எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க...

குறிப்புகள்

[ நலன் ]

Want peace forever? Read this... - Tips in Tamil

எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க... | Want peace forever? Read this...

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநாள் அவரை சந்திக்க வந்த ஒருவர், ""ஐயா! எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்'" என்று கேட்டார்.

எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க...

 அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநாள் அவரை சந்திக்க வந்த ஒருவர், ""ஐயா! எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்'" என்று கேட்டார்.

 

சிறிது நேரம் யோசித்தவர். " உங்கள் கோபம் தீர, அவரை விமர்சித்து கடிதம் எழுதுங்கள். என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.

 

அவரும் கடிதத்துடன் வந்தார். "நீங்கள் கூறியபடி எழுதியுள்ளேன். இதை  தபாலில் அனுப்பவா" எனக் கேட்டார். "உங்கள் கோபம் குறைந்ததா" என லிங்கன் கேட்டதற்கு,

 

ஆம்! என சொன்னார்.

 

"சரி, கடிதத்தை குப்பைத்தொட்டியில் போடுங்கள். அவரை மன்னியுங்கள். மனச்சுமை குறையும்” என்றார்.

 

பிறர் செய்யும் தவறுகளை மறந்தால் மனம் லேசாகும். அதுவே மன்னித்தால் மன நிறைவு உண்டாகும். இதை பின்பற்றினால் எப்போதும் அமைதி இருக்கும்.

 

ஒருவர் நமக்கு தீமை செய்கிறார் என்றால், பதிலுக்கு நன்மைதான் செய்ய வேண்டும். மனதால் கூட அவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. இந்த மனப்பக்குவம் இருந்தால் நமது வாழ்வு வளமாகும்.

 

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

 

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!    

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!   

 

வாழ்த்துகள்.

 

வாழ்க வளத்துடன்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

நலன் : எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க... - குறிப்புகள் [ ] | Welfare : Want peace forever? Read this... - Tips in Tamil [ ]