
இயல்பாக சென்று கொண்டிருக்கும் வாகனத்தை ஒரு பெண்ணை பார்த்தவுடன் விரட்டுவது.
வாழ்க்கை_ரகசியம் 
• இயல்பாக சென்று
கொண்டிருக்கும் வாகனத்தை ஒரு பெண்ணை பார்த்தவுடன் விரட்டுவது.
• உங்கள் மனைவி அல்லது
காதலியை சந்தேகத்தோடு கேள்வி கேட்காதீர்கள். நான் சொல்வதை நம்புங்கள் ஒவ்வொரு
பதிலும் மேலும் பத்து கேள்வியை கொண்டு வருமே தவிர உங்களை ஒருபோதும்
திருப்திப்படுத்தாது.
• அமேசான் அல்லது
பிளிப்கார்ட் செயலிகளை உங்கள் கைபேசியிலிருந்து உடனடியாக நீக்கிவிடுங்கள்.
இல்லையென்றால் தேவையற்ற பொருட்களால் உங்கள் வீடு நிறைந்துவிடும். நமக்கு தேவையான
பொருட்களை வாங்குவதை விட அவர்கள் கொடுக்கும் தள்ளுபடிக்காக வாங்கும் பொருட்களே
அதிகம்.
• உங்கள் பெற்றோரை
புண்படுத்தும் படியான சொற்களை பேசாதீர்கள் அவர்கள் மீது தவறே இருந்தாலும். நீங்கள்
அப்படி செய்யும் நாள் உங்களின் மிக மோசமான நாளாக அமையும்.
• உதவும் பொழுது இந்த
உதவியால் பின்னால் நமக்கு என்ன நன்மை நடக்கும் என்று யோசித்து உதவாதீர்கள்.
உதவுவதற்க்காக உதவுங்கள்.
• ஒரு சவாலான
சூழ்நிலையிலிருந்து தப்பித்து செல்ல வழி தேடாதீர்கள். வாழ்வின் சுவாரசியத்தை
இழந்துவிடுவீர்கள்.
• உங்களுக்கு பிடிக்காத
விடயங்களை ஒரு போதும் செய்யாதீர்கள். இருப்பது ஒரு வாழ்க்கை.
• அன்னையர் தினத்தன்று
முகநூலில் வாழ்த்து செய்தியை பதிவிடாதீர்கள். நேரில் வாழ்த்துச் சொல்லுங்கள்
முடியவில்லையா அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லுங்கள்.
• காதல் பாடல்களை
உங்கள் வாட்சப் ஸ்டேட்டஸ்-ல் வைப்பது தவறில்லை ஆனால் அதை அனைவரும் பார்க்க
வேண்டுமென்று நினைக்காதீர்கள். 
• உங்கள் சரீரம்
கேட்கும் அனைத்தையும் கொடுத்துவிடாதீர்கள். இந்த சரீரம் தற்காலிகமானது ஆனால்
உங்கள் ஆன்மா அழிவில்லாதது. சரீரம் கேட்பது அனைத்தயும் கொடுப்பதனால் நீங்கள்
உங்கள் ஆன்மாவை சேதப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
மரியாதை
தெரியாத நபர்களுடன் நெருங்கி பழகுவதை விட, மரியாதை
தெரிந்தவர்களுடன் தூரமாக பயணிப்பதே மேல்.
• வாழ்க்கையில் தடம் மாறும்போது தட்டிக்
கேட்பவர்களோடும், தடம் பதிக்கும்போது
தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள்.
• நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் பழகுங்கள்,
அவர்களை
தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலைகளை ஒதுக்கி பேசுபவர்களை நேசியுங்கள்,
அவர்களை
மறக்காமல் இருங்கள்.
• அடுத்தவர்கள் உங்களுக்கு கொடுக்கும் விமர்சனங்கள்
சரியானதாக இருப்பின் "திருத்தி
விட்டு" நகருங்கள். தவறாக இருப்பின் "சிரித்து
விட்டு" நகருங்கள்.
 Life is a long lesson in humility . 
🙏 தமிழர்
நலம் 🙏🌹
நலன் : வாழ்க்கை ரகசியம் - குறிப்புகள் [ ] | Welfare : Life is a secret - Tips in Tamil [ ]