 
		
		          பெண்களுக்கான அழகு மற்றும் ஆரோக்யா குறிப்புகள்
* உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுப்டலாம். * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும். * தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும். * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும். * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். * தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும்.
 
		
		          ஆண்களுக்கான அழகு மற்றும் ஆரோக்யா குறிப்புகள்
டீ-ஷர்ட், ஃபிட் ஆன ஆடைகளை அணிய முடியவில்லையா? தொப்பை பற்றின கவலையா ? தொப்பை எல்லோருக்கும் இருக்கக்கூடியது. நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத போது தானாக தொப்பை வரும். சரியான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவை தடைப்படும்போது, உடலின் அமைப்பு மாறிவிடும். தொப்பை எதனால் வருகிறது என்றும் அதனை எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம். 1. ஆரோக்கியமற்ற உணவுகள் சீஸி ஃப்ரை, சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, ஜிலேபி போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்யும். இவ்வாறான உணவுகளில் உடலுக்கு தேவையான எந்த ஆரோக்கியமும் கிடையாது. இதுபோல சிற்றுனவுகளை தவிர்க்க வேண்டும். 2. உடற்பயிற்சி செய்யாதிருத்தல் கார்டியோ வொர்க் அவுட் செய்வதால், தொப்பை குறையும் என்று நீங்கள் நம்பினால் அது முற்றிலும் தவறு. தினமும் யோகா, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை செய்வது நல்லது. இதயம் பலப்படுவதோடு தட்டையான வயிறையும் பெறலாம். 3. மன அழுத்தம் மன அழுத்தமும் உடல் எடை மற்றும் தொப்பை வர ஒரு முக்கிய காரணம். மன அழுத்தமானது உடலில் கார்டிசாலை சுரக்க செய்கிறது. இது உடல் இயக்கத்துக்கு தேவையானதை விட அதிகமாக, கல்லீரலில் இருந்து சர்க்கரையை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை கூடும் வாய்புகள் உள்ளது.
 
		
		          சட்டம்
First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.
 
		
		          மனை
நாம் வீடு, நிலம் வாங்கும்போது அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்பிக்கையின் அடிப்படையிலும் முழுமையில்லாத தகவல்களின் அடிப்படையிலும் பலர் சொத்துகளை வாங்கிவிடுகிறார்கள்.
 
		
		          பைரவர்
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
 
		
		          தோல்வி
நாம எல்லோருமே எதையோ அடைவதற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எதையாவது அடைந்த பின்னும் மனதில் அமைதியில்லை. நமது உடலும் உள்ளமும் அதை கொண்டா இதை கொண்டா என்று நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.
 
		
		          பணம்
சிலர் எந்த நேரமும் பணம் பணம் பணம் இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி பணம் சம்பாதிப்பது. எப்படி அதை பாதுகாப்பது. அது எந்தெந்த வழியில் பெருக்குவது என்று சிந்தனையோடு மட்டுமே செயல்படுவார்கள். இப்படி செயல்படுபவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் செல்வம் இருக்கும் மீதி அனைத்தும் சென்றுவிடும்.
 
		
		          மஹாலட்சுமி தேவி
ஜாதகத்தில் பணக்கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய திசா புத்திகள் நடப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த முறைகளை கடைபிடித்து வந்தால் ஸ்ரீ மஹாலட்சுமியின் அருள்பெற்று பணக்கஷ்டம் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். 1. விநாயகருக்கு தினம் மூன்று நாட்டு வாழைப்பழங்களை கோவிலில் சமர்ப்பித்து வணங்கி வரவும். தொடர்ந்து 41 நாட்கள் இதை செய்யவும். 2. ஆலமரத்தின் அடியில் சுத்தமான பசும் பால் மற்றம் சர்க்கரை சேர்த்து ஊற்றி ஈரமான மண்ணெடுத்து சிறிது நெற்றியில் இட்டுக்கொள்ளவும். 3. வியாபாரத்திலும் உத்யோகத்திலும் பணம் சம்பந்தமான நஷ்டம் ஏற்படாமல் இருக்க காய்ச்சாத பசும்பால் 4 மடங்கிற்கு 1 மடங்கு பார்லி அரிசி கலந்து ஆற்றுப்பிரவாகத்தில் சேர்க்கவும். 4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மாதுளம் பழம் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று கடவுளுக்கு சமர்ப்பிக்கவும். 5. உங்கள் படுக்கையறையில் சுத்தமான இடத்தில் மயிலிறகை வைக்கவும். 6. ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த செப்பு டாலர் கழுத்தில் தொங்கவிடவும். 7. ஆண்கள் வலது சுண்டு விரலிலும்¸ பெண்கள் இடது சுண்டு விரலிலும் வெள்ளி வளையம் போட்டுக்கொள்ளவும். 8. வெள்ளியில் செய்த சதுர வடிவ நாணயத்தை எப்போதும் பர்சில் அல்லது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.
 
		
		          சிந்தனை சிறு கதைகள்
வாசிக்கக்கூடிய சிறுவர்கள் தாங்களே இக்கதைகளை வாசித்து விளங்கிக் கொள்ளலாம். வாசிக்கத் தெரியாதவர்களுக்கு, தெரிந்தவர்கள் வாசித்து தம் மொழி நடையில் கதையைச் சொல்லலாம்.
 
		
		          வாழ்க்கை துணை
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான், அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,, நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,, கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,, சோகமே உருவாகி விட்டான்,,, ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள், "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,, புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது, ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள், "மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே,
 
		
		          விலங்குகளின் பண்புகள்
யானை_பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க 🌹 பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். 🌹 மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். 🌹 முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். 🌹 ஒரு_யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். 🌹 அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். 🌹 பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். 🌹 அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். 🌹 இனி_அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந் தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும். 🌹 அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். 🌹 அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது. 🌹 கடைசியா... என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும்.
 
		
		          கீரைகள் - பயன்கள்
கீரைகள் என்றாலே அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததுதான் என்றாலும், அகத்திக்கீரைகள் சற்று அதிக நன்மைகளையே தருகிறது என்று சொல்லலாம். 50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் உள்ள கீரைதான் இந்த அகத்திக்கீரை.. 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.. அதாவது, 10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, இந்த ஒரே ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளதே இதன் ஸ்பெஷாலிட்டியாகும். இரும்புச்சத்து: இரும்புச்சத்து நிறைந்த கீரைகளில் முருங்கைக்கீரை போலவே மிகவும் முக்கியமானது இந்த அகத்திக்கீரையாகும்.. எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், குழந்தை பெற்ற பெண்களுக்குகூட இந்த அகத்திக்கீரையை அதிகமாக தருவார்கள்.. இதை குறிப்பிட்ட அளவு சாப்பிடும்போது, தாய்ப்பால் அதிகமாக பெருகும்.. பால் வளம் பெருக்கும் சக்தி உள்ளதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கு இந்த அகத்திக்கீரையை தீவனமாக தருகிறார்கள். அகத்திக்கீரை: அகம் + தீ + கீரை என்பதே அகத்திக்கீரையாகும்.. அதாவது உடம்பிலுள்ள உஷ்ணத்த தணிக்கும் தன்மை இந்த கீரைக்கு இருப்பதால்தான், அகத்திக்கீரை என்று பெயராம்.. அந்தவகையில், குடல்புண்களை, வாய்ப்புண்களை ஆற்றும் சக்தி இந்த கீரைக்கு உண்டு.. அதேபோல உடல்சூடு உடையவர்கள், கண் நோய், கண் எரிச்சல் பாதிப்பு உடையவர்கள் 2 வாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையை சமைத்து சாப்பிடலாம்.. இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடியே அணிய தேவையில்லை.. அத்தனை கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது.