பணம்

பணம்தான் வாழ்க்கை என்று நினைப்பவரா?

பணம்  என்பது என்ன பற்றி தெரிந்து கொள்வோமா | Money Let's know what is it about

பணம் என்பது என்ன பற்றி தெரிந்து கொள்வோமா

Category: பணம்

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு’ என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். ப்ரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள். பாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச் சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவை யாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள். திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்தி லிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான். எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல. இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர், ஏகப் பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது. அதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான் சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பணம் உங்களை மாற்றாமல் இருக்க கவனம் அவசியம் | Be careful not to let money change you

பணம் உங்களை மாற்றாமல் இருக்க கவனம் அவசியம்

Category: பணம்

மீபத்தில் பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு: 'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர். முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது. என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.

அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும் | A lot of money will definitely save us

அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்

Category: பணம்

ஒரு யூத வியாபாரி மரணப்படுக்கையில் இருந்தார். அவர் தன் மனைவியிடம் மூத்தமகன் எங்கே என்று கேட்க, உங்கள் வலப்பக்கத்தில் நிற்கிறான் என்றாள். இரண்டாம் மகன் எங்கே என கேட்க, தலையருகே உள்ளான் என்றாள். மூச்சு வாங்க கடைசி மகன் எங்கே என கேட்க, காலடியில் இருக்கிறான். உடனே சாகக்கிடந்த மனிதர் பதற்றத்துடன் எழுந்து, எல்லோரும் கடையை மூடிவிட்டு வந்துவிட்டால் வியாபாரம் என்ன ஆகும் என்றபடி துவண்டு விழுந்தார். இறந்து கொண்டிருக்கும் இவர் மனம் கல்லாப் பெட்டியில்தான் உள்ளது. பலரது மனம் பணம், ஜாதி, புகழ், இப்படி ஏதோ ஒன்றில் மாட்டிக்கொண்டு வாழ்நாள் பூரா அவஸ்தைபடுகிறது. எப்போது பணத்தை மட்டுமே பிரதானமாக நினைப்பவர்கள் பிற மனிதர்களை மதிக்க மாட்டார்கள். ஒரு பண வெறியர் ஏரிக்குப் போனார். படகிலிருந்து ஏரியில் விழுந்து விட்டார். யாராவது காப்பாற்றினால் சொத்தையே கொடுப்பதாக அலறினார். அங்கே இருந்த காவலர் இவரைக் காப்பாற்றினார். ஒரு ரூபாயை அவரிடம் வீசினார். அந்தக் காவலர் ஒரு விளம்பரப் பலகையை காட்டினார். அதில் சிக்கிக் கொண்டவர் களைப் காப்பாற்றினால் அன்பளிப்பு 100 ரூபாய் என எழுதியிருந்தது. பண வெறியர் உடனே, ஓஹோ நீ ஏதோ சேவை மனப்பான்மை உடையவன் என நினைத்தேன். இருந்தாலும் உனக்கு இப்படி பணத்தாசை கூடாது என்றார். காவலர் சிரித்தபடியே ஐயா பணம்தான் முக்கியம் என்றால் உங்களை சாக விட்டிருப்பேன். அதோ அந்த பலகையைப் பாருங்கள் என்றார் அதில் ஏரியில் விழும் சடலங்களை உடனுக்குடன் அப்புறப் படுத்தினால் 500 ரூபாய் சன்மானம் என்று எழுதியிருந்தது. மனிதர்களில் சிலர் இப்படி எல்லா நிகழ்வுகளையும் பணத்தால் மட்டுமே அளக்கிறார்கள். அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும். அது நம் காவல்காரன். அளவற்ற பணம் வந்தால் நாம்தான் அதைக் காப்பாற்ற வேண்டும். சரியாகச் சொன்னால் பணம் கால் செருப்பு போல். செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும். கூடுதலாக இருந்தால் காலை வாரி விடும். பணம் பயன்படுத்தவே.கொண்டாடி குவித்து வைக்க அல்ல. பணம் சம்பாதிப்பது மூச்சு விடுவது போல் எவ்வளவு காற்றை நாம் இழுக்க முடியுமோ அவ்வளவு இழுக்க வேண்டும். ஆனால் இழுத்த காற்று முழுவதையும் அப்படியே உள்ளே வைத்திருக்க முடியுமா? வெளியே விட்டேயாக வேண்டும். இந்த இயக்கம்தான் முக்கியம். ஒருவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். கோவில் குளம் தானம் தர்மம் எதுவும் செய்வது கிடையாது. அவர் நண்பர் எரிச்சலுடன் இவரிடம் நீ செத்தா சொர்க்கம் செல்வாயா நரகம் செல்வாயா என்றதற்கு, வியாபாரம் எங்கு நல்லா நடக்குமோ அங்கு போகணும் என்றாராம். எப்படி உள்ளது அவர் மனம்!

நிதியை கையாளும் வழிமுறைகள் | Methods of handling funds

நிதியை கையாளும் வழிமுறைகள்

Category: பணம்

அதிகாரம், சக்தி, படைபலம், வெற்றி எல்லாவற்றிற்கும் அடிப்படை நிதி பலம். பணவரவு செலவு குறித்துச் சிந்திப்பதாலும் வருமானத்தை அதிகரிக்கும் செயல்களை கையாள்வதாலும் மட்டுமே ஒருவர் பண பலம் பெற்றவராக திகழ முடியாது. வருவாயைச் சரியாக பயன்படுத்தவும் இருக்கும் நிதியை சிறப்புற நிர்வகிக்கவும், நேர்மையாக பொருள் ஈட்டவும், சில பழக்கங்களைக் கையாள்வது மிகவும் அவசியம். நிதியைச் சரியாகக் கையாளும் பழக்கம் இருக்கும் போதே 'நிதி சுதந்திரத்தை' நீங்கள் அடைய முடியும்.

பணம் | Money

சிலர் எந்த நேரமும் பணம் பணம் பணம் இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி பணம் சம்பாதிப்பது. எப்படி அதை பாதுகாப்பது. அது எந்தெந்த வழியில் பெருக்குவது என்று சிந்தனையோடு மட்டுமே செயல்படுவார்கள். இப்படி செயல்படுபவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் செல்வம் இருக்கும் மீதி அனைத்தும் சென்றுவிடும்.

: பணம் - பணம்தான் வாழ்க்கை என்று நினைப்பவரா? [ பணம் ] | : Money - Do you think money is life? in Tamil [ Money ]

பணம்

பணம்தான் வாழ்க்கை என்று நினைப்பவரா?

 

🌹🌹🌹

 

சிலர் எந்த நேரமும் பணம் பணம் பணம் இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி பணம் சம்பாதிப்பது. எப்படி அதை பாதுகாப்பது. அது எந்தெந்த வழியில் பெருக்குவது என்று சிந்தனையோடு மட்டுமே செயல்படுவார்கள். இப்படி செயல்படுபவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் செல்வம் இருக்கும் மீதி அனைத்தும் சென்றுவிடும்.

 

தேவைக்கு அதிகமாக பணம் சேர்த்தது சிலரின் பொழுது போக்காகவே உள்ளது. இதில் பெருமையாக வேற சொல்லிக் கொள்வார்கள். நான் 20 தலைமுறைக்கு சொத்து வைத்திருக்கிறேன் என்று. பணம் என்பது வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமானது அதை மறுக்க முடியாது ஆனால் அதன் பின்னாலேயே ஓடுவது என்பது மிகப்பெரிய தவறான செயலாம்.

 

வாழ்வதற்குப் பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார். “பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்”.

 

இருப்பதை வைத்து திருப்தியோடு வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள். உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதைப்பற்றி அதிகமாகக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

 

பணப் பிரச்சினையினால்தான் நிறையப் பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். சிலருக்குத் தங்கள் துணையை விட, ஏன் தங்கள் உயிரை விட பணம்தான் முக்கியமாக இருக்கிறது.

 

ஆனால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க மாட்டார்கள். ஒருவனுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு நிம்மதியான வாழ்வைத் தராது.

 

பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக நினைக்கிற ஆட்களோடு பழகாதீர்கள். பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிக்கும் நபர்களோடு பழகுங்கள்.

 

பண ஆசை உங்களுக்குள் வேர் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் நண்பர்களை விட, குடும்பத்தை விட, உங்களைவிட, பணம் முக்கியம் இல்லை. பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடாது.

 

இனியாவது பணத்தின் பின்னால் ஓடாமல் போதும் என்ற மனதோடு புன்னகையோடு வாழ்வோம். இறைவன் கொடுத்த வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம்.

 

பணத்தின் பின்னால் ஓடினால் நமக்கு நஷ்டம்தானே தவிர, லாபம் இல்லை என்பதை உணர்வோம். மனிதநேயத்தோடு வாழ்வோம் இனிமையான வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்.

 

🌹🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

: பணம் - பணம்தான் வாழ்க்கை என்று நினைப்பவரா? [ பணம் ] | : Money - Do you think money is life? in Tamil [ Money ]