பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமணம்

குறிப்புகள்

[ இல்லறம் ]

A marriage full of women's expectations - Notes in Tamil

பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமணம் | A marriage full of women's expectations

திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமணம்.

 

♥ திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

 

♥ ஏனெனில், திருமணம் ஆன பின்னர் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி புதுவித இடங்கள் என் எல்லாமே பெண்களுக்கு புதிதாக இருக்கும்.

 

♥ மாமனார், மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.

 

♥ அதுமட்டுமின்றி, தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

 

♥ திருமணத்திற்கு முன்னர், பேணிகாத்து வந்த நட்புறவுகளை திருமணத்திற்கு பின்னரும் தொடர முடியுமா? இதற்கு வருங்கால கணவர் ஏதேனும் முட்டுக்கட்டை போடுவாரா என்ற கேள்வி இருக்கும்.

 

♥ நாம் நினைத்த காரியங்களை செய்ய, கூற முடியுமா? குறைந்தபட்சம் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கூறிய பிறகு தான் செய்ய முடியும். ஒருவேளை அவர்கள் மறுப்பு கூறினால்? என்ன செய்வது என்ற கேள்விகள் இருக்கும்.

 

♥ இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் இருக்கும்.

 

♥ வேலைகளில் மாற்றம் செய்யவேண்டும். தாய் வீட்டில் இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம், எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம். ஆனால், புகுந்த வீட்டில் அப்படி இல்லை. எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்ய வேண்டும்.

 

♥ காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.

 

♥ தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என பொதுவாக அவர்கள் கருதுவது தான்.

 

♥ வீடு, சேமிப்பு என இப்படி வாழ வேண்டும் என பல கனவுகள் பெண்கள் மத்தியில் இருக்கும். இந்த கனவுகள் எல்லாம் எதிர்காலத்தில் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

இல்லறம் : பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமணம் - குறிப்புகள் [ ] | domesticity : A marriage full of women's expectations - Notes in Tamil [ ]