அவசியம் தெரிய வேண்டிய குண நலன்கள்

குறிப்புகள்

[ நலன் ]

Must-Know Qualities - Tips in Tamil

அவசியம் தெரிய வேண்டிய குண நலன்கள் | Must-Know Qualities

உங்களை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

அவசியம் தெரிய வேண்டிய குண நலன்கள்

 

உங்களை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

நீங்கள்  செய்வதை அனைத்தையுமே எதாவது குறைகள் கண்டுபிடித்து உங்களை வளர விடாமல் பார்ப்பார்கள். அதை எல்லாம் நீங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம்.  உங்கள் பாதையை நோக்கியே பயணம் செய்யுங்கள் நீங்கள் நினைத்த மாதிரி உங்களுக்கென தனித்துவம் உள்ள தோரணையில் வீர நடை போடுங்கள். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு குறைக்காத நாய்களும் கிடையாது. குறைகள் சொல்லாத வாய்களும் கிடையாது.

 

ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதீர்கள். அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.

 

அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.

அந்த உண்மையை நீங்கள் முன்கூட்டியே சொன்னால் உங்களை  அவர்களுக்கு பிடிக்காது.

 

இதுதான் வாழ்க்கையின் உண்மை...

அவர்களது கர்மா, விதிகள், பரம்பரை பாவம், புண்ணியம் இன்னும் எதை வேண்டும் என்றாலும் கணக்கு போட்டு கொள்ளுங்கள். அவர்களின் குணங்களும் அவரை சார்ந்த மனிதர்கள், மற்றும் வளர்ப்பு முறையை சார்ந்தது.

 

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும்,உறவுகளாக இருந்தாலும்,

அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.

 

இதை நீங்கள் மாற்றி அமைக்க முடியுமா?..

ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள்! அவ்வளவே!....

 

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று 

கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதீர்கள்..

 

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீங்கள் பொறுமையாக இருங்கள்..

 

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உங்களிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, 

தன் குணம் என்ன?, என்பதை ஒருநாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

 

நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.

அவரவர்களுக்கு என்ன வேஷம்.. கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது. எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதீர்கள். 

 

கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

 

நீங்கள் உங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி வைத்துக்கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உங்களுக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து நீங்களும் திருத்திக் கொள்ளலாம்.

 

இன்பமானாலும் துன்பமானாலும்

அதை நீங்களே சந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்.

அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதீர்கள்..

 

உங்கள் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உங்களை கைவிடாமல் உங்களோடு சேர்ந்தே பயணிப்பார்கள். 

 

அது உங்கள் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இணைந்தே இருப்பார்கள்.

பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

 

இறைவனைத் தவிர யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்.

உங்கள் கண்ணீரும் உங்கள் கவலையும்

உங்களை பலவீனமாக காட்டிவிடும்...

அழுவதாலும் சோர்ந்து போவதாலும்

ஒன்றும் நடக்கப்போவதில்லை.

 

எப்படி இருந்தாலும் நீங்கள் தான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான்

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

 

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் நம்மை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த வரை நீங்கள் அறிந்த வரை யாருக்கும் எந்த உயிருக்கும், எந்த வகையிலும் நன்மை மட்டுமே செய்யுங்கள்...

உங்களுடைய வாழ்க்கை வேற லெவல் மகிழ்ச்சியும், நிம்மதியும், சந்தோசமும் போட்டி போட்டுக் கொண்டு உங்கள் வாசல் தேடி வசந்தமுடன் வளமையாக வரும். நீங்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

நலன் : அவசியம் தெரிய வேண்டிய குண நலன்கள் - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : Must-Know Qualities - Tips in Tamil [ Health ]