அனைவரது வாழ்க்கையிலும் அவ்வப்போது வந்து செல்லும் நினைவுதான்.......
இக்கரைக்கு அக்கரை பச்சை:
🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙
அனைவரது வாழ்க்கையிலும்
அவ்வப்போது வந்து செல்லும் நினைவுதான்.......
இதற்கு விதிவிலக்கு யாரும் இருப்பதாகத்
தோன்றவில்லை......!!!!!
ஏனென்றால் ஆசை மற்றும்
தேவைகளின் முழு வடிவம்தான் மானுடம்......!!!
தத்தம் வாழ்வில் வாழ்க்கை status ஐ வைத்து இந்த comparison அவ்வப்போது எட்டிப் பார்ப்பது சகஜம்....!!!! என்றாலும், நமக்கு விதிக்கப்பட்டவை பல சந்தர்ப்பங்களில் ..........
இக்கரையே பச்சை என்பதாக
மகிழ்ச்சி வெள்ளத்தில்,திக்குமுக்காட வைத்திருப்பதும் உண்மை....!!!!
வாழ்க்கை நாம் அனுபவிக்கும் வசதிகளில்
மட்டும் இல்லை.....
நல்ல மனைவி மக்கள்,
குடும்ப ஆரோக்யம்
படுத்தவுடன் உறக்கம் போன்றவற்றைக் கொண்டிருக்கும்போது.....
அக்கரைப் பச்சைகள் காணாமற்
போய்விடுகின்றன.....!!!!
எங்கேயோ நம்மை ஈர்க்கும் பலாக்காயைவிட, அருகில் கிடைக்கும் களாக்காய் சிறந்தது..... என்பதை பல சந்தர்ப்பங்களில் கடந்த கால வாழ்க்கை சொல்லித் தந்திருக்கிறது. ....!!!!!
ஒரு வேளை இந்த சிந்தனை
வயதின் காரணமாகக்கூட தோன்றியிருக்கலாம். ....!!!!
ஆனால் சீச்சி! இந்தப்
பழம் புளிக்கும் என்பதால் கண்டிப்பாக இல்லை.....!!!!
பல அக்கரைப் பச்சைகளுக்கு கனவு
காணலாம்......
ஆனால் கனவுகள் மட்டுமே வாழ்க்கை இல்லை.......
நம் உளச் சூழலையும்,புறச் சூழலையும்
கட்டுக்குள் வைத்து இருக்கும் கரையையே பச்சையாகக் காண்பது விவேகமானது எனக்
கருதுவோம்....!!!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்குவோம்....!!!!!
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன்
இன்றைய நாளை தொடங்குவோம்........!!!!!
எனது அழகிய பொன்
விடியல் வணக்கம் நட்புறவுகளே 🙏.
வாழ்க 🙌 வளமுடன்
ஆதரவற்ற முதியோருக்கு ஆதரவளிப்போம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : இக்கரைக்கு அக்கரை பச்சை: - குறிப்புகள் [ ] | Welfare : Side by Side Green: - Tips in Tamil [ ]