வகை: பெருமாள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
தானம் வேறு தர்மம் வேறு. தானம், தர்மம் என்கிறார்களே? அப்படியென்றால் என்ன? இந்த கதையை படியுங்கள்...
வகை: நீதிக் கதைகள்
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.
வகை: கடவுள்: பெருமாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்த சாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக் கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப் பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடு மென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய சிங்கர் என்பார்கள். செங்காடு யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் : யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டு மானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும். பொன்னிமேடு நரசிம்மர் : சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடை யிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று. ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு சைதாப்பேட்டை : 900 ஆண்டு களுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலை யில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப் பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது என்று சொன்னது. லட்சுமி தேவியும், அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாய கங்கையும் தனக்கான இடமாக பசுவின் கோமியத்தை தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
வகை: நலன்
பச்சை கற்பூரம் அனைத்து இனிப்புப் பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் யன்படுத்தும் பொருட்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள். கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு. பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். இது ‘காம் ஃபர் லாரல்’ என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. பச்சை கற்பூரம் சீனா, ஜப்பான் நாடுகளில் விளையும் கற்பூர மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கக் கூடிய பொருளாகும். இந்த பச்சை கற்பூரமானது எந்தவித பக்குவமும் அடையாத மரப்பட்டை மூலம் கிடைக்கிறது. இது உணவின் சுவைக்காகவும் வாசனைக்காகவும்ப போடப்படுகிறது என்பதுதான் பெரும்பாலானோருக்குத் தெரியும். பச்சைக் கற்பூரம் ஒரு சித்த மருத்துவப் பொருள். இது எட்டு விதமான குன்மங்களையும், மூட்டுகளில் ஏற்படும் வலி, வாதநோய் போன்றவற்றை நீக்கும். இதில் ஈசன், வீமன், பூதாச்சிறையன் என மூன்று வகை உண்டு.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நவக்கிரகங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வாகனங்கள் உள்ளது அந்த வாகனங்கள் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தரும் குறியீடுகளாக அமைகின்றன. அதாவது சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை குறைக்கக்கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்கள் அல்லது சிறிய சிலைகளாக, உரிய இடத்தில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை* சூரிய தசா அல்லது புத்தி காலகட்டமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப்பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம் சந்திர தசா அல்லது புத்தி நடக்கும் காலகட்டம் நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம் செவ்வாய் தசா அல்லது புத்தியில் பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலை வைக்கலாம்.
வகை: ஊழியர்கள்
இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை. ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நம்மை எதிரிகளிடம் இருந்தும், உடன் இருந்தே தீமை விளைவிக்கும் துரோக சிந்தனை கொண்டவர்களிடம் இருந்தும், மந்திர தந்திரங்களால் விளையும் தீமைகளில் இருந்தும் நம்மை காப்பவர் பைரவ மூர்த்தி. நமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி. மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். பைரவ மூர்த்தி சனியின் குரு. ஆகவே ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும்.
வகை: பழங்கள் - பலன்கள்
உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு #கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம். நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள். அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும். சத்துக்கள் : கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது :
வகை: ஆன்மிக பக்தி கதைகள்
இராமாயணத்தில் கும்பகர்ணனின் காத பாத்திரமும் ஒரு அங்கமாகும். கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். நல்ல புத்தி கூர்மையும், நெறி தவறா வாழ்க்கை முறையையும், இரக்க குணத்தையும் ஒருங்கே கொண்டவனாக திகழ்ந்தான். இந்திரன் தேவர்களின் தலைவனாவான். இவனுக்கு கும்பகர்ணனின் புத்திக்கூர்மையையும் அசாத்திய வீரத்தையும் பார்த்து பொறாமை எனும் தீயை நெஞ்சத்தில் வைத்து, கும்பகர்ணனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். கும்பகர்ணன் தனது அண்ணன்கள் இராவணன் மற்றும் விபீஷணனுடன் பிரம்ம தேவரிடம் வரம் வேண்டி தீவிர யாகம் செய்தான். இந்த யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில் அவர்கள் இந்திரனின் ஆசனமான இந்திராசனா என்ற வரத்தை எதிர்பார்த்தனர். ஆனால் கும்பகர்ணன் நித்ராசனா என்ற வரத்தைக் கேட்டார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
தலைக்கு மேல் கூரை இல்லாமல் வெட்டவெளியில் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வெக்காளியம்மன் கோயில் திருச்சிக்கு அருகே உறையூரில் உள்ளது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. உறையூர் முற்காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூருக்கு வாகபுரி, கோழியூர் என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கோயிலின் தல புராணப்படி, ஒரு காலத்தில் உறையூரை சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் என்பவர் இங்கே ஒரு நந்தவனம் அமைத்து பல அரியவிதமான மலர்ச் செடிகளை வளர்த்தார். இவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் பக்தர் ஆனதால், தினமும் இந்த மலர்களை கொய்து, மாலை கட்டி ஸ்ரீ தாயுமானவருக்கு அர்ப்பணித்து வந்தார்.