மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..! ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்! உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும் பிடி சாம்பலாகி விடும்..! புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...! ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..! ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக, இருப்பது உன் உடலே...! அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..! உன் அக குடும்பம் சரியில்லை என்றால் சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..! உன் உள் குடும்பம் உன் உடலே! அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும் உன்னை காக்கவும் யாரால் முடியும்..!
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!
மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத்
தேடு..!
ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!
ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!
உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!
புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது
உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!
ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல்
தெய்வமாக நின்றாய்..!
ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!
அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம்
உன் உடலே..!
உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!
உன் உள் குடும்பம் உன் உடலே!
அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!
மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!
ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!
காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!
உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!
உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!
உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!
ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது
அவனின் எண்ணங்களே..!
ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!
ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!
ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து
செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!
ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!
அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!
பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம்
அவரின் உடலே..!
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!
தியானம் நம் மனதோடு பேச செய்யும்.
ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.
அதை தேடு...!!
இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில்
தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...
"தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்"
என்று கூறியுள்ளார்...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே - குறிப்புகள் [ ] | Welfare : All the secrets of the world are inside your body - Tips in Tamil [ ]