நேரம் என்பது நமக்கு இருக்கக்கூடிய எல்லா உபகரணங்களிலும் அமூல்யமானது.
நேரம்
நேரம் என்பது நமக்கு இருக்கக்கூடிய எல்லா உபகரணங்களிலும்
அமூல்யமானது.
நேரம் பொன்னானது என்பார் சிலர். உண்மையில் நேரம் பொன்னைவிடவும்
சிறந்தது.
ஏனென்றால் பொன்னுக்கும் பொருளுக்கும் இல்லாத சிறப்புகள்
நேரத்திற்கு உள்ளது.
காசு பணமிருந்தால் சிறிது சேர்த்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது
பத்திரமாக, பிறகு உதவும் என்று சேமித்து வைக்கலாம்.
நேரம், சமயம் என்ற அமூல்யமான இந்த உபகரணத்தை அப்படி எடுத்து வைக்க
முடியுமா?
பணம் பொருள் இவற்றை ஒருவருக்கு ஒருவர் கொடுக்கலாம், வாங்கிக்கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி
இன்னொருவருக்கு வெட்டி எடுத்துக் கொடுக்க முடியும்?
இது மட்டுமல்ல,
போன நேரம் திரும்ப வராது.
இவ்வளவு சிறந்த உபகரணம் என்று அறிந்தும் கூட இன்னமும் பலர் நேரத்தை
வீணடிக்கிறார்கள்.
ஏனென்றால் ஆண்டவன் நேரத்திற்கு எந்த விலையும் வைக்க வில்லையல்லவா?
இதுவே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தால்? ஒரு நாளைக்கு 25,000 ரூபாய், 12 மணிக்கு செக் அவுட்
என்றால், 11 மணிக்கெல்லாம் தயாராகி வெளியேறிவிடுகிறார்,
ஏனென்றால் சற்று அதிக நேரம் இருந்து விட்டால் இன்னுமொரு 25,000
பழுத்துவிடுமே.
நேர நிர்வாகத்திற்கு முதல் படி நேரத்தைப் பற்றிய மனப்பான்மைதான்.
நேரம் அமூல்யமானது என்ற மனப்பான்மை உள்ளவர்கள் எப்போதும் நேர நிர்வாகத்தில்
சிறப்பாக இருப்பார்கள்.
அந்த மனப்பான்மை இல்லாதவர்கள் வாழ்க்கையில் நேரம் மிகவும்
விரயமாகும். நிர்வாகம் செய்வதற்கு முடியாமல் திணறுவார்கள்.
ஏனென்றால் எந்தச் செயல்பாடுகளில் நமது நேரத்தை பங்களிக்கிறோம்
என்பதுதான் நேர நிர்வாகத்திற்கு அடிப்படையான ஒன்று.
நமது வெற்றிக்கென்று செய்யவேண்டிய சில செயல்பாடுகள் உள்ளன. அந்தச்
செயல்பாடுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றில் நேரத்தைச் செலவிட்டால் மட்டும்
வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு.
இலக்குகளைத் தெளிவாக விவரித்தல் அவசியம். அதில் குழப்பம் இருந்தால்
என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்காது. நேரம் விரயமாகத்தான்
செய்யும்.
சிறந்த நேர நிர்வாகத்திற்கு தேவையானது:
1. நேரம் குறித்த சிறப்பான மனப்பான்மை
2. இலக்குகள் குறித்த தெளிவு
3. நமக்கு இருக்கும் பல தரப்பட்ட பாத்திரங்களுக்கும், பொறுப்புகளுக்கும் அவற்றின் இலக்குகளுக்கும் இடையில் இணக்கத்தை
அறிந்து முன்வரிசைப் படுத்துவது
4. அந்த இலக்குகளை அடைவதற்கு வேண்டிய செயல்பாடுகள் குறித்துத் தெளிவாகக்
கண்டறிந்து, முன்வரிசைப் படுத்திப் பட்டியலிட்டு, அவற்றிற்குக் கால அளவுகள்
தோராயமாகக் கணக்கிட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவது.
5. மற்றவர்கள் செயல்படுத்தக் கூடியவற்றை அவரவரிடம் ஒப்புவித்து
நிறைவேற்றிக் கொள்வது,
6. நிதம் திட்டமிடுவதற்கும், செயல் பாட்டைத்
திட்டமிட்டபடி நடக்கின்றதா என்று பரிசீலனை செய்வதற்கும் நேரம் ஒதுக்க வேண்டியது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : நேரம் - குறிப்புகள் [ ] | Welfare : Time - Tips in Tamil [ ]