கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்? உண்மை என்ன?

கர்ப்பகால பெண்களின் சில சந்தேகங்கள்

[ இல்லறம் ]

Sickness during pregnancy? What is the truth? - Some doubts of pregnant women in Tamil

கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்? உண்மை என்ன? | Sickness during pregnancy? What is the truth?

முதல் 3 மாதங்கள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் அதன் பிறகு ஓகே. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்ப மாதங்களில் உறவின்போது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது ரத்தத் தீற்றல் படலாம்.

கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்? உண்மை என்ன?

கர்ப்பகால பெண்களின் சில சந்தேகங்கள்.

கர்ப்பக்காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா?

முதல் 3 மாதங்கள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் அதன் பிறகு ஓகே. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்ப மாதங்களில் உறவின்போது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது ரத்தத் தீற்றல் படலாம். இப்படி வந்தால் உறவுகொண்டதால் வந்ததா அல்லது கருவுக்கு ஏதேனும் பிரச்னையா என்று மருத்துவர்கள் சந்தேகப்பட வேண்டிய நிலைமை வந்துவிடலாம்.

 

மல்லாந்து படுத்தால் சிசுவின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளுமா?

அப்படியெல்லாம் ஆகாது. 6 மாதங்கள் வரைக்கும் கர்ப்பிணிகள்  மல்லாந்து படுக்கலாம். அதற்கு மேல் கர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால், அம்மாவிடமிருந்து சிசுவுக்கு ரத்தம் எடுத்துச் செல்கிற ரத்த நாளங்கள் அழுத்தப்படும். ஆனால், தூக்கத்தில் அவர்கள் தெரியாமல் மல்லாந்து ஒன்றிரண்டு மணி நேரம் படுத்துவிட்டால் கருவுக்கு ஒன்றும் ஆகாது.


பைக்கில், ஆட்டோவில் போகலாமா?

நீங்கள் பைக்கில் பின்னாடி உட்கார்ந்தும்  ஓட்டவும் செய்யலாம். ஆட்டோவிலும் பயணம் செய்யலாம். ஆனால், 10 நிமிடங்களில் போகிற இடத்துக்கு 20 நிமிடங்களில் போகிற அளவுக்கு நிதானமாகச் செல்ல வேண்டும். ரயிலில் என்றால், சிறு தொலைவுப் பயணங்கள் என்றால் ஓகே. ஆனால், ரயிலில் நீண்ட  பல மணி நேர தூரம் போகப் போகிறீர்கள் என்றால் ஏனென்றால், நடுவழியில் ஒரு மருத்துவ உதவி தேவையென்றால், அடுத்த ஸ்டேஷன் வரை காத்திருக்க வேண்டி வரலாம். அந்த ஸ்டேஷனுக்கு அருகே 24 மணி நேர மருத்துவமனை இருக்க வேண்டும் என்று சில சிக்கல்கள் இருக்கின்றன. அதற்குள் கர்ப்பிணி நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?

 

கர்ப்பிணிகள் மாடிப்படி ஏறலாமா?

மாடிப்படிகளில் தாராளமாக ஏறலாம். ஆனால், பொறுமையாக ஏற வேண்டும். வேகமாக ஏறினால், மூச்சு வாங்கும். அதனால், நிதானமாக உங்கள் செளகர்யத்துக்கு ஏற்றபடி  ஏறலாம்.

 

பாதங்கள் வீங்கினால் பார்லி வாட்டர் குடிக்க வேண்டுமா?

இது தவறு. பார்லி வாட்டர் உடலில் இருக்கிற தண்ணீரை வெளியேற்றி விடும். கோடைக்காலத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் பார்லி வாட்டர் குடித்தால் ரத்தத்தின் அளவு மாறலாம் . இதனால் பலவிதமான பிரச்னைகள் வரலாம். கால்களை சற்றுநேரம் மேலே தூக்கிவைத்தால் வீக்கம் குறையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

இல்லறம் : கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்? உண்மை என்ன? - கர்ப்பகால பெண்களின் சில சந்தேகங்கள் [ ] | domesticity : Sickness during pregnancy? What is the truth? - Some doubts of pregnant women in Tamil [ ]