மனித இனத்தை தவிர மற்ற அனைத்து உயிர்களிடமும் அன்று முதல் இன்றுவரை தாய்மையின் கடமை உணர்வில் சிறிதும் குறையவில்லை.
இன்று தாய்மை இருக்கிறதா?
மனித இனத்தை தவிர
மற்ற அனைத்து உயிர்களிடமும் அன்று முதல் இன்றுவரை தாய்மையின் கடமை உணர்வில்
சிறிதும் குறையவில்லை. மனிதன் எத்தனையோ கற்பனை கடவுள்களை உருவாக்கியிருக்கலாம்.
மனிதன் முதலில் கண்ட கடவுள் பெண்தான். பெண் என்னும் கடவுள் இல்லையென்றால் மனித
இனம் இல்லை. மனித இனத்தை உருவாக்க ஆணின் துணையும் அவசியம் வேண்டும். ஆணைவிட
பெண்ணுக்குத் தாள் குடும்ப சுமை அதிகம். முன் காலத்தில் பெண்ணிடம் தாய்மை நிறைவாக
இருந்தது. இன்று தாய்மை மிக மிக குறைந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தாய்மை
முழுமையாக அழிந்துவிடும். குழந்தையை பெறுவதால் மட்டும் தாயாகி விடமுடியாது. பெற்ற
குழந்தையை நோயில்லாமல் வளர்த்தால் தான் தாய்மை நிலையை அடைய முடியும். பெற்ற
குழந்தையை பேணி வளர்ப்பதில் மற்ற உயிரினங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாக
செயல்படுகின்றன. பெண் பறவை முட்டையிடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து
அடைகாக்கின்றன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. எந்த வேளையில் எந்த
உணவுகளை எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதை சரியாக கொடுத்து வளர்க்கின்றன.
பிறந்தவுடன் குஞ்சுகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும். உடல் பருமனாக வேகமாக வளர்ச்சி
அடைய என்ன உணவுகள் கொடுக்க வேண்டும். பருமனாக உடல் வளர்ச்சி அடைந்ததும் உடல்
முழுவதும் ரோமங்கள் முளைக்கும் போது என்ன உணவு கொடுக்க வேண்டும். ரோமங்கள்
முளைக்கும் போது உடல் பருமனைக் குறைக்க என்ன உணவு கொடுக்க வேண்டும். குஞ்சுகள்
பறக்க துவங்கும் போது என்ன உணவு கொடுக்க வேண்டும். பறவைகளுக்கு உடல் கனமில்லாமல்
இருந்தால் தான் வானில் பறக்க முடியும். இதுபோல் இன்னும் சில குழந்தை வளர்ப்பு
முறைகளை தாய்ப்பறவை பள்ளியில் சென்று படித்ததா? அல்லது
தன் இனத்திடம் பயிற்சி பெற்றதா? உலகம் முழுவதும் எண்ண
முடியாத அளவுக்கு பறவை இனங்கள் வாழ்கின்றன. அவைகள் அனைத்தும் தாய்மையின் கடமையை
சரியாக செய்கின்றன.
முதலை முட்டையிடும் உயிரினம். ஆனால் முட்டைகளை அடைகாக்காது. பூமியில் குழி தோண்டி சுமார் 30 முட்டைகள் வரை இட்டு மண்ணால் மூடிவிடும். எந்த முட்டையாக இருந்தாலும் உஷ்ணம் இருந்தால்தான் குஞ்சு உருவாகும். முதலையின் முட்டைகளுக்கு பூமித்தாயின் உஷ்ணம் உதவி செய்கிறது. இயற்கையின் செயல்பாட்டை பார்த்தீர்களா? முதலை முட்டையிட்டதும் முட்டைகளை புதைத்திருக்கும் பகுதியை சுற்றித்தான் வாழ்க்கை நடத்தும், மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் முட்டைகளில் குஞ்சுகள் வளர்ச்சி அடைந்துவிடுகிறது. மண்ணின் கனம் முட்டைகளை அழுத்திக்கொண்டிருப்பதால் முட்டைகளுக்குள் இருக்கும் குஞ்சுகளால் ஒட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாது. அப்போது முட்டைகளுக்குள் இருக்கும் குஞ்சுகள் கத்த ஆரம்பிக்கும். மண்ணுக்குள் புதைக்கப்பட்டு முட்டைகளுக்குள் இருந்து கொண்டு கத்தும் குஞ்சிகளின் சப்தம் தாய் முதலைக்கு மட்டும் கேட்கும். உடனே தாய் முதலை ஓடி வந்து மண்ணை தோண்டி முட்டைகளை வெளியேற்றும். முட்டைகளுக்குள் இருக்கும் குஞ்சுகள் முட்டைகளை உடைத்துக்கொண்டு வெளியே வரும். முட்டையை விட்டு குஞ்சுகள் வெளியே வந்தவுடன் தண்ணீர் அருகில் இருந்தால் உடனே தண்ணீருக்குள் சென்று விடும். தண்ணீர் சற்று தூராத்தில் இருந்தால் தாய் முதலை குட்டிகளை தன் வாய்க்குள் வைத்துக் கொண்டு சென்று பாதுகாப்பாக தண்ணீரில் விட்டுவிடும்.
முதலை
தன்குட்டிகளை வாய்க்குள் அள்ளிக் கொள்வதை சிலர் பார்த்துவிட்டு முதலை தன்
குட்டிகளையே விழுங்குகிறது என்பார்கள். குட்டிகளை தண்ணீரில் கொண்டு விடுவதை
அவர்கள் பார்த்திருக்க மோட்டார்கள். முதலையின் தாய்மை உணர்வை பரிசோதிக்க
ஆராய்ச்சியாளர்கள் ஒரு முயற்சி செய்தார்கள். ஒரு முதலை மண்ணைத் தோண்டி முட்டைகளை
இட்டு மூடிவைத்தது. சில நாட்கள் சென்றதும் முட்டைகள் புதைக்கப்பட்டிருக்கும்
இடத்தை சுற்றி தாய் முதலை முட்டைகளை தோண்டி எடுக்க முடியாதபடி ஒரு இரும்புக்
கூண்டை வைத்தார்கள். குஞ்சுகள் வளர்ந்தவுடன் முட்டைக்குள் இருந்து கத்த
ஆரம்பித்தன. குஞ்சுகள் கத்துவது தாய்முதலைக்கு கேட்டவுடன் மண்ணைத் தோண்ட முட்டைகள்
புதைக்கப்பட்ட இடத்தில் இரும்புக் கூண்டை பார்த்து சுற்றி சுற்றி வந்தது.
குஞ்சுகள் தாயை அழைக்கின்றன. காப்பாற்ற முடியாமல் தாய் தவியாய் தவிக்கிறது.
தாய்மைக்கு வீரம் பிறக்கிறது. தாய் முதலை தன் உடல் பலத்தையெல்லாம் ஒன்று கூட்டி
கம்பிக் கூண்டில் பலமுறை மோதிப் பார்க்கிறது. சிறிதும் சோர்வடையவில்லை. விடா
முயற்சியும் உடல் பலமும் தாய்மையின் கடமையும் ஒன்று சேர்ந்ததால் கம்பிக்கூண்டு
சாய்க்கப்படுகிறது. அதன்பின் வேகமாக மண்ணைத் தோண்டி முட்டைகளை வெளியே எடுக்கிறது.
உடனே முட்டைகளை உடைத்துக்கொண்டு குஞ்சுகள் வெளியேறி பூமித்தாயின் மடியில்
தவழ்கின்றன. இதுவல்லவா தாய்மை. இங்கே குறிப்பிடுவது காட்டில் வாழும் உயிர்களைப்
பற்றி. பன்றி சுமார் பதிமூன்று குட்டிகள் வரை ஈன்று அத்தனைக்கும் பாலூட்டி
பாதுகாத்து வளர்க்கிறது. சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தெருக்களிலும் குப்பைகளிலும்
கிடைக்கும் கழிவு உணவுகளை சாப்பிட்டு வாழும் தெருநாய் எட்டுக் குட்டிகள் வரை ஈன்று
அத்தனைக்கும் பாலூட்டி பார்ப்பதற்கு அழகாக தளதளவென்று வளர்க்கிறது.
வீட்டுக்குள்ளும். காட்டுக்குள்ளும் பயந்து பதுங்கி ஒழிந்து வாழும் எலி ஒன்பது
குட்டிகள் ஈன்று பாலூட்டி அழகுப் பதுமைகளாக வளர்க்கிறது. இதுபோல் மற்ற பாலூட்டி
உயிர்கள் அனைத்தும் தாய்மையின் கடமையை சரியாக செய்கிறது. பாலூட்டி உயிர்கள்
அனைத்தும் தாய்தான் தன் குட்டிகளை வளர்க்க வேண்டும். ஆணின் கடமை உடலுறவு கொள்வது
மட்டும்தான். குட்டிகளை வயிற்றுக்குள் சுமந்து ஈன்று வளர்த்து வழிகாட்டுவது
தாய்தான். இயற்கைத்தாய் தான் உருவாக்கிய பிள்ளைகளை பேணி வளர்ப்பது போல் பாலூட்டி
உயிர்களும் தன் பிள்ளைகளை பேணி வளர்க்கிறது. பாலூட்டி உயிர்கள் அனைத்தும் இயற்கை
தாய்க்கு சமம்.
மற்ற பாலூட்டி
உயிரினங்கள் கர்ப்பமடைந்தவுடன் உடலுறவு கொள்வதில்லை. தீய உணவுகளை தின்று தன்
வயிற்றுக்குள் வளரும் குட்டிகளை பலகீனமாக வளர்க்கவில்லை. தாய் நோயாளிகளாக
வாழ்வதில்லை. கர்ப்பமாக இருக்கும்போது உடலில் ஊசிகுத்திக் கொள்வதில்லை. மருந்து
மாத்திரைகள் விழுங்குவதில்லை. பதிமூன்று குட்டிகள் ஈன்றாலும் பிரசவத்தின் போது
பிறர் உதவியை நாடுவதில்லை. தன் உணவுக்காக பிறர் தயவை எதிர்பார்ப்பதில்லை. பல
குட்டிகள் ஈன்றாலும் எந்தக் குட்டியையும் பட்டினி போடுவதில்லை. ஊனமான குட்டிகளை
பெறவில்லை. மற்றொரு உயிரின் பாலை தன் குட்டிகளுக்கு கொடுப்பதில்லை. வற்றாமல் பால்
சுரக்கும் மார்பகங்களை சுமக்கின்றன. பால்புட்டியை சுமக்கவில்லை. பிள்ளைகளை பெற்று
தெருக்களிலும் குப்பைத் தொட்டியிலும் கக்கூசிலும் போடவில்லை. பெற்ற பிள்ளையை விலை
பேசி விற்கவில்லை. வாடகைத் தாயாக வாழவில்லை. பெற்ற பிள்ளையை காட்டி பிச்சை
எடுப்பதில்லை. வயிற்றில் வளரும் கருவை அழிப்பதில்லை. பெற்ற பிள்ளையை கொலை
செய்வதில்லை. பல பிள்ளைகள் பெற்றாலும் தன் பிள்ளைகளுக்குள் ஏற்றத் தாழ்வு
பார்ப்பதில்லை. பெற்ற பிள்ளையின் உடலில் ஊசி குத்த விடுவதில்லை. நச்சு
மருந்துகளையும் மாத்திரைகளையும் கரைத்து பிள்ளையின் வாயில் ஊற்றவில்லை. தீய
உணவுகளைக் கொடுத்து நோயாளிகளாக வளர்க்கவில்லை. தான் பெற்ற பிள்ளைகளை அடுத்தவர்களை
வளர்க்க விடுவதில்லை, மற்ற
உயிர்கள் தன் பிள்ளைகளை வளர்த்து வழி காட்டும் வரை தாய்மையின் கடமையை சரியாக
செய்கின்றன. முன் காலத்தில் வாழ்ந்த மனித இனத்தின் தாய்மையும் சரியாக செயல்பட்டது.
இன்றைய மனித வாழ்வில் நம் தாய் திருநாட்டில் தமிழ்நாட்டில் முழுமையான தாய்மையின்
கடமை உணர்வுடன் செயல்படும் பெண் உண்டா? பிள்ளையை பெறுவதால்
மட்டும் தாயாகிவிட முடியாது. பேணி வளர்த்து நல்வழி காட்டினால் தான் தாயாகிறாள்.
அறிவுள்ள தாய் இருக்கும் வீடுதான் கோவில். அவள்தான் தெய்வம். அதனால்தான் அன்னையைப்
போல் தெய்வமில்லை என்று ஒரு கவிஞர் அன்று சொன்னார். பிறக்கும்போது எந்தக்
குழந்தையும் நல்ல குழந்தை தான். அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை
வளர்ப்பதில்தான் என்று இன்னொரு கவிஞர் சொன்னார். பெண்களே தாய்மையை செழிக்க
வையுங்கள். அழிக்காதீர்கள். தாய்மை அழிந்தால் விரைவில் மனித இனம் பல துன்பங்களை
அனுபவித்து விரைவில் அழிந்துவிடும். இதைத்தான் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்
என்றார்கள். மீண்டும் தாய்மை தழைத்து செழித்து வளரவேண்டுமானால் பெண்கள் இயற்கை
உணவுகளையும் எழிமையான சைவ உணவுகளையும் உண்ண வேண்டும். இதை இன்றைய பெண்ணினம்
ஏற்றுக்கொள்ளுமா? நூறு ஆண்களை நல்ல உணவு பழக்கத்திற்கு
மாற்றிவிடலாம். ஆனால் ஒரு பெண்ணைக் கூட நல்ல உணவுப் பழக்கத்திற்கு மாற்ற முடியாது.
இன்றைய பெண்களால் தான் மனித இனம் விரைவில் அழியப் போகிறது. எப்படியென்றால் தீய
உணவுகள் என்னும் பல ஆயுதங்களால்தான் கொல்லப்போகிறார்கள். இனிமையான சம்சாரம்
அமைந்தால் அதுதான் இன்பலோகம்.
பெண்ணை மதித்து
தாய்மையை போற்றுவோம்.!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : இன்று தாய்மை இருக்கிறதா? - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : Is there motherhood today? - Tips in Tamil [ Health ]