நலன் தரும் நல்ல கேள்வி பதில்கள்

குறிப்புகள்

[ நலன் ]

Good questions and answers for welfare - Tips in Tamil

நலன் தரும் நல்ல கேள்வி பதில்கள் | Good questions and answers for welfare

1. வருமுன் காப்பவன் யார்? அவன்தான் அறிவாளி.

நலன் தரும் நல்ல கேள்வி பதில்கள்

 

1. வருமுன் காப்பவன் யார்?

அவன்தான் அறிவாளி.

2. மனித வாழ்வைப் பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கள்?

அன்னையின் மடியில் தொடங்கிய வாழ்க்கை மண்ணின் மடியில் முடிகிறது. மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் வாழ்க்கை பயணம் தொடர்கிறது. இது தாள் மனித வாழ்க்கை

 

3. பகலில் யார் தூங்குவார்கள்?

சோம்பேறிகளும், நோயாளிகளும் தான் பகலில் தூங்குவார்கள். ஆரோக்கியமானவர்களும், உழைப்பாளிகளும் பகலில் தூங்க மாட்டார்கள்:

 

4. மனிதன் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

ஆரோக்கியமான மனிதன் ஆறுமணி நேரம் தூங்கினால் போதும், அல்லது எழு மணி நேரம்.

 

5. எதற்கு தலை வணங்க வேண்டும்?

உயிர் காக்கும் உணவுக்கு தலை வணங்க வேண்டும். மற்ற உயிர்கள் தலை வணங்குகின்றன.

 

6. கோபம் யாரை அழிக்கும்?

கோபப்படுகிறவனைத் தான் அழிக்கும்.

 

7. கவலை என்ன செய்யும்?

பலநோய்களை உருவாக்கி நிம்மதியாக வாழவிடாது.

 

8. ஆரோக்கியமான மனிதன் எவ்வளவு நேரத்திற்குள் மலம் கழிக்க வேண்டும்?

பதினைந்து வினாடிக்குள் மலம் கழிக்க வேண்டும். அதாவது கால் நிடத்திற்குள். சிறுநீர் தடையில்லாமல் வருவதைப்போல் மலமும் வர வேண்டும்.

 

9. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்?

தென்றலைப் போல் இதமாக, பனியைப்போல் மென்மையாக, நிலவைப்போல் குளிர்ச்சியாக, பூமியைப்போல் பொறுமையாக, வாளத்தைப்போல் பரந்த மனமாக, காலைக் கதிரவனைப் போல் அழகாக, மழை நீரைப்போல் தூய்மையாக, நதியைப் போல் பயனுள்ளதாக, பழங்களைப் போல் தித்திப்பாக, பூக்களைப் போல் மணமாக மற்ற ஜீவராசிகளைப் போய் அறிவில் சிறந்தவர்களாக வாழ வேண்டும்.

 

10. எந்தப் பெண் அறிவுடன் செயல்படுவாள்?

அதிகாலை ஐந்து மணிக்குள் தூங்கி எழுந்து, காலைக் கடன்களை முடித்து, தலை நனையும் படி குளிர்ந்த நீரில் குளித்து, குடும்ப வேலைகளைச் செய்யும் பெண் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் செயல்படுவாள்.

 

11. பெண் ஒரு கடவுள் என்பது உண்மையா?

ஆமாம். உண்மைதான். அன்றைய பெண்கள் கடவுள்தான்.

 

12. இனிமையான இல்லறம் எப்படி உருவாகும்?

அன்பும், பண்பும், பாரமும், பணிவும், உயர் குணங்களும் கொண்ட கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்தால் இனிமையான இல்லறம் நிச்சயம் உருவாகும்.

 

13. பெண்கள் எவைகளை ஒழிக்க வேண்டும்?

நகைப் பைத்தியம், நாகரீகப் பைத்தியம், பட்டாடைப் பைத்தியம் இவைகளை ஒழிக்க வேண்டும்.

 

14. மனித இனம் எதை அழிக்க வேண்டும்?

பேராசையை அழிக்க வேண்டும்.

 

15. ஆடம்பரம், நாகரீகம் மனிதர்களை என்ன செய்யும்?

இவைகள் இரண்டும் கூர்முனைக் கத்திகள் இவைகள் மனிதர்களின் கண்களை குருடாக்கி இருட்டு வாழ்க்கையை தரும். இருட்டு வாழ்க்கை வாழாதீர்.

 

16. ஆடம்பர செலவுகள் செய்வது ஆண்களா? பெண்களா?

இருவருமே தேவையில்லாத செலவுகள் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் தான் அதிகம் செலவு செய்கிறார்கள்.

 

17. மகிழ்ச்சியான வாழ்வை தருவது எளிமையா? ஆடம்பரமா?

ஆயிரம்முறை சொல்வேன் எளிமையே மகிழ்ச்சியான வாழ்வு தரும். ஆடம்பரம் நமக்கு வேண்டாம்.

 

18. எதற்கு ஆசைப்பட வேண்டும்?

பணத்தில் கோடீஸ்வரளாக வாழ ஆசைபடக்கூடாது. குணத்தில் கோடீஸ்வரனாக வாழ ஆசைப்பட வேண்டும்.

 

19. எளிமையான மனிதன் எப்படி இருப்பான்?

பருத்தி நூல் ஆடைகளை மட்டும் அணிவான். கழுத்திலும், இடுப்பிலும், கைவிரல்களிலும், கைகளிலும், தங்கம், வெள்ளி, வைரம் இவைகளை அணியமாட்டான். எளிமையான உணவுகளை உண்பான். அவன் தான் மனிதன்.

 

20. பெண்களுக்கு அழகு சேர்ப்பது புன்னகையா? பொன்னகையா?

புன்னகைதான் அழகு தரும். பொன்னகை திருடர்களை கூவி அழைக்கும். திருடர்களால் உயிரும் பறிபோகும். கடனாளியாக்கி நிம்மதியாக வாழவிடாது.

 

21. பட்டுச்சேலை கட்டினால் என்ன வந்து சேரும்?

அளவுக்கு அதிகமான பாவங்கள் வந்து சேரும்.

 

22. எவைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்?

உடலின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும், ரத்தத்தையும் மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இவைகளுக்கு இயற்கை உணவுகள் தான் உதவி செய்யும்.

 

23. வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்கா விட்டால் என்ன நடக்கும்?

பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள், இன்னும் பல நோய்க்கிருமிகளும் உருவாகி நோய்களை உருவாக்கி பல துன்பங்களை தரும்

 

24. இரவில் படுக்கைக்கு செல்லும் முன் எவைகளை சுத்தம் செய்ய வேண்டும்?

வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்களையும் தட்டுகளையும் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். இரவில் பாத்திரங்களை கழுவவில்லையென்றால் விடிவதற்குள் பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் உணவுகள் விடிவதற்குள் தூர்நாற்றமெடுத்து விடும். அத்துடன் சுத்தமில்லாத வீட்டில் வசிக்கும் பாச்சான், பல்லி, கரப்பான், எலி இன்னும் சில பூச்சிகளும் பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுகளைச் சாப்பிடும். அப்படி சாப்பிடும் போது பாத்திரங்களில் அவைகளின் விஷத்தன்மை கொண்ட எச்சில் படும் மலமும் கழிக்கும். இந்த விஷயத்தில் எல்லோரும் தினமும் கடமை தவறாமல் செயல்படுங்கள். படுக்கைக்கு செல்லுமுன் எல்லோரும் பல் துலக்கி, வாய்கொப்பழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இரவு பல்  துலக்காவிட்டால் நாம் சாப்பிட்ட உணவுத்துணுக்குகள் பற்களில் இடையில் ஒட்டியிருக்கும். இரவு முழுவதும் ஒட்டி இருப்பதால் அது அழுகி விடிவதற்குள் நாற்றமெடுத்து விடும்.

இந்த நாற்றத்தை நீங்கள் தூங்கி எழுந்தவுடன் தெரிந்து கொள்ளலாம். அவர்களின் வாய் நாற்றத்தை அவர்களாலேயே சகித்துக் கொள்ள முடியாது. சிலருக்கு தூங்கும் போது வாயிலிருந்து கோழை வடியும். அது கெட்ட நாற்றமாக இருக்கும். அதில் கண்ணுக்கு தெரியாத பல நோய்க்கிருமிகள் அதிகம் இருக்கும். படுக்கைக்கு பயன்படுத்தும் பாய், தலையணை, போர்வை இவைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன நல்ல பழக்கங்கள் அனைத்தையும் தினமும் முன்கால மனிதர்கள் சரியாக செய்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியயாக வாழ்ந்தார்கள். இன்று சோம்பேறிகள் அதிகரித்துவிட்டதால் பலர் இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பதில்லை. இன்று சோம்பேறித்தனத்தை உருவாக்குவது தரங்கெட்ட தீய உணவுகளும், டிவி பெட்டியும் தான்.

இரவில் தூங்கும் முன் தலை நனையும் படி குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் மிகவும் நல்லது. இதனால் பகல் முழுவதும் நம்மீது ஒட்டிய தூசிகளும் வியர்வையின் மூலம் வந்து நம் உடலில் ஒட்டியிருக்கும் உப்பும் நீக்கப்படும். தூய்மையான விரிப்பு, தூய்மையான வீடு, தூய்மையான உடல், தூய்மையான எண்ணம் இவைகள் இருந்தால் சுகமான தூக்கம் வரும்.

 

25. இயற்கை மருத்துவத்திற்கும், இயற்கை வாழ்விற்கும் படிப்பறிவு தேவையா?

நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல பழக்கங்களை கடைப்பிடிங்கள். உடலுக்கு வேலை கொடுங்கள். எளிமையான வாழ்வை விரும்புங்கள். இயற்கையிடமும், இயற்கை படைத்த உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள். இவைகள் தான் இயற்கை மருத்துவத்தின் தத்துவங்கள். இவைகளை கற்றுக் கொடுக்க படிப்பறிவு தேவையில்லை. இயற்கை அறிவே போதும். மற்ற ஜீவராசிகள் பள்ளியில் சென்று படிக்கவில்லை. கல்லூரிகளில் படித்து பட்டம் பெறவில்லை. அவைகள் ஏன் நோயில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறது தெரியுமா?. அவைகள் இயற்கை உணவுகளை மட்டும் உண்பதால் இயற்கை அறிவு வழி காட்டுகிறது. மனிதர்கள் இயற்கை உணவுகளை உண்ணாமல் சமைத்த தீய உணவுகளை உண்பதால் இயற்கை அறிவை இழந்து பல துன்பங்களை அனுபவித்து வாழ்கிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

 

நலன் : நலன் தரும் நல்ல கேள்வி பதில்கள் - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : Good questions and answers for welfare - Tips in Tamil [ Health ]