இல்லறப் புரிதல்

குறிப்புகள்

[ இல்லறம் ]

Domestic understanding - Tips in Tamil

இல்லறப் புரிதல் | Domestic understanding

அன்பு மட்டுமே அன்பைத் திருப்பிக் கொடுக்கும்!!!

இல்லறப் புரிதல்:

just for with FUN started this post:

ஏண்டி உன் கணவர் எந்நேரமும் whatsapp-ல. இருக்காரே, அதை என்னான்னு கேட்கமாட்டியா..!..?..

அந்த வேலையாவது

அது ஒழுங்கா செய்யுதேனு விட்டுட்டேன்டி!

அது whatsapp பாக்கறது நமக்கும் வசதியாத்தான் இருக்குடி!

அப்படி என்ன வசதிடி!

அது whatsapp நோண்டும்போது

1) நம்ம கிட்ட டி.வி .ரிமோட்ட பிடுங்கறது இல்ல!

2) சட்னியில உப்பு இல்லனாகூட கம்முனு சாப்பிட்டு போயிடும்!

3) துவைக்காத சட்டையக்கூட கண்டுக்காம எடுத்து போட்டுக்கும்!

4) எத சொன்னாலும் whatsapp பாத்துகிட்டே தலையாட்டிக்கும்!

5) காபிக்கு பதிலா கழனித்தண்ணிய குடுத்தாலும் குடிச்சிடும்

6) மாமியாரப்பத்தி என்ன திட்டினாலும் அதுங்காதுல விழாது!

7) துணிக்கடைக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சா குனிஞ்ச தலை நிமிராம whatsapp பார்க்கும்.

கடைசியா பில் போடும்போது கூப்பிட்டுகிட்டா போதும். இங்க எப்ப வந்தோம் என்று கேட்கும்....

இப்ப புரியுதாடி!😀😀😳😀😂😁😀😀😂

நம்மோட முக்கியமான பொறுப்பு போன்ல சார்ஜ் கம்மியாகாம பாத்துக்கறது தான்...!..

 

மொழிகளை கடந்து ரசிக்க வைப்பவை இரண்டு ஒன்று இசை இன்னொன்று அழகான பெண்கள்

 

பத்து பேரோட சேர்ந்து பொய்யா சிரிக்கிறதுக்கு பதிலா தனிமையில உண்மையா அழுவது அசிங்கம் இல்ல..

 

கோடி குடுத்தாலும் முகத்தில் வராத சந்தோஷம், மனைவி தன் தாயை அன்பாய் நடத்துவதில் ஒரு ஆண் மகனுக்கு கிட்டி விடுகிறது.

 

ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும்போதும் அவள் புடவை நமக்கு கிடைக்கலியே என பெண்ணும் அவள் நமக்கு கிடைக்கலியே என ஆணும் எண்ணுகிறார்கள்

 

நிம்மதியாக இருக்கும்போது மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே மனித இயல்பு*

 

இன்னும், பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டுபொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.

 

முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு சுடிதாரை தடைசெய்ய வேண்டும். யாருபாட்டி, யாருபேத்தினே தெரியலங்கோ.# வாலிப வயசு.

 

இடுப்பு பிடிக்குது‘ என்று நீங்கள் சொன்னவுடன் சிரித்தால் அவள் காதலி. மூவ் எடுத்துத் தேய்த்தால் அவள் மனைவி.😄

 

நீங்கள் 1970-1980 ல் பிறந்த ஆண்களாக இருந்தால், சாந்தி, லதா, உமா. என்ற பெயருடைய பெண்களில், ஒருவரால் பாதிக்கப் பட்டிருக்கலாம்!

 

சொந்தக்காரங்க கூட இருக்கும்பொழுதெல்லாம் சந்தோசத்தைவிட எப்ப சண்டை வருமோன்னு பயம்தான் அதிகமா இருக்குது. எல்லா அம்மாக்களும் அறிமுகமான டெக்னாலஜி, மீயூசிக் சிஸ்டத்தின் சவுண்டை குறைக்கும் வழிமுறை தான்!😊

 

ஆண்களின் தவறுகளை பெண்கள் மன்னித்து விடுகிறார்கள்.. பெண்களின் தவறுகளுக்கும் ஆண்களையே மன்னித்து விடுகிறார்கள் பெண்கள் 😄 😄

 

பெரும்பாலும் கணவன்மார்கள் போனில் அம்மா எப்படி இருக்க? என்றும் மனைவி எங்க இருக்க? என்றுதான் பேச துவங்குகின்றார்கள்….😊

 

கவனிக்கப்ப‌டாத விசயங்கள் கோடி இருக்கின்றன. ஆனால் கவனிக்கப்படாத ஃபிகர்ன்னு ஒன்னு கூட கிடையாது.😄 😄

 

இருப்பதிலேயே அம்மாவுக்கும் மகளுக்குமிடையில் நடக்கும் சண்டை தான் காமெடியானது.😄

 

கொஞ்சம் கலர் கம்மியா இருக்குற பொண்ணுங்க சேலை கட்டிட்டு வரும்போது…. அம்மோ…. என்னமா இருக்காங்க

 

திரும்பி பார்த்தவுடன் “காதல்” வரும் என்றால் லாரி கிளினருக்கு தான் அதிகமாக காதல் வந்திருக்க வேண்டும்.😄 😄

 

திருமணத்திற்கு பிறகு

வேலை வேண்டாம் என்றார்

விட்டுவிட்டேன்

 

நம்பரை மாற்ற வேண்டும் என்றார்

மாற்றிவிட்டேன்

 

Facebook கூடாதென்றார்

நிறுத்தி விட்டேன்!

ஆண் நண்பர்கள் நட்பை

தொடரவேண்டாம் என்றார்

விட்டுவிட்டேன்!

 

லெக்கின் அணிந்தால்

கால் அளவு தெரியுமென்றார்

சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

Heels வைத்த செருப்பு

கூடாதென்றார்,

தூர ஒதுக்கினேன்!

 

ஜாக்கெட்டுக்கு தனியாய்

ஜன்னல் வேண்டாம் என்றார்

கழுத்துவரை மறைத்து

தைத்துக்கொண்டேன்!

 

உதட்டு சாயம் கூடாதென்றார்

ஒன்றும் போடாமல்

விட்டுவிட்டேன்!

 

பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,

பாலாடை தயிரோடு

நிறுத்திக்கொண்டேன்!

 

கொஞ்ச நாள் சந்தோஷமாய்

இருந்து அதன்பின் குழந்தை பற்றி

யோசிக்கலாம் என்றார்,

அதுவரை தவறாமல் மாதந்தோறும்

மாத்திரை தின்றேன்!

 

வாரத்தின் ஏழுநாளும்

அவருக்கு பிடித்ததே

சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள்

என்று நடுராத்திரி தான்

திரும்புவார்!

 

இரவு ஒரு மணிக்கு

Reached ? என்று

பெண் பெயரில் மெசேஜ்!

பொழுது விடிந்ததும்

யாரென்று கேட்டேன்,

Ex lover என்றார்!

 

விட்டுவிடச் சொன்னேன்,

முடியவில்லை என்றார்!

முயன்றால் முடியும்

துணைக்கு நானிருக்கிறேன்

என்றேன்!

 

நீயும் அவளும் ஒன்றா என்றார்,

வேறு வேறு தான்,

இது legal அது illegal என்றேன்!

அறைந்துவிட்டார்!

தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும்

விட்டுவிட்டேன்,

எனக்காக இது ஒன்றை மட்டும்

விட்டுவிடுங்கள் என்றேன்!

முடியாது it's true love

என்றார்!

 

எனக்கும் கூட true love

இருந்தது என்றேன்!

மறைத்ததற்காக ஒரு வாரம்

அடித்தார்!

தாங்கிக்கொண்டேன்!

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்

இல்லை!

 

திரும்பவும் Facebook

open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு

ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம்

தலைவைத்து படுத்தேன்!

 

எனக்கு பிடித்ததையும்

சமைத்தேன்!

முகநூல் முழுவதும்

காதல் கவிதைகளாய்

எழுதினேன்!

 

திரும்பவும் வேலைக்கு போனேன்,

திரும்பும் போது லேட்டாக

வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,

அவ்வப்போது weekend party என்று

வெளியே சென்றேன்!

 

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,

மொபைலுக்கும் laptop க்கும்

Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்

வேலைகளில் முக்கியமான வேலை

என்னை வேவு பார்ப்பது!

 

தன் வீட்டு சாப்பாடு

தனக்கு மட்டுமே சொந்தம் என்று

திருடு போகாமல் காப்பாற்ற

லீவு நாட்களில் கூட அவர்

வெளியே போவதில்லை!

 

எப்படியாவது என் ex lover

கையும் களவுமாக பிடிக்கவேண்டும்

என்று என்னைச்சுற்றியே

வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால்

கண்டுபிடிக்க முடியாது,

 

காரணம் எந்த ex lover ம்

எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே

என் அருகாமையில் சுற்றுவார்,

அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை

மட்டுமே நினைக்கும் வரை

எனக்கு ex lover வேண்டும்!

 

நீ யாரென்றே தெரியாது

என் அன்பு காதலனே,

But I love you darling!!

😁😁😁😁😁😁

 

😊 பிரியாணில முட்டைய காணோம்னதும் அரண்டுட்டேன்… அப்றம் பாத்தா பிரியாணிக்கு உள்ள இருக்கு எதுக்குதான் ஒளிச்சு வக்கிறாங்களோ 😄 😄 😄 😄 😄

 

நடந்த கதை

இது சீனாவில் நடந்த கதை!!!

 

அன்பு மட்டுமே அன்பைத் திருப்பிக் கொடுக்கும்!!!

 

ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் சுத்தமாக ஒத்து வரவில்லை. எப்போதும் சண்டைதான். ஒரு நாள் அந்த மருமகள் ஒரு வைத்தியரிடம் வந்து “ஐயா. என் மாமியாரைக் கொல்ல ஏதைவது ஒரு விஷம் கொடுங்கள்” என்றாள்.

 

 வைத்தியரும் பேப்பரில் ஒரு விஷப்பொடியை மடித்து மருமகள் கையில் கொடுத்து “பெண்ணே. இந்தப் பொடியை பாலில் கலந்து மிகுந்த அன்போதும், பணிவோடும், பாசத்தோடும் உன் மாமியாருக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் இந்த விஷம் பலிக்காது. ஒரு மூன்று மாதங்களுக்கு இதைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

 

வேறு வழியில்லாமல் மருமகள் மிகுந்த அன்போடும், பணிவோடும், பாசத்தோடும் மாமியாருக்கு விஷப்பொடியை பாலில் கலந்து கொடுத்து வந்தாள்.

 

ஒரு கட்டத்தில் அந்த மருமகளுக்கு உண்மையிலேயே மாமியார் மீது அன்பும் பாசமும் வந்து விட்டது. அவ்வளவுதான். அழுதபடியே வைத்தியரிடம் ஓடி வந்தாள்.

 

ஐயா. என் மாமியாரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு ஏதாவது மருந்து தாருங்கள்” என்று கதறினாள்.

 

அந்த வைத்தியர் சிரித்தபடியே அமைதியாக “அது வெறும் பொடிதான். நான் சொன்னபடி நீ அன்போடும் பரிவோடும் அவருக்கு கொடுத்த்தால், பதிலுக்கு உன் மாமியாரும் உன் மீது அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார். அதனால்தான் நீ அழுதபடி என்னிடம் ஓடி வந்திருக்கிறாய். அன்பு மட்டும்தான் எப்போதும் அன்பையே திருப்பிக் கொடுக்கும்” என்றார் அந்த மருத்துவர்.

 

விடியல் வந்ததும் மலர்கள் மலர்வது போல்

நாமும் மலர்ந்திடுவோம்..!

"நான் இவ்வளவுதான்" என நம்பிக்கைக்குரிய யாரிடமாவது கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்லவேண்டும்.. அதற்குப் பெயர் தான் காலம் கடந்து வாழும் அன்பின் சரணடைதல்🫶

 

பிடிவாத குணம்...

பிடிவாதம் மனநோயா? என்றால் “இல்லை” என்றும் சொல்ல முடியாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது? அது ஒருவரின் வாழ்க்கை சூழலை பொறுத்தே அமைந்தே இருக்கும்.

 

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டு பிடிப்பகும் என்று சொல்கிறார் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ்..

 

பிடிவாத குணம் என்பது,ஒரு வலிமையான மனோபவம்..தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டுதான்.

 

பலமுறை தோற்ற பின்பும், வெற்றியை விரட்டி பிடித்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

 

எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அகிம்சையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்ற மோகன்தாசின் பிடிவாத குணம்தான் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது..

 

ஆராய்ச்சி கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனும் பிடிவாத குணம்தான் தாமஸ் ஆல்வா எடிசனை, 1600 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது..

 

என்றாவது ஒரு நாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நாம் மிதிப்பேன்’’ எனும் பிடிவாதம்தான் ‘’யாக்’’ எருமைகளை மேய்த்துக் கொண்டு இருந்த டென்சிங்கை உலக வரலாற்றில் இடம் பெற வைத்தது..

 

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இப்படி ஒவ்வொரு சாதாரண மனிதரின் லட்சியம் மீதான உறுதியான, கொள்கைப் பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம்தான் அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக நிலை நிறுத்தியுள்ளது.

 

ஹிட்லர் போல, முசோலினி போல, இடி அமீன் போல, வியட்நாமில் அமெரிக்கா வாங்கிய அடிபோல, வீண் பிடிவாதத்திற்காகவும், வறட்டு கௌரவத்துக்காகவும் ஒரு சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலாம்,

 

ஆனால் அவை எல்லால் வெறும் கருப்புப் பக்கங்களே!. எப்படி இருக்கக் கூடாது என்பதின் உதாரணம் மட்டுமே அவர்களும், அவர்களின் செயல்களும்.

 

சுயநல லாபத்திற்கும், வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றி திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாமல்அழிவார்கள்..

 

ஆம் நண்பர்களே..,

 

தீர்க்க முடிந்த பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தரும்,

 

தீராத பிடிவாதம் நல்வாழ்க்கையை தொலைத்து விடும்.....

 

இல்லறம் சிறக்க..

எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாகக் கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்துச் செல்கின்றனர்.

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது... அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.. ஆனால், இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில், இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கைச் சமத்துவம் ஆகி விட்டது..

 

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ, ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க வேண்டும். அன்பால் சாதிக்கும் மனநிலையைக் கொண்டு இருந்தால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்..,

 

ஆம்.,நண்பர்களே.,

கடைசி வரை துணையாக இருக்கப் போவது குடும்பம். அதற்கு முதலிடம் கொடுங்கள்.,

 

உங்கள் வாழ்க்கைத் துணைவரை / துணைவியரை உலகின் முக்கிய மனிதராய் நடத்துங்கள்.,

 

குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்.,

 

பசுமையான நினைவுகளைக் குடும்பத்துக்குள்

உருவாக்குங்கள்....🙏🌹

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

 

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

இல்லறம் : இல்லறப் புரிதல் - குறிப்புகள் [ இல்லறம் ] | domesticity : Domestic understanding - Tips in Tamil [ domesticity ]