வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது. நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
என்றும் செல்வ
செழிப்புடன், சந்தோஷமும் இருக்க தேவையான ரகசியங்கள்:
வெறும் தரையில் அமர்ந்து
சாப்பிடக்கூடாது.
வடக்கு பார்த்து
சாப்பிடக்கூடாது.
மாலை ஐந்து மணிக்கு மேல்
தயிர் சாப்பிடக்கூடாது.
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து
மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம்
வெட்டுதல் கூடாது.
திங்கள் கிழமை காலை ஆறு
மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
சனிக்கிழமை காலை ஆறுமணி
முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது
காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
வியாபாரம் தொழில்
செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக
நடக்கும்.
வீட்டில் மல்லிகை செடி
வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
தினமும் மல்லிகை பூவை
பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
வீட்டின் வாசற்படியில்
நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
மயில் தோகையை வீட்டில்
வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் பப்பாளி மரம்
கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும்
பாதிப்படைய செய்யும்.
முட்கள் உள்ள செடியை
வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஏகாதசி நாள் அன்று
விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
எப்போதும் சந்தோசமாக
இருப்பவர்களின் ஆறு ரகசியங்கள்!
எப்போதும் சந்தோசமாக
இருப்பவர்களுக்கு இயற்கையாகவே சில குணங்கள் இருக்கும்.
அல்லது அனுபவத்தின்
மூலம் அந்த பழக்கம் வந்திருக்கும். அவர்களுடைய சந்தோசத்தின் ஆறு ரகசியங்கள்
என்னவென்று பார்ப்போம்
1. தன்னை வெளிப்படுத்திக்
கொள்ளமாட்டார்கள்:
நிறைகுடம் தளும்புவதில்லை. நாம் யார் என்பதை
எப்போதும் ஆடைகள் மூலமும் பந்தாவான வார்த்தைகள் மூலமும் வெளிப்படுத்திக் கொள்ள
ஆசைப்படுவோம். இந்த வெளிக்காட்டிக்
கொள்ளும் பழக்கத்தால் நம்மை யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
கூடுகிறது. அந்த எதிர்பார்ப்பு
தோல்வியில் முடியும் போது நம்முடைய சந்தோசத்தை இழக்கிறோம். ஆகையால் நீங்களும் தான் யார் என்பதையும் எப்பேர்பட்ட
ஆள் என்பதையும் வெளியில் காட்டிக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
2. குறைவாக பேசுவார்கள்:
நாம் அதிகமாக பேசும்போது
தேவையான வார்த்தைகளுக்கு மேல் அதிக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
அப்போது என்னவாகும்? எதிரே உள்ளவர்கள்
அவற்றைக் கவனிக்க மாட்டார்கள்.
ஆகையால் அவர்களுக்கு
நம்மிடம் பேச விருப்பம் இல்லை என்று நாமே எண்ணிக்கொண்டு வருந்துகிறோம். அதேபோல் அந்த அதிக வார்த்தைகளில் உங்களை மீறி கரடு
முரடான வார்த்தைகளைக் கூறிவிட்டு, பின் நீங்களே கஷ்டப்படுகிறீர்கள்.
3. தினமும்
கற்றுக்கொள்வார்கள்:
சந்தோசமாக உள்ளவர்கள்
தினமும் புது புது விஷயங்களைத் தெரிந்துக் கொண்டு எதாவது தினமும்
கற்றுக்கொள்கிறார்கள்.
அதனால் ஏற்படும் ஒரு
திருப்தியும் அறிந்துக் கொண்ட விஷயத்தின் விளைவுகளும் அவர்கள் சந்தோசமாக இருக்கக்
காரணமாகிறது.
ஆனால் நாம் எந்த
வேலைகளும் இல்லையென்றாலும் எதையும் கற்றுக்கொள்ள முன் வருவது கிடையாது. அந்த நேரத்தில் தேவையற்ற சிந்தனைகளில் மூழ்கி எதையாவது
நினைத்து வருத்தம் கொள்கிறோம்.
4. மற்றவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்:
மகிழ்ச்சியாக
இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவியோடு இருப்பார்கள்.
அதேபோல் யாரையும்
எதிர்பார்க்காமல் அவர்களுக்கு அவர்களே உதவி செய்துக் கொள்வார்கள்.
மற்றவர்களுக்கு உதவி
செய்து அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்ப்பது அவர்களுக்கு மன திருப்தியை
ஏற்படுத்தி மகிழ்ச்சியாக்கும்.
5. அதிகமாக புன்னகை செய்வார்கள்:
உண்மையில் ஆற்றல் என்பது
ஒரு தொற்று. ஆகையால் அவர்கள் சிரிக்க
ஆரம்பித்து மற்றவர்கள் சிரிக்க காரணமாவார்கள்.
புன்னகையுடன்
வரவேற்பதும் புன்னகையுடன் பழகுவதும் புன்னகையுடன் அனுப்பி வைப்பதும் அவர்களின்
குணமாகும்
6. தேவையற்றதை தவிர்த்துவிடுவார்கள்:
அவர்கள் மனதைக்
காயப்படுத்தும் விஷயங்களையும் அவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களையும்
தவிர்த்துவிடுவார்கள்.
அவர்களைப் பற்றி யார்
என்ன கூறினாலும் நல்லதை மட்டும் கேட்டுக்கொண்டு மற்றதை அங்கயே விட்டுவிடுவார்கள்.
அவர்களின் இந்த ஆறு குணங்களை நாமும் மனதில்
வைத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
" தீதும் நன்றும்
பிறர் தர வாரா "
என்பதை மனதில் கொண்டு
ஏற்ற முறையில் செயல்பட்டு அமைதியும் ஆனந்தமும் நிறைந்த நல்வாழ்வு
வாழ்ந்திடுவோமாக...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : என்றும் செல்வ செழிப்புடன், சந்தோஷமும் இருக்க தேவையான ரகசியங்கள்: - குறிப்புகள் [ ] | Welfare : Secrets to Forever Wealthy and Happy: - Tips in Tamil [ ]