எதையும் முயன்று பாருங்கள்

குறிப்புகள்

[ நலன் ]

Try anything - Tips in Tamil

எதையும் முயன்று பாருங்கள் | Try anything

எதையும் முயன்று பாருங்கள் பிரபஞ்சம் அதுவாகவே வழி நடத்தும்

எதையும் முயன்று பாருங்கள்

எதையும் முயன்று பாருங்கள் பிரபஞ்சம் அதுவாகவே வழி நடத்தும் அல்லது அதற்கு பதிலாக நாம் எதுவும் செய்யாமல் நன்மைகள் செய்யும் நாம் முயற்சி செய்வது மட்டுமே. நாம் நடக்க நிணைத்து நடந்தால் இயல்பாக அதுவே நடக்கும். உட்கார நிணைத்தால் அதுவே உட்காரும். உடல் நீரில் மிதக்கும் இது இயற்கை அதில் நீச்சல் அடிக்க முடியும். வாழ்க்கை வாழ முடியும்

இயற்கை நமக்கு அணைத்து அம்சங்களும் கொடுத்து இருக்கிறது எதிலும் முயன்றுதான் பாருங்களேன் பனை மரம் ஏற நினைத்தால் ஏற முடியும்....


ஒரு மனிதன், இந்த உலகமே சரியில்லை

 

இங்குள்ள மனிதர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தான்.

 

அவன் இறைவனிடம் சென்று இறைவா நான் இந்த உலக மனிதர்களை மாற்ற நினைக்கிறேன்

 

 எனக்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.

 

இறைவனும் நல்லது நான் உனக்கு 20 வருடங்கள் அவகாசம் தருகிறேன்

 

 முயற்சி செய் என்று அருளினார்.

 

20 வருடங்கள் கழித்து அந்த மனிதன் இறைவனிடம் சென்று இறைவா என்னால் இந்த உலகத்தை மாற்ற முடியவில்லை

 

அதனால் இந்த நாட்டில் உள்ள மக்களை மட்டுமாவது மாற்றி திருத்த நினைக்கின்றேன் என்றான்.

 

 இறைவனும் அப்படியே ஆகட்டும் நான் உனக்கு ஒரு 15 வருடங்கள் தருகிறேன் முயற்சி செய் என்றார்.

 

15 வருடங்கள் கழித்து அந்த மனிதன் கடவுளிடம் சென்று கடவுளே என்னால் இந்த நாட்டு மக்களை திருத்த முடியவில்லை.

 

நான் எனது ஊரில் உள்ள மக்களையாவது மாற்ற நினைக்கிறேன் என்றான்.

 

 கடவுளும் சரி நான் உனக்கு 10 வருடங்கள் நேரம் தருகிறேன் முயற்சி செய் என்றார்.

 

10 வருடங்கள் சென்று அந்த மனிதன் மீண்டும் கடவுளிடம் சென்று இறைவா இந்த ஊரில் உள்ள மக்களையும் எனனால் திருத்த முடியவில்லை

 

ஆகவே எனது குடும்பம் சுற்றத்தினரை மட்டும் திருத்த முயற்சிக்கிறேன் என்றான்.

 

கடவுளும் நல்லது உனக்கு நான் ஒரு 5 வருடம் கால அவகாசம் தருகிறேன் என்றார்.

 

இறுதியில் அந்த மனிதன் கடவுளிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் கடவுளே

 

என் எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டன.

 

கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன்.

 

நான் என்னை மட்டும் மாற்றிக்கொள்ள அருள் புரியவும் என்றான்.

 

கடவுளும் அந்த மனிதனை நோக்கி இதை நீ ஆரம்பத்திலேயே கேட்டு இருக்க வேண்டும்

 

ஏனெனில் உன்னுடைய வாழ்க்கை முடியப்போகிறது

 

இப்போது எந்தப் பயனும் இல்லை😏😏 என்றார்.

 

மற்றவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால்...

 

உங்கள்_காலம்_வீணாக்கப்படுகிறது.

 

உங்கள்_மனம்_தன்னிடமிருந்தே

தப்பித்து_ஓட ... இந்த_நுட்பமான தந்திரத்தைப்_பயன்படுத்துகிறது.


பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் போடு என்று கேட்காமால் எனக்கு பாயாசம் வேண்டும் என்று கேட்கும்படி மனதை பழக்கப் படுத்துங்கள்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

நலன் : எதையும் முயன்று பாருங்கள் - குறிப்புகள் [ ] | Welfare : Try anything - Tips in Tamil [ ]