முயற்சி வேண்டும் ஏன்?

"ஆடம்பரம்" ஒரு அழிவுப் பாதை.."

[ நீதிக் கதைகள் ]

Why should you try? - "Luxury" is a path to destruction.." in Tamil

முயற்சி வேண்டும் ஏன்? | Why should you try?

ஒரு நாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

முயற்சி வேண்டும் ஏன்?

 

ஒரு நாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

 

அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான்.

 

கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. 

 

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்?

 

தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது.

 

அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான். 

 

கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்?

 

நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

"ஆடம்பரம்" ஒரு அழிவுப் பாதை.."

அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றி விட்டது.

 

ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட அதனால் அழிந்துப் போனவர்கள் தான் அதிகம்.

 

ஓவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தத் தடையுமில்லை.

 

அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் போது தான் அழிவுப் பாதை ஆரம்பம் ஆகின்றது.

 

மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்த நாள் விழா.

ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்குப் பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

 

தெனாலிராமன் பொட்டலத்தைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

 

அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

 

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான்.

 

மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளியமரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

 

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்தப் புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும், ஓடும் போல இருங்கள்!” என்றான்.

 

அவையினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தை விட்டு எழுந்து

தெனாலிராமனைத் தழுவி,

 

“”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

 

“”பொக்கிஷப் பணமும் பொதுமக்கள் பணமும் வீணாகும்படிச் செய்து விட்டேன். உடனே என் பிறந்தநாள் விழாவை நிறுத்துங்கள்.

 

இனி என் பிறந்தநாள் அன்று வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள், வயோதியர்களுக்கு மூன்று வேலை அன்னதானம் செய்யுங்கள்.

 

வீர விளையாட்டை நடத்துங்கள்..வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னும்,பொருளும் கொடுங்கள். அவசியம் இல்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக் கூடாது,” என உத்தரவிட்டார்.

 

ஆம்.,நண்பர்களே..,

 

ஆடம்பர வாழ்க்கை: தகுதிக்கு மீறி ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒரு நாள் நிம்மதி இழப்பார்கள்.

 

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின் முன் மாயும் மூடுபனியைப் போல மறைந்து விடும்.

 

நமது தகுதிக்கு உட்பட்டு, சாதாரணமாக வாழ்ந்து விட்டால் மனநிம்மதியுடன் வாழலாம்.

 

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க வளமுடன்..!

 

அன்பே சிவம்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

நீதிக் கதைகள் : முயற்சி வேண்டும் ஏன்? - "ஆடம்பரம்" ஒரு அழிவுப் பாதை.." [ ] | Justice stories : Why should you try? - "Luxury" is a path to destruction.." in Tamil [ ]