற்கால நடை முறைகள், பழக்க வழக்கங்கள் கெட்டுப் போய் இருப்பதினால்.
ஆனால் நாம் தாம் அதிக விழிப்புனர்வுடன் இருக்க வேண்டும்.நம்மை மறக்கடிக்க செய்யும்
அந்த ஒரு நொடியில் ஏற்படுகிற தைரியம், துணிச்சல் ஏன் வாழ்வதற்கு தேவையான முயற்சிகளை
எடுப்பதில் இருக்க கூடாது. ஜப்பானியர்கள் பிரச்சனையை வரவேற்கிறார்கள். நாம்
பிரச்சனையை கண்டு பயப்படுகிறோம். ஒளிந்துக்கொள்கிறோம். பிரச்சனையை கண்டு பயந்து கண்ணை
மூடாமால் பிரச்சனையை, சவாலை, எதிர்த்தால் பிரச்சனைகளை வென்று விடலாம். சரித்திரப்
புத்தகத்தில் இடம் பெறலாம். மாறாக கண்ணை மூடி பயந்து தவறான எண்ணங்களை மனதில் பதிய
வைத்துக் கொண்டே போனால் எதிர்மறை எண்ணங்கள் மனதில் எளிதாக புகுந்து நம் வாழ்வை
இல்லமால் ஆக்கிவிடும். ஆனால் அதை எதிர்த்து சமாளித்து தீர்வு கண்டால் நாம் தான்
வாழ்வின் ராஜாவாக திகழ்வோம்.
அறிகுறிகள்:
• தற்கொலை செய்து கொள்வது எப்படி அல்லது இறப்பது பற்றி எப்படி
என்று அடிக்கடி பேசுதல்
• சாப்பிடுவதில்
அல்லது தூங்குவதில் சிக்கல் இருத்தல் முன்னுரிமை காட்டாமல் இருத்தல்
• நடத்தையில்
நடைமுறைச் செயல்களில் கடுமையான மாற்றங்களை மற்றும் கோவங்களை வெளிப்படுத்துதல்
• நண்பர்கள்,
உறவுகள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகுதல்
• பள்ளி, வேலை அல்லது பொழுதுபோக்குகளில் ஆர்வத்தை இழத்தல்
• விலைமதிப்பற்ற
சொத்துக்களை கொடுத்தல்
• இதற்கு
முன்பும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றல்
• தேவையில்லாத
ரிஸ்க் எடுத்தல்
• சமீபத்தில்
கடுமையான இழப்புகளை சந்தித்தல்
• மரணம்
மற்றும் இறப்பில் மூழ்கி இருப்பது போல் தெரிதல்
• ஒருவரது
தோற்றத்தில் ஆர்வத்தை இழத்தல்
• ஆல்கஹால்
அல்லது போதைப்பொருள் பயன்பாட்டை அதிகரிக்க செய்தல்
• தன்னுடைய மொத்த கணக்குகளை திடீர் என்று தீர்த்தல்
• வேலையின்மை
• சமூக
தனிமை
• அடிமை இருத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாதல்..
குடும்ப வரலாறு:
தற்கொலை அல்லது மனநலப்
பிரச்சினைகளின் குடும்ப வரலாறு ஒரு நபரின் ஆபத்தை அதிகரிக்கும். மரபணு காரணிகள்
மற்றும் கற்றறிந்த நடத்தைகள் ஒரு பாத்திரத்தை வகிக்கலாம்.
தற்கொலை
எண்ணம் என்பது தன்னைத்தானே கொல்லும் எண்ணம் ஆகும். மேலும் அந்த தற்கொலை எண்ணம்
விரைவாக நடக்கலாம். அல்லது அப்பப்ப வந்து போகலாம் அல்லது அது நீண்ட காலத்திற்கு பின்னே
ஏற்படலாம். எதுவாயினும் தடுப்பு செய்வது எப்படி என்ற எண்ணங்களில் அதிக கவனம் வைக்க
வேண்டும். அவ்வளவு தான் எதிர்மறை எண்ணத்தை வென்று நேர்மறை எண்ணத்தை
புகுத்திவிடலாம். பொதுவாகவே எந்த எண்ணம் நம் நினைவுகளில் அதிகம் வருகிறதோ அதுவே
நடக்க அதிக வாயப்புகள இருக்கிறது என்று ஈர்ப்பு விதி சொல்கிறது.
5௦%
நல்ல எண்ணங்கள் 5௦% கெட்ட எண்ணங்கள் இருக்கிற ஒரு மனிதரிடம் நாம் எது நடக்கும்
என்று சொல்ல முடியாது. அந்த நேர் கோட்டில் ஒருவரை யூகம் செய்தல் கடினம். அதுவே 51% நல்ல எண்ணங்கள் 49% கெட்ட எண்ணங்கள் இருந்தால்
நல்லது நடக்கத் தான் அதிக வாய்ப்புகள் இருக்கும். அதுவே 51%
கெட்ட எண்ணங்கள் 49% நல்ல எண்ணங்கள் இருந்தால் கெட்டது
நடக்கத் தான் அதிக வாய்ப்புகள் இருக்கும். நல்ல எண்ணங்களை உயர்த்திக் கொண்டே போனாலே
கெட்ட எண்ணங்களின் வீரிய சக்தி குறைந்து கடைசியில் கெட்ட எண்ணங்கள் இல்லாமலே போய்
விடும். அதற்குத் தான் சொல்வார்கள் தேவையானது நினைத்தாலே தேவை அற்றது காணாமல்
போய்விடும். ஒரு பாறையில் தேவையற்ற
பகுதிகளை நீக்கினாலே தேவையான அற்புத அழகான சிலை கிடைத்து விடும்.
களங்கம்:
மனநலம் மற்றும் தற்கொலையைச்
சுற்றியுள்ள களங்கம் தனிநபர்களை உதவி தேடுவதிலிருந்தோ அல்லது அவர்களின்
போராட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதிலிருந்தோ தடுக்கலாம். தீர்ப்பு
அல்லது பாகுபாடு குறித்த பயம் அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதற்கு ஒரு
தடையாக இருக்கலாம்.
மனநலப் பாதுகாப்பு இல்லாமை:
மனநலப் பராமரிப்புக்கான
போதிய அணுகல் அல்லது போதிய மனநலச் சேவைகள் இல்லாததால், தனிநபர்கள்
அவர்களுக்குத் தேவையான உதவி இல்லாமல் போய்விடலாம்.
தற்கொலை எப்போதும் தடுக்கக்கூடியது
என்பதை நினைவில் கொள்வது முக்கியம் ஆகும். மேலும் தற்கொலை எண்ணங்களுடன்
போராடுபவர்கள் அல்லது தங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு
ஆதாரங்கள் உள்ளன. நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில்
இருந்தால் அல்லது தற்கொலை எண்ணங்களை அனுபவித்தால், ஒரு மனநல நிபுணர்,
தேசிய தற்கொலை தடுப்பு லைஃப்லைன் (1-800-273-TALK) போன்ற ஹெல்ப்லைன் (1-800-273-TALK) அல்லது உள்ளூர்
நெருக்கடி போன்றவற்றின் உடனடி உதவியைப் பெறுவது அவசியம். தலையீட்டு சேவை. இரக்கம்,
புரிதல் மற்றும் சரியான நேரத்தில் தலையீடு ஆகியவை உயிரைக்
காப்பாற்றும்.
கலாச்சார மற்றும் மத
காரணிகள்:
கலாச்சார மற்றும் மத
நம்பிக்கைகள் தற்கொலை பற்றிய ஒரு நபரின் கருத்தை பாதிக்கலாம். சில கலாச்சாரங்களில், தற்கொலைக்கு
எதிரான வலுவான தடைகள் இருக்கலாம், இது தனிநபர்களை உதவி
தேடுவதிலிருந்தோ அல்லது அவர்களின் போராட்டங்களை வெளிப்படையாக
விவாதிப்பதிலிருந்தும் தடுக்கலாம்.
கொடுமைப்படுத்துதல் மற்றும்
சைபர்புல்லிங்:
கொடுமைப்படுத்துதல், நேரில்
அல்லது ஆன்லைனில் (சைபர்புல்லிங்) கடுமையான மன உளைச்சலுக்கு வழிவகுக்கும் மற்றும்
தற்கொலைக்கு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம், குறிப்பாக
இளைஞர்களிடையே.
பொருளாதார அழுத்தம்:
நிதிச் சிக்கல்கள், வேலையின்மை
அல்லது பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவை மன அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும்
நம்பிக்கையற்ற உணர்வுகளுக்கு பங்களித்து தற்கொலைக்கு வழிவகுக்கும். இந்த வாழ்வாதார
சூழ்நிலை கெட்டுப் போதல் என்பது நொடிபொழுதில் மாறக்கூடிய நிலையாகும்.
பாலின வேறுபாடுகள்:
தற்கொலை அனைத்து
பாலினத்தவர்களையும் பாதிக்கும் அதே வேளையில், தற்கொலை முறைகள் மற்றும் ஆபத்து
காரணிகளில் குறிப்பிடத்தக்க பாலின வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, ஆண்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம், பெரும்பாலும் அவர்கள் அதிக ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுப்பதால், பெண்கள் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்யலாம். மனஉளைச்சல் சீர்கேடு உடைய
நபர்கள், பெரும்பாலும் சண்டை, பாலியல்
வன்கொடுமை அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களின் விளைவாக,
தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும் தீவிரமான மன உளைச்சலை
அனுபவிக்கலாம்.
நாள்பட்ட நோய்:
நாள்பட்ட உடல் நோய் அல்லது
நாள்பட்ட வலியால் அவதிப்படுவது மன ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் மற்றும்
தற்கொலை எண்ணத்திற்கு பங்களிக்கும்.
மனக்கிளர்ச்சி:
சில தற்கொலைகள் நீண்ட கால
திட்டமிடல் இல்லாமல் மனக்கிளர்ச்சியுடன் நிகழலாம். போதைப்பொருள் துஷ்பிரயோகம், மனக்கிளர்ச்சி
மற்றும் ஆபத்தான வழிமுறைகளை அணுகுதல் ஆகியவை ஆபத்தான கலவையாக இருக்கலாம்.
காப்பிகேட் தற்கொலைகள்:
தற்கொலை பற்றிய ஊடகக் கவரேஜ், குறிப்பாக
பரபரப்பான அல்லது விரிவான அறிக்கையிடல், காப்பிகேட்
தற்கொலைகள் அல்லது "தற்கொலை தொற்றுக்கு" வழிவகுக்கும், அங்கு தனிநபர்கள் தங்களுக்குத் தெரிந்த ஒருவரின் அல்லது பொது நபரின்
தற்கொலையால் பாதிக்கப்படுகின்றனர்.
அறிவு இல்லாமை:
சில தனிநபர்கள்
கிடைக்கக்கூடிய மனநல ஆதாரங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது
சிகிச்சையைப் பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கலாம், இது உதவியை
நாடுவதில் தாமதத்திற்கு வழிவகுக்கும்.
தற்கொலையைத் தடுப்பதற்கு
விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநலப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துதல்,
களங்கத்தைக் குறைத்தல் மற்றும் ஆதரவான மற்றும் அனுதாபமுள்ள சமூகத்தை
வளர்ப்பது உள்ளிட்ட விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆரம்பகால தலையீடு, மனநல கல்வியறிவை ஊக்குவித்தல் மற்றும் மனநலம் பற்றிய வெளிப்படையான
உரையாடல்களை ஊக்குவித்தல் ஆகியவை தற்கொலை தடுப்புக்கான இன்றியமையாத படிகளாகும்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தற்கொலை எண்ணங்களுடன் போராடினால்,
முடிந்தவரை விரைவில் தொழில்முறை உதவி மற்றும் ஆதரவைப் பெறுவது
முக்கியம். இந்தக் கட்டுரை படித்து ஒருவர் எண்ணத்தை மாற்றினாலே அது தமிழர் நலத்திற்கான வெற்றி ! தமிழர் நலத்தின் நோக்கம் தற்கொலை என்ற வார்த்தையே தமிழ் அகராதியில் இருக்கக் கூடாது மாறாக அந்த எண்ணங்கள் வாழ்வின் பெரியத் திருப்பு முனையாக இருக்க வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விழிப்புணர்வு: தகவல்கள் : தற்கொலை ஏன் நடக்கிறது? - மனநலக் கோளாறுகள், விரக்தியின் உணர்வுகள், சமூக தனிமைப்படுத்தல் [ விழிப்புணர்வு ] | Awareness: Information : Why does suicide happen? - Psychiatric disorders, feelings of hopelessness, social isolation in Tamil [ Awareness ]