வகை: பெண்கள்
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!! அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!! உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!! திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!! நாளை திருமண நாள்... அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!! தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!! அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள்.
வகை: ஆரோக்கியம்
சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது. சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாம் இந்த பதிவில் பார்ப்போம். நோயில்லாத வாழ்வு : வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம். வயிற்றுப் பூச்சிகள் அழிய : சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.
வகை: ஒரு குட்டிக்கதை
மலையடிவாரத்தில் ஒரு ஜென் குரு இருந்தார். அவருக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு குருவே எனக்கு ஒரு குழப்பம் என்று ஆரம்பித்தார் மாணவர். என்ன என்று குரு கேட்க... நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன் கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையும் தருகின்றன. அது அனுபவபூர்வமாக உணருகிறேன். ༺🌷༻ மகிழ்ச்சி மகிழ்ச்சி இதில் என்ன குழப்பம் என்று குரு கேட்க... நான் தியானத்தில் இல்லாத வேலைகளில் முழுமையான நல்லவனாக இருக்கின்றேனா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில மகரயாழ் நாள்களில் நானும் ஒன்று இரண்டு தவறுகளை செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படி செய்வது சரிதானா இதை யோசிக்கும் போது எனது உள்ளம் மிகுந்த சோகமடைகிறது. ༺🌷༻ குருநாதர் சிரித்தார் நீ தியானமும் செய்கிறாய் தவறுகளும் செய்கிறாய் அப்படித்தானே என்று குரு கேட்கிறார். ஆமாம் குருவே அது தவறில்லையா என்று சீடர் கேட்கிறார்.
வகை: வாழ்க்கை பயணம்
பாதை இலகுவா… கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்… போகும் இடத்தை அடைந்து விடலாம்..!! எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான்! ஆனால், உங்கள் தகுதி என்ன என்பதை மற்றவர் தீர்மானிக்க கூடாது! துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும்….! பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும். பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில். நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை இழிவாக நினைப்பவர்களை குறை மட்டும் காண்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடுங்கள். நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை.. மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.. அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.. அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே..!! எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடை பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் “என்னால் முடியும்..!.
வகை: ஒரு குட்டிக்கதை
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது... சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது... வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் கதவு எண் 99 என இருந்தது.. வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது... இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது... இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்... இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்... அவனுக்கு வந்த டோக்கன் எண் 999 அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
அறுபத்தி மூவர் - மாதம் - நட்சத்திரம் . அதிபத்தர். ஆவணி-ஆயில்யம். அப்பூதி அடிகள். தை-சதயம். அமர் நீதியார். ஆனி-பூரம். அரிவாட்டாயர். தை-திருவாதிரை. ஆனாய நாயனார். கார்த்திகை-அஸ்தம் இசைஞானியார். சித்திரை-சித்திரை. இடங்கழியனார். ஐப்பசி - கார்த்திகை. இயற்பகையார். மார்கழி-உத்திரம். இளையான்குடிமாறர். ஆவணி-மகம். உருத்திரா பசுபதியார். புரட்டாசி - அஸ்வினி. எறிபத்தர். மாசி-அஸ்தம். ஏயர்கோன்கலிக்காமற். ஆனி-ரேவதி. ஏனாதி நாதர். புரட்டாசி-உத்திராடம். இயடிகள் காடவர்கோன். ஐப்பசி-மூலம். கணநாதர். பங்குனி - திருவாதிரை. கணம்புல்லர். கார்த்திகை - கிருத்திகை. கண்ணப்பர். தை - மிருகசீரிஷம். கலிக்கம்பர். தை - ரேவதி.
வகை: ஆன்மீகம்
💫 செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும். 💫 செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். 💫 அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும். ஒளவையார் விரதம் : 💫 பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள். 💫 இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். 💫 ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. 💫 குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். ஆடி செவ்வாயின் விசேஷம் : 💫 பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர். 💫 செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். 💫 ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 💫 ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
வகை: நகைச்சுவை
சிலர் சிரிக்கையில் புன்முறுவலை போல் இருக்கும். சிறிதும் சத்தம் இருக்காது. சிலரது சிரிப்பு இருமலாக மாறி தொந்தரவு தரும் (சிரிப்பவருக்கும் அருகிலிருப்பவருக்கும்). சிலரது சிரிப்போ கடுகடுவென்று மோசமாக அல்லது சோகமாக இருக்கும். மோசமான உங்கள் மனநிலையை வெல்ல வேண்டுமா? யோசனை செய்யாமல் கொஞ்சம் முட்டாள்தனமாக இருங்கள்! ஒருவர் எவ்வளவு அதிகமாக சிரிக்கிறாரோ அவ்வளவு உற்சாகமாக இருப்பார்! ஒருவர் எவ்வளவு அதிகமாக கோபப்படுகிறாரோ, அவ்வளவு வேகமாக சோர்வு அடைகிறார்! மனதில் அழுத்தமும் அடைப்புகளும் உள்ளவர் வயிறு குலுங்க சிரிக்க முடியாது. சிரிப்பவர்கள் கவலை குறையும் அல்லது மறையும். இரண்டு லாபம்தானே? இப்போது நான் உங்களை வாய்விட்டோ வயிறுவிட்டோ சிரிக்க அழைக்கிறேன். உலக சிரிப்பு தினம் மட்டும் நீங்கள் அழுதுகொண்டே சிரிக்கலாம். ஏன் நீங்கள் அழுதுகொண்டே சிரிக்கவேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அது வேறு எதுவும் இல்லை. அன்றாவது தினமும் சிரிக்காதவர் நீங்கள் அழுவதை கண்டாவது சிரிப்பாரோ என்ற ஒரு நப்பாசை தான். நீங்கள் சிரிக்க கோபம் தேவை என்றால் கோபப்படுங்கள், நீங்கள் சிரிக்க சத்தம் தேவை என்றால் கத்துங்கள் அல்லது எதையாவது போட்டு உடையுங்கள் (உங்களது உடமைகளை மட்டும்). அப்படி செய்வதன் மூலம் நீங்கள் நன்றாக சிரிப்பீர்கள் என்றால் அப்படியே செய்யுங்கள். சிரிப்பை பெறுங்கள், சிரிப்பை கொடுங்கள், சிரிக்க வையுங்கள்.
வகை: பெண்கள்
பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகி விட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது. உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. (உயிர்த் தன்மையில்) ஆண், பெண் என்று இருவரையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது. ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும். ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள். புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்து எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில் தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியை விட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள். உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப் பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது. புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும். அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான். தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான். அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை. ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால் தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து, உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண் தான். ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்பு தான் என்ன?
வகை: பெண்கள்
• வீட்டு வேலைகளை சரிசமமாக செய்வது. • குடும்பத்தை முதன்மையாக நினைப்பது. • என்ன பிரச்சனையாக இருந்தாலும் நாலு பேர் முன்னால் மனைவியை திட்டாத பண்பு. • குழந்தைகள் வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து முழுமையாக ஈடுபடுவது. • கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக இருப்பது. • ரொம்ப முறுக்கா இல்லாமல் கொஞ்சம் விளையாட்டு குணமும் இருந்தால் பிடிக்கும். இதையெல்லாம் பெண்கள் விரும்புகிறார்கள்..
வகை: சமையல் குறிப்புகள்
சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும். மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.
வகை: சமையல் குறிப்புகள்
நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச் சேர்த்து பிரட்டவும்.