வனவிலங்குகளும், கோடான கோடி உயிர்களும் வாழும் காடுகள் இயற்கை மணத்துடன் தூய்மையாக அமைதியாக அழகாக இருக்கின்றது.
அவசியம் தெரிய வேண்டிய காடுகளின் நலன்கள்:
வனவிலங்குகளும், கோடான
கோடி உயிர்களும் வாழும் காடுகள் இயற்கை மணத்துடன் தூய்மையாக அமைதியாக அழகாக
இருக்கின்றது. காடுகளில் மண் மணக்கிறது. மனிதர்கள் வாழும் நாட்டில் எல்லா
அயோக்கியத் தனங்களும் அதிகமாகி அமைதியை இழந்து கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது.
மனிதர்கள் வாழும் பகுதியில் மண் புழுத்து நாற்றமெடுத்துப் போய் கிடக்கிறது.
காட்டில் ஆற்றுநீர் தூய்மையாக ஓடுகிறது. நாட்டில் நாற்றமெடுத்த சாக்கடை
பெருக்கெடுத்து ஓடுகிறது. மணிதர்கள் இயற்கைக்கு செய்யும் கொடுஞ்செயல்களால் பல
நன்மைகள் செய்யும் தூய்மையான ஆற்றுநீர் காட்டில் வற்றிவிட்டது. ஆனால் நாட்டில்
சாக்கடைகள் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
காடுகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுடன் வாழ்கிறது. அதனால் உலகம் முழுவதும் உள்ள காடுகள் திறந்த வெளியாக இருக்கின்றது. ஒழுக்கம் நிறைந்த உயிரினங்கள் வாழும் காடுகளுக்கு கதவுகள் தேவையில்லை. பூட்டும் தேவையில்லை. மனிதர்கள் வாழும் நாட்டில் மட்டும் அயோக்கியத்தனங்கள் பெருகி ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை மளிதர்கள் வாழ்வதால் எங்கு பார்த்தாலும் பூட்டுகள். சைக்கிள்-கார்-பைக் - வீட்டுக்கதவு கேட் எங்கு பார்த்தாலும் பூட்டுகள். வீட்டு கதவுகளுக்கெல்லாம் பூட்டு போட்டாகிவிட்டது. மூன்றாவது கண் என்று சொல்லப்படும் வெப் காமிராக்கள் எல்லா இடங்களிலும் வைக்கப்படுகிறது. வீட்டிற்குள் இருக்கும் பீரோவுக்கு ஏன் பூட்டு? உங்கள் வீட்டுக்குள்ளே திருடனா? இத்தனை பூட்டுகளும் யாருக்கு பயந்து போடப்படுகிறது. மனிதர்களுக்கு பயந்து தான். வேறு எந்த உயிரினத்திற்கும் பயந்து அல்ல மற்ற உயிரினங்களும் தங்கள் உடலுக்கு உடைகள் என்னும் பூட்டுகள் போட்டு வாழவில்லை. மனித உடலுக்கு மட்டும் பல பூட்டுகள் ஏன்? மற்ற உயிர்கள் அன்று முதல் இன்று வரை ஒரே உணவை சாப்பிடுகிறது. அதனால் ஒழுக்கத்துடன் வாழ்கிறது. மனிதர்கள் அன்று சாப்பிட்ட உணவுகளை இன்று சாப்பிடுகிறார்களா? இல்லை. இன்றைய தீய உணவுகள் மனித ஒழுக்கத்தை அழித்துவிட்டது. அதனால்தான் மனித உடலுக்கு மட்டும் பல பூட்டுகள் போடும் நிலை வந்தது. நெருப்பை கண்டுபிடிப்பதற்கு முன் சமைக்காமல் இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த மனிதர்கள் உடை என்னும் பூட்டை உடலுக்கு போட்டு வாழவில்லை. மனிதர்கள் எல்லாவற்றிற்கும் பூட்டு போட்டு வாழ்கிறார்கள். வாய்க்கு மட்டும் ஏன் பூட்டு போடவில்லை? வாயால் தீய உணவுகளை தின்று திமிர் ரத்தத்தை உருவாக்கி மனிதர்கள் பேசும் அசிங்கமான கெட்ட வார்த்தைகள் எத்தனை தெரியுமா? இன்றைய ஆண்களும் பெண்களும் அசிங்கமாக திட்டி பேசும் வார்த்தைகள் அனைத்தையும் பத்தகத்தில் எழுதினால் புத்தகமே நாறிப்போகும். தமிழன் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்! தமிழ் பேசுவதை பொறுமையாக கொள். தமிழ்மொழியே உயர்ந்த மொழி. நம்நாட்டின் பெயரை பார்த்தீர்களா தமிழ்நாடு. பல பெருமைகள் கொண்ட தமிழை பயன்படுத்தி உங்கள் வாயால் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தமிழை இழிப்படுத்தாதீர்கள்.
மலைகளிலிருந்து விழும் அருவிகள் ஓடும் ஆறுகள் இவைகள் காடுகளில் மலைகளில் வாழும் உயிர்களுக்காகவே இயற்கை அன்னையால் படைக்கப்பட்டவை, மேட்டுப்பகுதிகள் அனைத்தும் காடுகளில் வாழும் உயிர்களுக்கு, சமமான தரைப்பகுதி மனிதர்களுக்கு. இதுதான் இன்றைய இயற்கையின் அமைப்பு. மேட்டுப் பகுதியில் வாழும் உயிர்கள் சம தளத்தில் வாழும் மனிதர்கள் பகுதிக்கு வருவதில்லை. மனிதர்கள் மட்டும் மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அங்கே வனவிலங்குகள் நிம்மதியாக வாழுமா? வனவிலங்குள் இயற்கையின் சொல்லை மீறி காட்டைவிட்டு நாட்டுக்குள் வருகிறதா? பூமியை நாறடித்தாகி விட்டது. மலைப்பகுதிகளையுமா நாரடிக்கவேண்டும். மலை அருவியில் குளித்தால் தான் அழுக்குபோகுமா? சிலர் சொல்கிறார்கள். அருவி தண்ணீர் மூலிகை கலந்ததாம். அதில் குளித்தால் நோய்கள் குணமாகுமாம். அருவியில் குளித்து எத்தனை பேர் நோயில்லாமல் வாழ்கிறார்கள். நோய்க்கிருமிகள் உள்ள மலம் - சிறுநீர் - உமிழ்நீர் இவைகளை காடுகளில் மலைகளில் கழித்து அசுத்தப்படுத்தினால் அதிக பாவங்கள் தான் சேரும். காப்பி கொட்டை, தேயிலை மலைப்பகுதியில் விளைய வைப்பார்களாம். காபி, டீ இல்லாமல் வாழ முடியாதா? மனித நோயை குணமாக்க மூலிகை வேண்டுமாம். மனித உணவுகளை மட்டும் சாப்பிட்டால் நோய்கள் வருமா? மலைக் காடுகளுக்குள் மனிதர்கள் செல்லும் போது பயந்து பயந்து தானே செல்கிறார்கள். மனிதர்களைப் பார்த்து விலங்குகள் பயந்து ஓடுகிறது. ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஏன் மனிதர்களைக் கண்டு ஒதுங்கி ஓடுகிறது? துஷ்டனை கண்டால் தூர நில். இது அறிவாளிகளின் கொள்கை. அப்படியானால் வன உயிர்கள் அறிவாளிகள் தானே. வனப்பகுதிக்குள் மனிதர்கள் சென்றால் கடும் தண்டனை என்று அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.
வனவிலங்குகள் புல் இலைகளை சாப்பிட்டு தூய்மையான ரத்தத்தை உடலுக்குள் வைத்திருக்கும் விலங்குகளை மட்டும்தான் சாப்பிடும். பத்திரிக்கை செய்தியில் மனிதனை கொன்றது என்று தான் பார்க்கமுடியும். கொன்று தின்றது என்று பார்க்க முடியாது. கடல் உப்பு கலந்த கெட்ட ரத்தம் உள்ள மனித உடலை கடித்தவுடன் தன் வாயில் பட்ட ரத்தத்தை ‘தூ’ என்று துப்பிவிடும். அது அறிவை இழந்து மனிதனை கொல்லவில்லை. மனிதனின் பேராசையால் வனவிலங்குகள் வாழ வேண்டிய மலைப்பகுதிகளை ஆக்ரமித்து விவசாய நிலங்களை உருவாக்குகிறான். வீடுகளை கட்டுகிறான். மனிதன் இயற்கைக்கு பல கொடுமைகள் செய்வதால் மழைவளம் குறைகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காமல் முன்பு அவைகள் வாழ்ந்த பகுதிகளுக்கு வருகிறது. அப்போது அவைகளின் எல்லைக்குள் வந்தவர்களைத்தான் கொல்கிறது. அவைகள் பட்டினி கிடந்து சாகும் நிலைக்கு வந்தாலும் நாற்றமெடுத்த மனித உடலை தின்னாது.
அது மனித உடல் தான். இறந்த பின் மனித உடலை எவ்வுயிரும் தின்னாததால் தான் உயிரிழந்த மனித உடல் மண்ணில் கிடந்து அழுகி மாதக்கணக்கில் நாற்றமெடுத்து அதிக தூரத்தை மாசுபடுத்தியது. அதனால்தான் முன் காலத்தில் மனித உடலை பூமியில் புதைக்க ஆரம்பித்தார்கள். மாமிசம் சாப்பிட்டு வாழும் உயிர்கள் இறந்தால் அவைகளின் உடலை மற்ற உயிர்கள் தின்னாது. அவைகளின் இறந்த உடலும் அழுகி நாற்றமெடுத்துதான் கிடக்கும். மனிதன் வாழும் போதும் பயன் இல்லை. இறந்த பின்பும் பயன் இல்லை. ஆதி மனிதர்கள் நெருப்பை கண்டுபிடிப்பதற்கு முன் கடல் உப்பு கலவாத இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிட்டதால் அவர்களின் ரத்தமும் உடலும் தூய்மையாக இருந்தது. அதனால் அவர்களை மற்ற உயிர்கள் வேட்டையாட வந்திருக்கலாம். ஆனால் ஆதிமனிதர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளத் தான். ஆயுதங்களை கண்டுபிடித்திருக்கலாம்.
மனித இனம் தான் அடுத்தவர் தயவில் நீச்சல் கற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் நீந்த தெரியும். ஆனால் அவைகள் மற்றவர்களிடம் கற்றுக்கொள்வதில்லை. அவைகளுக்கு தன்னம்பிக்கையும், உடல்பலமும் இருக்கிறது பேராசை இல்லை. அதனால் பயம் இல்லை. இன்றைய மனிதர்களுக்கு தன்னம்பிக்கையும் உடல் பலமும் இல்லை. அக்கிரமங்கள் பல செய்து அதிக காலம் வாழ வேண்டும் என்னும் பேராசை. சேமித்த பணத்தால் கண்டதை தின்று அதிக காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மன பயம் வருகிறது. பயமும் பலகீனமும் உள்ளவனை தண்ணீருக்குள் தள்ளினால் நீந்தி மேலே வர மாட்டான். தண்ணீருக்குள் தான் மூழ்குவான். ஆதி மனிதர்களுக்கு யாரும் நீச்சல் கற்றுக்கொடுக்கவில்லை. ஆழ்கடலையும், நதியையும், ஆறுகளையும், நீரோடைகளையும் எப்படி நீந்தி கடந்தார்கள்? அவர்களுக்கு கவலை இல்லை. பேராசை இல்லை. அவர்கள் தன்னம்பிக்கையும் பலமும் அதிகம் இருந்தது. துணிந்து நில். தொடர்ந்து செல், தோல்வி கிடையாது. வீரனுக்கு ஒரு நாள் மரணம். கோழைக்கு தினமும் மரணம். வீரமனதுடன் வாழ வைப்பது காட்டு வாழ்க்கை. கோழை மனதுடன் வாழ வைப்பது நாட்டு வாழ்க்கை. காட்டு வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : அவசியம் தெரிய வேண்டிய காடுகளின் நலன்கள் - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : Must-Know Benefits of Forests - Tips in Tamil [ Health ]