கோபம் எதனால் வருகிறது

குறிப்புகள்

[ நலன் ]

What causes anger - Tips in Tamil

கோபம் எதனால் வருகிறது  | What causes anger

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்.

கோபம்

 

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

 

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள்.

 

ஒருவர் கூறினார்,

 

நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.

 

நான் ஒன்று சொன்னால்,  அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.

 

மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.

 

அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்.

 

இன்னொருவர்,  சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார்.

 

வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.

 

இப்படி ஒவ்வொருவரும்

தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

 

இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படும்

 

அது சரி...

 

நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா?

என்றதற்கு,

 

அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர்.

 

கோபம்னா என்ன?

 

கோபம் என்பது

அடுத்தவர்கள் செய்யும் சிறு _சிறு தவறுகளுக்கு

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.

 அதுமட்டுமல்லாமல்

 

நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம்

 

இதே கோபத்துடன் செயல்பட்டால்

 

நட்பு நசுங்கி விடும்.

உறவு அறுந்து போகும்.

உரிமை ஊஞ்சலாடும்.

 

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன?

 

சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க.

 

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.

 

இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.

 

இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி,

ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.

 

இது பொய்யல்ல.

சத்தியமான உண்மை இது.

 

இதற்கு என்ன தீர்வு??

 

தனியா உக்காந்து யோசிங்க.

அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள்.

 

அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

 

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.

 

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,

நீங்க

அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரி ...

 

அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து காண்பிப்போம்.🌹

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

நலன் : கோபம் எதனால் வருகிறது - குறிப்புகள் [ ] | Welfare : What causes anger - Tips in Tamil [ ]