பைரவர் தோற்றத்திற்கான புராண வரலாறு
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
தான் என்ற ஆவணமும், கர்வமும் அழிவைத் தரும். இதற்கு எடுத்துக்காட்டாக, படைப்புக் கடவுளாகிய பிரம்மன் ஒரு சமயம் தன் ஆற்றிலின் பேரில் அளவற்ற கர்வம் கொண்டு தாமே சிவனை விடப் பெரியவர் என்று கூறி வந்தார்.
பைரவ தத்துவம்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றி காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் உணர்த்தும் தத்துவம் ஆகும்.
12 ராசிகளுக்கான பைரவர்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
காலமே உருவமான கடவுள் கால பைரவ காலமே இவர் திருவடிவம், 12 ராசிகளும் அவரின் உடல் உருவப் பகுதிகளாக அமைந்துள்ளது.
பைரவர் மகிமை
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பைரவர் தன்னை வழிபடும் அடியவர்களின் பயத்தைப் போக்குவார்.
அஷ்ட பைரவர்களின் தரிசனம் சீர்காழியில்!
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பைரவர் சன்னதி பல ஆலயங்களில் இருந்தாலும் அஷ்ட பைரவர்கள் ஒரே இடத்தில் இருப்பதுதான் சீர்காழி ஸ்ரீசட்டநாத சுவாமி ஆலயத்தின் சிறப்பு.
64 பைரவர்கள் யார்?
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சிவபெருமானைப் போலவே அவரின் அம்சமான பைரவரும் 64 அம்சங்கள் கொண்ட திருவுருவங்கள் உடையவர் என நூல்களில் உள்ளன.
கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பஞ்சபாண்டவர்கள் ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலம், மூக்கனூர்.
வெற்றிமேல் வெற்றி கொடுக்கும் கால பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து காலத்தால் அழியாத புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவர் தான் தகடூரை (இப்போதைய தர்மபுரி) தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த அதியமான்.
பைரவர் சிறப்புக் கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சொர்ண ஆகர்ஷண பைரவர் தேவி அமர்ந்துள்ள கோலம் உள்ள கோயில்கள்:
பைரவர் கழுத்தில் ஒளி காணும் தலம்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சூரியகோடீஸ்வரர் - பவளக்கொடி கோயில். இங்குள்ள பைரவருக்கு தீப ஆராதனை காட்டும் போது கழுத்திலிருந்து சன்னமான சிவப்பு ஒளியைக் காணலாம்
5 முகங்களுடன் பைரவர் உள்ள ஒரே கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
காசி விசுவநாதர் கோயில் 5 முகங்களும், 10 கரங்களும் கொண்டு. இங்குள்ளார்.
அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பிரம்ம புரீசுவரர் கோயிலில் 3-ம் பிரகாரத்தில் அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது.
பைரவர் தேவியுடன் நின்ற கோலம்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
கட்டுமலை மீது சட்டையப்பர் (பைரவர்) கோயில். ஐம்பொன் - விக்கிரகங்களாக பைரவர் அருகில் அமுதவல்லி உள்ளார்.
பைரவர்கள் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
மருந்தீஸ்வரர் கோயிலில் பைரவர்கள் உள்ளனர்.
பஞ்ச (5) பைரவர்கள் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பசுபதீஸ்வரர் கோயில் - 5 பைரவர் உள்ளனர்.
4 பைரவர்கள் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சிவலோகநாதர் கோயில் - 4 விதமான பைரவர்கள் உள்ளனர்.
3 பைரவர்கள் உள்ள கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
வன்மீகநாதர் கோயில்! சிறிய பைரவர்களும், 4 அடி உயரமுள்ள கால பைரவரும் உள்ளனர்.
2 பைரவர் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
திருவிடைமருதூர்: கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ.
யோக பைரவர் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு தனிக்கோயில்.
8 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
நெல்லைப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் ஆயுதங்கள் தாங்கி, 8 கரங்களுடன் பைரவர் உள்ளார்.
10 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
நாகப்பட்டினம் : காயாரோகணர் – நீலாயதாட்சி அம்மன் கோயில்.
பைரவரே மூலவராக உள்ள கோயில்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
மூலவராக கால பைரவருக்கான தனிக்கோயில். கருவறையில் 4 அடி உயரமுள்ள கால பைரவர் உள்ளார்.
2 நாய் வாகனங்களுடன் பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
தான்தோன்றி ஈசுவரர் கோயில். இருபுறமும் நாய்களுடன் பைரவர் உள்ளார்.
வைரவன்பட்டி பெயரில் 2 தலங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
வளரொளிநாதர் கோயில். சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் பைரவர் சந்நிதி கொண்டுள்ளார்.
அமர்ந்துள்ள கோலத்தில் பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
முருகன் கோயிலில் பைரவர் அமர்ந்துள்ளார். செங்கல்பட்டுக்கு 18 கி.மீ.
சர்ப்ப பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சங்கரலிங்கம் - கோமதி அம்மன் கோயிலில் சுவாமி சந்நிதியில் பைரவர் சர்ப்பத்தைக் கையில் ஏந்தி உள்ளார்.
கதாயுதம் ஏந்திய பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
தேசிகநாதர் கோயிலில் கதாயுதம் தாங்கிய பைரவர் உள்ளார்.
சூரியன், சந்திரனுடன் பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
வண்டியூர் தெப்பக்குளம் வந்து மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் சூரியன், சந்திரன், பைரவர் ஒரே பீடத்தில் அமைந்துள்ளனர். ரோட்டின் மேல் தனிக்கோயில்.
கோயில் கருவறை மீதுள்ள விமானத்தில் பைரவர் உள்ள தலங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
கீழ்கண்ட கோயில்களில் படிக்கட்டுகளில் ஏறி விமானத்தில் இவரை வணங்கலாம்.
பைரவருக்கு இடதுபுறம் நோக்கி நாய் வாகனம் உள்ள தலங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சிவபுரநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.ல் சாக்கோட்டைக்கு வந்து அப்பால் 1 கி.மீ.
பைரவர் சிவனைப் பூசித்த தலம்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற வடுக பைரவர் இங்குள்ளார். வடுக தீர்த்தமும் உள்ளது.
அருப்புக்கோட்டையில் பைரவர்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
A. மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோயில், சொக்கலிங்கபுரம்.
பெருமாள் கோயிலில் பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
தாடிக் கொம்பு. சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் தனிச் சந்நிதியில் பைரவர்.
அம்மன் கோயிலில் பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
கமுதி: முத்துமாரியம்மன் கோயிலில் பைரவர். நப்புக்கோட்டை, பார்த்திபனூர், முதுகுளத்தூர் ஊர்கலிருந்து வரலாம்.
முருகன் கோயிலில் பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
திருச்செந்தூர்: தூத்துக்குடியிலிருந்து 45 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ.
குருசாப நிவர்த்திக்கான ஒரே கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சடாவர்மன் சுந்தர பாண்டியன் குருசாப நிவர்த்திக்காக அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலைக் கட்டி உள்ளார்.
பூசணி தீபம்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடுவதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
: பைரவர் - பைரவரை வழிபடும் முறை [ பைரவர் ] | : Bhairav - Method of worshiping Bhairava in Tamil [ Bhairav ]
பைரவர்
தாங்க முடியாத அளவிற்கு
எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம்
இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை
தான் சரணடைய வேண்டும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை
நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் பைரவருக்கு விளக்கு போட
வேண்டும். சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது
கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர்
சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த
பைரவருக்கு விளக்கு போடக்கூடாது. 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு
வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம். இதை செய்ய
முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள்
வாரத்தில் ஒருநாள் மட்டும் சாதாரணமான விளக்கு போடலாம்.
திருமண தடை நீங்கவும்
குழந்தை பேறு பெறவும் பைரவரை வழிபடுங்கள்!
கால பைரவரை வணங்கினால்
எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணத் தடைகள் விலகும். சனிக்கிழமைகளில் வாசனை
வீசும் மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷங்களும், நவக்கிரகத் தொல்லைகளும்
நீங்கும். தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவப்பு
மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும். வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு
ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம். பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து
இறைவன் திருவடியை அடைகின்றன. இதற்கு காரணமாக இருக்கும் கால பைரவரை நாமும் அவசியம்
வழிபட வேண்டும்.கால பைரவர் அருள் பெற நமது நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன.
பைரவரை வணங்க உகந்த மாத
அஷ்டமி
பைரவருடைய உடலின்
அங்கங்களாக 12 ராசிகள் அமைந்துள்ளன. அவை மேஷம் சிரசு, ரிஷபம் வாய், மிதுனம் இரு கைகள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி இடை, துலாம் புட்டங்கள், விருச்சிகம் மர்ம
ஸ்தானங்கள், தனுசு தொடை, மகரம் முழங்கால்கள், கும்பம் காலின் கீழ்
பகுதி,
மீனம் கால்களின் அடிப்பாகம் என 12 ராசிகளும் நிறைந்துள்ளன.
பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள்
எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு
வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார். பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த் தாஷ்டமச்சனி போன்ற
சனி தோஷங்கள் விலகி விடும்.பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச்
சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக
ஐதீகம். எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன்
வாழலாம்.பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால
பைரவர். காசி கோவிலில் கால பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார்.சிவன்
கோவில்களில் கால பைரவர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார். காலனாகிய எமனையே
சம்காரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர். எனவே இவரை கால
சம்கார மூர்த்தி என்றும் அழைக்கின்றனர்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: பைரவர் - பைரவரை வழிபடும் முறை [ பைரவர் ] | : Bhairav - Method of worshiping Bhairava in Tamil [ Bhairav ]