வெற்றி வேண்டுமா? வாயை திறக்காதீர்கள் !!!

குறிப்புகள்

[ நலன் ]

Want to win? Don't open your mouth!!! - Tips in Tamil

வெற்றி வேண்டுமா? வாயை திறக்காதீர்கள் !!! | Want to win? Don't open your mouth!!!

உங்கள் இலக்கு நோக்கிய உங்கள் பயணப் பாதை எப்போதும் இலகுவாக இருக்கத் தேவையில்லை.

வெற்றி வேண்டுமா? வாயை திறக்காதீர்கள் !!!

உங்கள் இலக்கு நோக்கிய உங்கள் பயணப் பாதை எப்போதும் இலகுவாக இருக்கத் தேவையில்லை.

 

தடைகள் தோன்றும் பிரச்சனைகள் முளைக்கும்.

 

ஆனால் நீங்கள் எதற்காக உங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது...

 

உங்கள் இலக்கு எது என்பதை மறக்காதீர்கள்.

 

சிறு பிரச்சனைகளோ அல்லது சிறிய தோல்விகளோ உங்களை தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள்.

 

வாயை திறக்காதீர்கள் !!!

 

வீடு வாங்க போகிறீர்களா? வாயை திறக்காதீர்கள் !!!

 

புதிய கார் வாங்க போகிறீர்களா? வாயை திறக்காதீர்கள் !!!

 

திருமணம் ஆகப் போகிறதா? வாயை திறக்காதீர்கள் !!!

 

விடுமுறைக்கு செல்கிறீர்களா? வாயை திறக்காதீர்கள் !!!

 

ஒரு கோர்ஸ் கற்றுக்கொள்ள போகிறீர்களா? வாயை திறக்காதீர்கள் !!!

 

பதவி உயர்வு கிடைத்ததா? வாயை திறக்காதீர்கள் !!!

 

தொழிலில் லாபம் பார்த்தீர்களா? வாயை திறக்காதீர்கள் !!!

 

99% நேரம் நமது கனவுகள்/இலக்குகள் நிஜமாகாமல் இருப்பதற்கு காரணம், தவறான நேரத்தில் தவறான நபர்களிடம் நாம் விரைவில் வாய் திறப்பதுதான்.

 

"நண்பர்கள்" என்று கூறும் நபர்களுடன் நமது  திட்டங்கள் அல்லது வெற்றிகளைப் பற்றி முன்னமே  பகிர்வது தவறு.

 

நீங்கள் நினைப்பது நடக்கும் முன் .....வாயை திறக்காதீர்கள் !!!

 

உங்கள் "நண்பர்களில்" பெரும்பான்மையானவர்கள், நீங்கள் சிறப்பாக செயல்படுவதைக் காண விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை விட நீங்கள் சிறந்து விளங்குவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

 

உங்களுக்கு ஒரு முக்கிய நினைவூட்டல்! சில குடும்ப உறுப்பினர்களுக்கு கூட பொறாமை மறைந்திருக்கும்!!!

 

ஆனால், நமது ஐயா கருப்பசாமி நம்மளுக்காக வைத்திருப்பதை அவர்களால் தடுக்க முடியாது!

 

புத்திசாலித்தனமாக இருங்கள், நினைவில் கொள்ளுங்கள் மீன் வாயை மூடினால் மீனவனின் கொக்கியில் அது மாட்டாது.

 

உங்கள் கருப்பனாகியே நான் உங்களை வழி காட்டி செல்லும் இந்த அப்பன் உங்களுக்கு சொல்லும் வழிமுறைகள் ஒரு முறை சொன்னால் போதும் என்று நினைக்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் எல்லாம் நன்றாக நடக்கட்டும்.

 

🦅 வாழும் மரணமாகிவிடு.! 🦅

 

🌸 மரணம் உன்னை கலங்கடிக்கவில்லை...

 

மரணம் உன்னை

கதற விடுவதில்லை...

 

மரணம் உன்னை

பயமுறுத்தவில்லை...

 

முதல் துயரம்,

 

இதுநாள் வரை

நீ பயன்படுத்தி வந்த

உனக்கு நெருக்கமான

உன் அழகிய உடலை விட்டுப் பிரிவது...

 

அதுவே முதல் பற்று.

 

இரண்டாவது,

 

காலங்காலமாக

நீ பாடுபட்டு சேர்த்த பொருள்களின் மீதான அளவுகடந்த பற்று...

 

நீ அனுபவித்து வந்த சுகபோகங்கள் அனைத்தையும் விட்டுச் செல்லும் வேதனை...

 

மூன்றாவது,

 

நீ காலங்காலமாக பழகி வந்த

பற்று வைத்த அன்புகாட்டிய

மனிதர்கள் அனைவரையும்

விட்டுப் பிரியும் வேதனை...

 

🌸 ஆகவே,

விவேகமுள்ள ஒரு மனிதர்,

தான் இப்போது வாழும் போதே பற்றறுக்க செய்யும்

ஆத்ம சாதனையே...

 

"மனம் இறக்கும் கலை.!"

 

நீ போட்ட முடிச்சுகள் அனைத்தையும்,

நீ மட்டுமே தான் விடுவிக்க முடியும்.!"


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

நலன் : வெற்றி வேண்டுமா? வாயை திறக்காதீர்கள் !!! - குறிப்புகள் [ ] | Welfare : Want to win? Don't open your mouth!!! - Tips in Tamil [ ]