புறவைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து வளர்த்து வழிகாட்டும் வரை ஆண் பெண் உறவை நாடாது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?
புறவைகள்
முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து வளர்த்து வழிகாட்டும் வரை ஆண் பெண் உறவை நாடாது.
பாலூட்டி விலங்குகள் கர்ப்பமடைந்து குட்டியை என்று வளர்த்து வழிகாட்டும் வரை ஆண்
பெண் உறவை நாடாது. முன் காலத்தில் ஆதிமனிதர்களும் ஆண் பெண் உறவில் ஒரு கட்டுப்பாடு
வைத்து வாழ்ந்திருப்பார்கள். இயற்கை உணவுகள் மட்டும் சாப்பிட்டால் காம உணர்வானது தேவைப்படும்போது
மட்டும்தான் தூண்டப்படும். இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த போது
பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் வேகமாக அதிகரிக்கவில்லை. நெருப்பை கண்டுபிடித்து
உணவுகளை சமைத்து உண்ண ஆரம்பித்தவுடன் மனித உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் ஆண் பெண்
உறவை சற்று அதிகம் விரும்ப ஆரம்பித்தார்கள். சமையல் உணவுகளை பலவகைகளில் சாப்பிட
ஆரம்பித்தவுடன் ஆண் பெண் உறவு மேலும் சற்று அதிகரிக்க தொடங்கியது. இன்றைய சமையல்
உணவுகளில் மாமிச வகைகளையும், மாட்டுப்பாலையும் அதிகம் பயன்படுத்துவதால் மனித
இனத்தை காம உணர்வாளது படாதபாடு படுத்துகிறது. இயற்கை உணவுகள் சாப்பிடும்போது உடல்
உஷ்ணம் சரியான அளவில் இருக்கும். இதனால் மனித உடலில் செயல்பாடுகள் அனைத்தும்
இயற்கை இட்ட கட்டளைப்படி நடக்கும். சமைத்த தீய உணவுகளை அதிகம் உண்பதால் உடலில்
கெட்ட ரத்தம் உருவாகி உடல் உஷ்ணத்தையும் அதிகரிக்கச் செய்து உடலின் அனைத்து
செயல்பாடுகளையும் இயற்கைக்கு மாறாக செயல்பட வைத்துவிடும். இதனால் காம உணர்வானது
அடிக்கடி மட்டுமல்ல தினமும் தூண்டப்படும். கணவன் மனைவி அடிக்கடி இணைவதால் அதிகம்
பிள்ளைகளை பெற்று இன்று மக்கள் தொகை பெருகியிட்டது.
மக்கள் தொகை
பெருகியதற்கு ஒரு உதாரணம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய மக்கள் தொகை 40 கோடி என்றார்கள். இப்போது 140 கோடி
என்கிறார்கள். அப்படியானால் 62 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகை 100 கோடி அதிகரித்திருக்கிறது.
மனித இனம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்த்தும் மக்கள் தொகை வேகமாக
அதிகரிக்கவில்லை. இன்று பல கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தியும். குடும்ப
கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தும் மக்கள் தொகை குறுகிய காலத்தில் பெருகுவதற்கு
காரணம் தீய உணவுகள் தான்.
ஒரு
குடும்பத்தில் நான்கு பேர்கள் இருந்தால் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஒரே வகையான
உணவை எல்லோருக்கும் பறிமாறி சாப்பிட்டால் எல்லோருக்கும் குணம், எண்ணம், செயல்,
ஒற்றுமை இவை அனைத்துமே மாறுபாடு இல்லாமல் இருக்கும். ஆளுக்கொரு
நேரத்திலும் ஆளுக்கொரு உணவையும் சாப்பிட்டு வளர்ந்தால் குணமும் செயல்பாடுகளும்
ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆயிரம் சிட்டுக் குருவிகளுக்கும் ஒரே குணம் இருக்கும்.
லட்சம் கடல் பறவைகளுக்கும் ஒரே குணம் இருக்கும். கோடிக்கணக்கான எறும்புகளுக்கும்
ஒரே குணம் இருக்கும். ஒரே குடும்பத்தில் வாழும் நான்கு பேர்களுக்கு நான்குவகையான
குணங்கள் இருப்பது ஏன்? பலவித உணவுகளால் பலவித குணங்கள். ஆயிரம்
சிட்டுக்குருவிகளும் ஒரே வகையான உணவை சாப்பிடுகின்றன. மனிதர்கள் அப்படி
வாழவில்லையே. அதுவே முக்கிய காரணமாகும்.
1௦௦
வருடங்களுக்கு முன்பு போர்களிலும், தொற்று நோயாலும் பலர் இறந்தனர். அனால்
தற்காலங்களில் அவைகளுக்கு தீர்வு இருந்தும் மக்கள் தொகை பெருகுகிறது. மேலும்
குழந்தை இரண்டுக்கு மேலே பெறுவதும் வழக்கமாகி விட்டது. அப்படி இருந்தும் மக்கள்
தொகை கூடி கொண்டு தான் செல்கிறது. மேலும் சர்வே படி ஒரு மணி நேரத்துக்கு 3192
குழந்தைகள் பிறக்கிறார்கள். அப்படி கணக்குப் பார்த்தால் ஒரு நாளைக்கு குறைந்தப்
பட்சம் 75௦௦௦ பேர்கள் பிறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இறப்பு
விகிதமும் ஒரு நாளைக்கு 27814 மனிதர்கள் இறக்கிறார்கள். பிறப்பின் விகிதம் ஆனது இறப்பு விகிதத்தை விட
அதிகம் இருந்தால் மக்கள் தொகை பெருகவும் செய்யும். மத நம்பிக்கைகள், தட்ப வெப்பம்,
ஆண் குழந்தை பிறக்கும் வரை பெற்றுகொண்டே இருக்கும் எண்ணங்கள் கொண்ட மனிதர்கள்
இருப்பதாலும், கல்வி அறிவின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வு
சொல்கிறது. அதாவது கல்வி அறிவில் ஆண்கள் 36 சதவிகிதமும், பெண்களில் 61 சதவிகிதமும்
கல்வி அறிவற்றவர்கள் என்றும் ஆய்வு சொல்கிறது.
சமுக இடைவெளி
பின்பற்றல் என்பதும் கஷ்டமாக இருக்கும். சுகாதாரம் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு
உள்ளது. இட நெருக்கடி ஏற்படவும், போக்கு வரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புகள்
அதிகம். சுற்றுச் சூழல் மாசுபடலாம். படித்தவர்களுக்கு இடையே போட்டி ஏற்படும். வேலை
இல்லா திண்டாட்டம் அதிகரிக்கும். அனுபவம் வாய்ந்த நபர்கள் குறைந்த வருமானம் நோக்கி
செல்ல நேரிடலாம். இல்லையேல் அவர் இடத்துக்கு அதிகப் போட்டிகள் ஏற்படுத்த ஒரு
கூட்டமே படை எடுக்கலாம். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தினால் அதீத நுகர்வுகள்,
அதற்க்கு ஏற்ற வகையில் உற்பத்தி மற்றும் செலவுகள், இன்னும் சொல்லப் போனால் இயற்கை
வளங்களும் சுரண்டப் படலாம் என்று சொல்கிறார்கள். மேலும் நமக்கு அடிப்படை தேவையான
நீர் பயன்பாட்டின் தேவையும் அதிகரிக்கும். வறுமையும் அதிகரிக்கலாம். தொற்று
நோய்கள் மிக லேசாக பரவும் சூழ்நிலை பெருகும். மக்கள் தொகை அடர்த்தியில் ஒரு சதுர
கிலோ மீட்டருக்கு 414 பேர் பெற்று முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. இதே அமெரிக்கா 36 பேர்கள்
தான் கொண்டுள்ளது. அதாவது இந்தியாவின் வளத்திற்கு ஏற்ற மக்கள் தொகை 80 கோடி தான் மக்கள் இருக்க வேண்டுமாம். இதுவே அமெரிக்காவுடன் ஒப்பிடு
செய்தால் இரண்டு மடங்குக்கு மேல் அதிகம் என்கிறார்கள். மேலும் வேளாண் சார்ந்த
விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் வளர வேண்டும். அதற்க்கு தான் முன்னுரிமை
கொடுத்தல் வேண்டும். அப்போது நாட்டின் பொருளாதாரமும் வளர்ந்து நாடு வல்லரசு ஆகும்
என்பதில் ஐயம் இல்லை.
அனைத்து
துறைகளிலும் தன்னிறைவு அடைந்து வல்லரசை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றால் மக்கள்
தொகை கட்டுப்படுத்தி, அனைவருக்கும் தரமான, சமமான, முழுமையான கல்வி அறிவு கொடுக்க
நடவடிக்கை மேற்கொள்ளல் அவசியம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன? - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : What causes population growth? - Tips in Tamil [ Health ]