
ஒன்பதாவது படிக்கும் மகன் வகுப்பில் இரண்டாம் ரேங் வாங்கியிருந்தான். தந்தை சொன்னார். மகனே படிப்பதில் ரேங்கிற்காக படிப்பதைவிட நீ உன் பாடம் தொடர்பான புத்தகங்கள் நூல் நிலையத்தில் இருக்கின்றன. அவற்றைப்படி, அறிவு விரிவடையும். கிணற்றுத் தவளையாக இருக்காதே.
எப்படி பட்ட பாடங்களை
படிக்க வேண்டும்?
ஒன்பதாவது படிக்கும்
மகன் வகுப்பில் இரண்டாம் ரேங் வாங்கியிருந்தான்.
தந்தை சொன்னார். மகனே
படிப்பதில் ரேங்கிற்காக படிப்பதைவிட நீ உன் பாடம் தொடர்பான புத்தகங்கள் நூல் நிலையத்தில்
இருக்கின்றன. அவற்றைப்படி, அறிவு விரிவடையும். கிணற்றுத்
தவளையாக இருக்காதே.
ஒருவர் ஒரு நூலை
வெளியிட பல நுற்களைப் படிக்க வேண்டும். அது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
பிறகு நூலை தயாரித்து வெளியிட இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம். அந்த உழைப்பின் பலனை அந்த
நூலை நீ படிப்பதால் மிக எளிதாக பெறலாம். பாட புத்தகத்தையும் பாடங்களைத் திரும்பத்
திரும்ப படி. அப்பொழுதுதான் பாடம் நன்றாகப் புரியும். பாடத்தைப் புரிந்துக்
கொள்ளாமல், கேள்வி பதிலை மட்டும் படித்து வாந்தி எடுப்பதில் பயன் என்ன இருக்கிறது.
ஒவ்வொரு நாளையும் தேர்வுக்கு எப்படி படிப்பாயோ, அதுபோலப் படி. நல்ல
பயனைப் பெறுவாய்.
வாழ்க்கையில் யாருக்கு
எந்த வகையில் வளைந்து
கொடுக்கிறோம் என்பதில்
கவனமாக இருக்க வேண்டும்........
இல்லையெனில் நம்
வாழ்க்கை கேள்விக்குறி
ஆகிவிடும்.....!!!!!!
பெருமை என்பது உன்னை 
விடத் திறமைசாலிக்குக்
நீ கைதட்டுவதில் அல்ல.....
அவனையும் உனக்காகக் 
கைதட்ட வைப்பது தான்....!!!!
ஒருவர் உங்களை நிராகரிப்பதில் முக்கியத்துவம் காட்டினால்.....
நீங்கள் அவர்களை மறப்பதில் 
முன்னோடியாக இருந்து
விடுங்கள்.....!!!!!
தூக்கிப் போட்டால் துவண்டு
விடாதீர்கள்....!!!!
ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி
விடாதீர்கள்....!!!!
உங்களுக்கான நாள்
ஒருநாள் அமையும்....!!!!
என்ன செய்யக்கூடாது
என்பதில் தெளிவாக
இருந்தால்....,
என்ன செய்ய வேண்டும்
என்பது தானாக புலப்படும்.....
செய்வதை திருந்தச் 
செய்தால் போதும்.....!!!!!
வெற்றி பெற்ற மனிதனாக
வாழ்வதை விட.....
மற்றவர்களுக்கு
உபயோகமுள்ள 
மனிதனாக வாழ முயற்சி
செய்வதே உண்மையான
வாழ்க்கை.....!!!!!
நாம் ஒருவருக்காக
எல்லாவற்றையும் விட்டுக் 
கொடுக்கிறோம் என்றால்.....
நாம் மட்டுமே அவர்களை
நேசித்து ஒரு பலனும் இல்லை.....
அவர்களும் நம்மை
உண்மையாக நேசித்திருக்க
வேண்டும்......!!!!!
பாதைகள் எந்த மாற்றமும்
தருவதில்லை....
பயணிக்கும் முறைகளே..
மாற்றத்தையும் உயர்வையும்
தரும்.....!!!!!
நீங்கள் மற்றவர்களை விட
பெரியவர்கள் தான்....
ஆனால்....
மற்றவர்களை சிறியவர்கள்
என் எண்ணி விடாதீர்கள்....!!!!
மற்றவர்களை கைப்பற்றுவதை விட....
உங்களை நீங்களே
கைப்பற்றுவது தான்
மிகப் பெரிய இலக்கு.....!!!!!
 "பயணங்கள்
நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கின்றன" – பெஞ்சமின்
டிஸ்ரேலி.
அந்தப் பெரிய மலை அடிவாரத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், தான் மூங்கில் மற்றும் தழைகளால் கட்டமைத்திருந்த அந்தக் குடிலையும்
பசுமையான வயலில் விளைவித்திருந்த தானியங்களின் வளர்ச்சியையும் கண்டு
பெருமிதத்துடன் அலைபேசி வாயிலாக தனது பெற்றோர்களுக்கு காணொளி பதிவாக
காண்பித்திருந்தான்.
அவனின் தந்தை அதற்கு மறுமொழி அனுப்பி இருந்தார் "நீ வெற்றி
பெற்று விட்டாய் மகனே. நினைத்ததை சாதித்து விட்டாய். மகிழ்ச்சி" என்று. அவன்
நினைத்துப் பார்த்தான். தந்தை தன்னைப் பாராட்டியது அவனுக்குள் பெரும் மகிழ்ச்சியை
உண்டு செய்தது. ஏனெனில் மெத்தப் படித்திருந்த அவனின் மகிழ்ச்சி பயணங்களில் மட்டுமே
என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.
ஒரு கட்டத்தில் பல லட்சங்கள் வருமானம் மிக்க  தனது பணியை விட்டுவிட்டு தான் சேர்த்து
வைத்திருந்த பணத்தின் மூலம் பல திசைகளில் பயணிக்க ஆரம்பித்தான். பயணத் திட்டத்தை
தன் பெற்றோரிடம் கூறியபோது அவன் தந்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. "உன்
அலுவலகத்தில் கிடைக்காத வெற்றி எப்படி உன் பயணத்தின் மூலம் கிடைக்கும்" என்று
வாதாடினார் அவர். அவன் எதிர்த்து வாதாடவில்லை. சொல்வதை விட செயலில் இறங்கி
சாதித்து காட்டுவதே வெற்றியின் முதல் படி என்று உணர்ந்தவன் அவன். தந்தையிடம் விடை
பெற்று விட்டு பயணிக்க தொடங்கினான். ஒவ்வொரு பயணத்திலும் அவன் கற்றுக் கொண்ட அநேக
வழிகள் அவனுக்கான  களத்தை அமைத்துக்
கொடுத்தது.
இதோ தன் இடையறாத பயணங்களினால் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதுடன்
பசுமை கொஞ்சும் இந்த மலையடிவாரத்தை அவன் தனக்கானதாக தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
இதில் வசிக்க ஒரு குடிலை அமைத்துக் கொண்டான். விவசாயத்தைக் கற்று இன்று ஒரு
விவசாயியாக அவன் மிளறுகிறான். அவன் தந்தை வாயாலே பாராட்டையும் பெற்று விட்டான்.
அவன் தன் நண்பனிடம் கூறியது இது,
நான் "வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசித்து ரசித்து
ஜெயிக்கும் வழியை கண்டுபிடிக்கிறேன் என் பயணங்களில் மூலம்".
இயற்கை நம்மை ஓரிடத்தில் தேங்க விடாமல் தொடர்ந்து இயங்க வைக்கும்
தன்மை கொண்டது.  இதை புரிந்து கொண்டால்
நமது பயணங்களை ஆக்கபூர்வமான குறிக்கோளை நோக்கிய பயணமாக அமைத்து, நமது சக்தியை தகுந்த முறையில் செலவு செய்து நல்ல அனுபவங்களைப் பெற
முடியும்.
புது முயற்சிகளும், செயல்களும்
சவால்களோடுதான் இருக்கும் என்ற புரிதலுடன், அவற்றை மனவுறுதியோடு
எதிர்கொள்வதுதான் வெற்றிக்கு வழி.
பயணங்களின்போது  நாம்
சந்திக்கும் பலதரப்பட்ட சூழல்கள்,
பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள், நாம் அறியாத பல வாய்ப்புகள் இவையே நமக்குள் இருக்கும் திறமையை  ஊக்குவிக்கும் காரணிகளாகும். பயணங்களின் புதிய
சூழல்கள் நம்மைப்பற்றி நாமே பல்வேறு கோணங்களில் 
புரிந்துகொள்ள  நல்லதொரு வாய்ப்பாக
அமையும். முக்கியமாக பயணங்கள் நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக்
கொடுப்பது உண்மை.
ஆகவே,
பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவற விடாமல் பயணித்து
வாழ்வை ரசித்து வாழ்வில் வெற்றி காண்போம்.
இன்று காலையிலிருந்து 5 முறையாவது இதைப்
படித்திருக்கிறேன்.  மிகவும் உண்மையாகவும்
அழகாகவும் எழுதப்பட்டுள்ளது
.
 💛 நம் பயணம் குறுகியது💛 நமது நினைவில் வைக்கவும்
.
 ஒரு பெண் பேருந்தில் ஏறி
ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.  
.
 அந்த நபர் அமைதியாக
இருந்தபோது, அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.
.
 அந்த மனிதன் அவருக்கு
புன்னகையுடன் பதிலளித்தார்: ஏனெனில்
 எனது பயணம் மிகக்
குறுகியதாக இருப்பதால் முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰
.
 இந்த பதில் அந்தப் பெண்ணை
மிகவும் யோசிக்க செய்தது,
மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று
நினைத்தார். 💛
.
 இவ்வுலகில் நமது நேரம்
மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான
அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.
.
 யாராவது உங்கள் மனதை
காயப்படுத்தினார்களா?  அமைதியாய்
இருக்கவும்.ஏனெனில்
 நம் பயணம் மிகவும்
குறுகியது.💛
.
 யாராவது உங்களைக்
காட்டிக்கொடுத்தார்களா,
மிரட்டினார்களா,
ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
 ஓய்வெடுங்கள் - மன
அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.ஏனெனில்
நம் பயணம் மிகவும் குறுகியது.💛
.
 காரணம் இல்லாமல் யாராவது
உங்களை அவமானப்படுத்தினார்களா?
 அமைதியாய்
இருக்கவும்.  புறக்கணிக்கவும்.ஏனெனில்
 நம் பயணம் மிகவும்
குறுகியது.💛
.
 உங்களுக்குப் பிடிக்காத
கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?
 அமைதியாய்
இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும்,மறக்கவும் பழகி
கொள்ளுங்கள்.ஏனெனில்
 நம் பயணம் மிகவும்
குறுகியது💛
.
 சிலர் நமக்கு என்ன
பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,
 அதை நாம் நினைத்தால் தான்
பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.
 நாம் ஒன்றாக பயணம் செய்வது
மிகவும் குறுகியதாக உள்ளது.💛
.
 நம் பயணத்தின் நீளம்
யாருக்கும் தெரியாது.  நாளை என்பதை யாரும்
பார்க்கமுடியாது.  அது எப்போது
நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.
 நாம் ஒன்றாகப் பயணம்
செய்வது மிகக் குறைவு💛
.
 நண்பர்களையும்
குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக
ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம்.  அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும்
அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும்,
மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம்.ஏனெனில் நம் பயணம் மிகவும்
குறுகியது💛
.
 உங்கள் புன்னகையை
அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க
உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛
.
எப்போதும் மறக்காதீர்கள்
 உங்கள் பயணம் மிகவும்
குறுகியது 💛
.
நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..
.
உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்.
எவன் தலை போனாலும் எனக்கென்ன?...
அன்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான்  இந்த உலகம் இயங்கிக்கொண்டு   இருக்கின்றது . நாம்  வாழும்     
இந்த உலகத்தில்    இதுவரை எத்தனை
விதமான அனுபவங்களைக் கண்டிருப்போம். அதற்க்குக்   
காரணம் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான குணாதிசயம்    கொண்டவர்களாய்   என்றுமே   
இருப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் எண்ணங்கள்  வளர்ந்துகொண்டேதான்   இருக்கும். ஆனாலும்   நாம் வாழும் இப் புவிதனில் எம்  வாழ்க்கை  
என்பது   எப்போதும் பிறருக்கு நன்மை
அளிக்கக் கூடியதாய்   அமைவதே சிறப்பாக்கும்
.
சுயநலம் மிக்க எண்ணங்கள் உடையவர்களாய் நாம் இந்த வாழ்வைத்
தொடரும்போது எம் மனம் எப்போதும் ஓர் குறுகிய வட்டத்தினுள் மட்டுமே பிரவேசிக்க
முடியும்  என்பதையும் இதனால்    இந்தப் பிரபஞ்சத்தில்  உள்ள பல சந்தோசமான மன மகிழ்வைத் தரக்கூடிய
உணர்வுகளை உறவுகளை என்றுமே    இழந்துதான்
விடைபெறுகின்றோம் என்பதையும்  பலரும்  நினைவில் கொள்ள வேண்டும். விட்டுக்
கொடுத்து   நடத்தல், வீணான யுத்தங்களை
தவிர்த்தல். இயற்கையை ரசித்தல் .சக மனிதர்களின்  
உணர்வுகளை மதித்து நடத்தல் போன்ற சிறப்பான குணாதிசயங்களை நாம் என்றுமே
வளர்த்துக்கொள்ளல் என்பது மிக மிக அவசியமான ஒன்று .
 மனிதர்களுக்கும்
மிருகங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அது என்னவென்றால் அது வேறொன்றும்
இல்லை. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடும்போது மனிதர்கள்  கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர்கள் புரிந்துணர்வு
அதிகம் உடையவர்கள் என்பதைத் தவிர இங்கே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என்னதான்
இருக்கின்றது!இன்றைய காலத்தில் இந்த ஒரு சில உயர்ந்த பண்பும் அரிதாகிக்கொண்டே
வருகின்றது என்பதை இங்கு நாம் எல்லோரும் அறிவோம். நாகரீகம் என்ற     போர்வையில் சிதைந்து போகும் மனிதனின்
பண்புகளைக் கண்டு    நாம் மனம் நோகத்தான்
முடியுமே தவிர வேறு வழிகள் ஏதேனும் உண்டா 
சொல்லுங்கள்?
பெரும் பெயரும் புகழும் பெறுவதற்க்கென்றே மனிதன் பொய்யிலும்
புரட்டிலும் உழல்கின்றானே இவன் செயல்களைக் கண்டு நாம் அமைதி கொள்வது என்பதும்  எந்தவகையில் சாத்தியமாகும்?.. பதவி வெறியும்
பொறாண்மையும் கொண்டு அலையும் மனிதன் அன்றாடம் செய்யும் தவறுகளால் இன்று உலகில்
எத்தனை உயிர்கள் தினமும் பலியாகிக்கொண்டே இருக்கின்றது. இந்தப் பூமிப் பந்தில்
அவதரித்த எம் இனத்தால் இன்று நடத்தப்படும் யுத்தங்களால் நாம் இழந்தவை எத்தனை
எத்தனை !...மனிதன் மனிதனை சித்திரவதை செய்வதற்கென்றே எத்தனை விதமான கொடிய
கண்டுபிடிப்புகளை மிகவும் சிரமப்பட்டு கண்டு பிடிக்கின்றான் !...ஆனால் மிருகங்கள்
அவ்வாறு எதையும் கண்டு பிடித்ததுண்டா ?...தன்னை நெருங்கி வரும் மனித மிருகத்திடம் இருந்து எப்போதுமே தனக்கு
ஒரு பாதுகாபிற்க்காகவே அவை எம்மைத் தீண்டுகின்றனவே தவிர எம்மைத் தேடி அலைகின்றனவா?....மனிதன் நினைக்கின்றான்
உலகில் படைக்கப்பட்ட எல்லாமே முதலில் எனக்கு மட்டுமே சொந்தம் என்று.அதனால்தான்
அவன் பிற உயிர்களை என்றுமே துச்சமாக மதித்து நடக்கின்றான் .ஆனாலும் நமது மூதாதையர்
யார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம் .
உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் கொஞ்சமேனும் உள்ளத்தால் நாம்
வேறுபட்டு உள்ளோமா?......அடிக்கடி கொப்புக்கு 
கொப்பு  தாவுவது எம் இனத்துக்கே
உள்ள சிறப்புக் குணாதிசயம் .இது ஒன்றே போதும் எம்மை நாமே இனம் கண்டு கொள்வதற்கு. பணமோ
பதவியோ வாழ்வில் எம்மை என்றுமே உயரிய இடத்திற்கு கொண்டு செல்லாது .எம் மனம் எம்
குணம் எப்போதுமே தூய்மையாக இருத்தல் வேண்டும். பிறரைப் பார்த்து நையாண்டி செய்வது
எப்போதும் தனக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பது இதுபோன்ற    தீய  
ஒழுக்கங்களால்  மனித    மனங்களில் ஒரு தேவை அற்ற வீண் விகார புத்தி
தோன்றுவதால் வரும் துயர் என்பதை கணக்கில் இட்டால் என்றுமே தாங்காது. ஆக ஒரு மனிதன்
இன்னொரு மனிதனிற்கு தன்னால் ஆகக் கூடிய எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது
போனாலும் கவலை இல்லை. பிறருக்கு  தீங்கு
செய்ய நினைப்பதைக் கைவிட்டாலே அவன் புனிதனாக மண்ணில் மதிக்கப்படுவான். வாழ்வில்  நாம் அனைவரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் இங்கு
வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். எம் வாழ்க்கை என்பது எப்போதுமே நாம் திட்டமிட்டபடி
நிகழ்வதில்லை. பல சமயங்களில் பெருத்த தோல்வியும் அவமானமும் எம்மைத் தேடி வரும்
சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எம்மை நாம்
பாதுகாத்துக் கொள்ள எம் முயற்சிகள் யாவும் நேர்வழியைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர
தவறான பாதையில் பிறரைப் பாதிக்கும் வகையில் என்றுமே நடந்துகொள்ளக் கூடாது என்பதே
எனது ஆணித்தனமான கருத்து .
ஆயிரம் முறை முயற்சித்து ஒரு முறை கட்டிய வீடு  ஆயினும்    
என்ன!..
போகி வந்ததும் துடைத்தெறியப்படும் வெறும் தூசி என்றே நினைப்பதால் 
இதன் கனவுகள்    கூட    சிதைந்து   
போகும்.  ஆனாலும்  முயற்சி    
மட்டும் 
மேலும் மேலும் தொடரும்  
புதிய வெற்றிப்படிகளை நோக்கி !!!..................... 
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை
பேர்..?
கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.
எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு
மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.
எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும்
அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.
“ஒன்றை நினைக்கின்
அதுஒழிந்திட டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நிறையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
என்யாளும் ஈசன் செயல்”
என்பது முன்னோர் பழமொழி.
“கற்பகத்தைச்சேர்ந்தார்க்குக்
காஞ்சிரங்ககாய் ஈந்தேன்
முற்பவத்தில்செய்தவினை”
இதுவும் அவர்கள் சொன்னதே.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம்
நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.
மேடும் பள்ளமுமாக ஆழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய
வீழ்ச்சியில்லை.
ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு
காத்திருக்கிறது.
என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,என் எழுத்து வண்டி
இருப்பத்தைந்தாண்டுக் காலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தான் ‘சகடயோகம்’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ
எழுச்சியில் மயகமோ என்றார்கள் நம் முன்னோர்கள்.
‘ஆண்டவனின் அவதாரங்களே
ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.
தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று
தெரியவில்லையே!
அதனால் வந்த வனைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!
சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவிலையே!
அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!
முக்காலும் உணர்ந்த கௌதமனுகே,பொய்க்கோழி எது, உண்மைக் கோழி எது என்றுதெரியவில்லையே!
அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.
ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக கதைகளை நமது
இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும்
முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி
வைத்தார்க்க்.
இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.
ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின்
வாழ்க்கையையும் விட்டதிலை.
நான் சொல்ல வருவது, ‘இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித்
தருவது என்பதையே.
துன்பத்தைச்சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை
வரப்போகிறது?
அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை
வேண்டிக்கொள்; காலம்
கடந்தாவது அது நடந்துவிடும்.
தர்ம்ம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்முட்டாள்களல்ல.
கஷ்டத்திலும் நேர்மையாக இரு.
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.
தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : எப்படி பட்ட பாடங்களை படிக்க வேண்டும்? - வாழ்வை ரசித்து ஜெயிக்க ஈஸியான வழி இதோ! [ ] | Welfare : How to study degree courses? - Here's an easy way to enjoy life and win! in Tamil [ ]