நாம எல்லோருமே எதையோ அடைவதற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எதையாவது அடைந்த பின்னும் மனதில் அமைதியில்லை. நமது உடலும் உள்ளமும் அதை கொண்டா இதை கொண்டா என்று நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.
: தோல்வி - இழப்பே சிறப்பு தெரியுமா ? [ தோல்வி ] | : Failure - Do you know that loss is special? in Tamil [ Failure ]
தோல்வி
நாம எல்லோருமே எதையோ
அடைவதற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எதையாவது அடைந்த பின்னும் மனதில்
அமைதியில்லை.
நமது உடலும் உள்ளமும் அதை
கொண்டா இதை கொண்டா என்று நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.
அது இல்லாமல் என்னால்
வாழவே முடியாது.இது இல்லாமல் எப்படி வாழ்வது?. என்று நம்மை ஓட ஓடத் துரத்துகின்றன.
எனது வாழ்க்கையும்
இப்படித்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு கட்டத் தில் தாங்க முடியவில்லை. என்னடா
வாழ்கை இது என்று விரக்தி.
"ஏன்டா என்ன இப்படி
துன்பப் படுத்துற!. வாடா ...வந்து அடிச்சிட்டு போ ........ நான் கஷ்டப்பட்டா
ஒனக்கு அவ்வளவு சந்தோஷமா ....." என்று இறைவனிடம்
புலம்பினேன்.
பின்னர் "நானும்
எவ்வளவு நாள் தான் வலிக் காத மாதிரியே நடிக்கிறது! .... ......இதுக்கு ஒரு முடிவே
இல்லையா!." என வருத்தப் பட்டு கண்ணீர் சிந்தினேன்.
அப்புறம் "எவ்வளவு
அடிச்சாலும் தாங்குறானே.இவன் ரொம்ப........நல்லவ.....ன்னு" சொல்லுவான்னு
பாத்தா அதுவும் நடக்கல....
நண்பர்களிடம் சொன்னால்
"நாங்களும் இப்படித்.......தான்யா வாழ்ந்துகிட்டு இருக்கோம் " என்று
அழாக்குறையாக புலம்பினார்கள்.
ஒண்ணுமே
புரியலே...ஒலகத்துலே... என்று ஏதும் புரியாது கலங்கி நின்றேன். இப்போது எனது
அறுபது வருட வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்.
நல்ல குடும்பம், உன்னதமான மனைவி, சிறந்த மக்கள், உயர்வான உறவுகள், அற்புதமான ஆரோக்கியம்
என்று எனது தகுதிக்கு மீறியே அனைத்தும் பெற்றிரு க்கிறேன். குறை சொல்ல ஏதுமில்லை.
இதில் எதுவுமே எனது
திறமையாலோஅல்லது புத்திசாலித் தனத்தினாலோ நடைபெற வில்லை.
அனைத்துமே அதுவாக
இயல்பாக நடந்தது. சிந்தித்து பார்த்தால் எந்த நேரத் தில் எனக்கு எது தேவை என்று
யாரோ திட்டமிட்டு செயல் செய்திருப்பது புரிகி றது.
எனக்கு எந்த நேரத்தில்
எதை படிக்க வேண்டும். யாரை சந்திக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எனக்கு என்ன
கிடைக்க வேண்டும் என்று அனைத்துமே முன்னரே திட்டமிட்டு அந்த பிளான் படி
நடந்துள்ளது என்பது நன்றாகவே புரிகிறது.
அனைத்தையும் அணுகுவதற்கு
வேண்டிய அறிவு எனக்கு தேவையான நேரத்தில் ஒவ்வொரு முறையும் கிடைத்திருக்கிறது.
எனது வாசிப்பு
பழக்கத்தின் மூலமே எனது சிந்தனை விரிந்து அதன் மூலம் எந்த நேரத்தில் எந்த செயலை
செய்ய வேண்டுமோ அந்த செயலை நான் செய் திருக்கிறேன்.
இது அனைத்தையும்
நடத்துவது அந்த இறைசக்தி என்னும் பேராற்றல் தான் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.
வாசிப்பு மற்றும்
சிந்திப்பு என்னுள் தினமும் தொடர்கிறது.அதை நானும் மிகவும் நேசிக்கிறேன்.
அதன் மூலம் எனது
செயல்களை தீர்மானித்து செயல் படுகிறேன். இதுவே எனது சுதர்மம் என்பதையும் நன்கு புரிந்து
கொண்டேன்.
இத்தனை வருட வாழ்வின்
அனுபவத்தில் நான் ஒன்றை நன்கு புரிந்து கொண் டேன்.
அதாவது நமக்கு வழங்கப்
பட்ட இந்த வாழ்கை என்பது எதையோ அடைவத ற்கு அல்ல.
நம்மிடம் இருக்கும்
அனைத்தையும் விடுவதற்கே இந்த வாழ்கை நமக்கு வழங்கப் பட்டு இருக்கிறது என்பது தான்
உண்மை.
எதையும் பெறுவதற்குத்
தான் நாம் விருப்பப் படுகிறோம். ஆனால் ஒன்றைகூட இழக்க நாம் எப்போதுமே
தயார் இல்லை.இது நாம் வளர்க்கப் பட்ட விதம் நம் மனதில் உருவாக்கும் சிக்கல்.
ஏன் இழக்க வேண்டும் .
எதற்கு இழக்க வேண்டும் என்பது இப்போது எழும் கேள்வி.
நாம் சிறு வயதில்
இருந்தே இது நல்லது இது கெட்டது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு , இது வேண்டும் இது
வேண்டாம் என்ற எண்ணத்தில் செயல் செய்கிறோம்.
உண்மையில் வேண்டுதல்
ஏதும் தேவை யில்லை. அதே போல் வேண்டாமை என்பதும் தேவையில்லை.வேண்டுதல் வேண்டாமை
இலானாக இருப்பதே சிறப்பு.
வேண்டுதல்,வேண்டாமை இலானாக நீங்கள்
மாறி விட்டால் நீங்களும் இறைவனே. நீங்கள் ஏதுமற்ற பூஜ்யமாகி விடுகிறீர்கள்.
அப்புறம் உங்களுக்கு
எந்த துயரும் ஒருபோதும் இல்லை. அனைத்தில் இருந்தும் விடுதலை.
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை
துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன்
இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய
நாளாகட்டும்
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥சிவம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: தோல்வி - இழப்பே சிறப்பு தெரியுமா ? [ தோல்வி ] | : Failure - Do you know that loss is special? in Tamil [ Failure ]