
தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''
இளம்வயது மரணங்கள் ஏன்?
சமீப
காலங்களில் இளம்வயது மரணங்கள் பெருகி வருகின்றன. 
 அவர்களின் மரணங்கள் உறவுகளை தாண்டி
அந்நியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. 
 அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்கள் நிர்க்கதி
ஆகி வருகின்றனர். 
 குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த
குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன. 
நிலை குலைய வைத்த நண்பரின் மரணம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை உணர வைத்த கண்ணீர் துளிகளுடன் இரங்கல் மடல்:
உயிரே.. உறவே...நட்பே... இந்த மூன்றும் சேர்ந்த ஒரு
நண்பர் வாய்ப்பது வாய்ப்பே குறைவு எனலாம்..
உமக்கு எதுவும் குறைவில்லாமல் கொடுத்ததால் என்னவோ
வாழும் வயதை குறைத்து விட்டானோ? உம்மை பற்றி ஒருவர்
கூட குறை கூற முடியவில்லையே..
எப்படி அப்படி வாழ்வை அமைக்க முடிந்தது? எப்பேர்பட்ட மனுசனுக்கும் குறை சொல்ல ஒருவராவது
இருப்பர்...ஆனால் உம்மிடம் எவரும் இல்லயே...எப்படி அப்படி வாழ முடிந்தது..
குடும்பத்தின் ஆலமரமாய் அல்லவா இருந்தாய்?
உம்முடைய கிளைகளை எப்படி மறந்து போக முடிந்தது?
குடும்பத்தின் ஆலமரமே ஆணிவேரை அல்லவா பிடுங்கி
விட்டது...
நீங்கள் அனைத்தையும் தாங்கும் குணம் இருப்பதால்
உங்கள் விழுதுகளுக்கும் அப்படி இருக்குமா? தாங்கக்
கூடிய வலிமை இன்னும் வர வில்லையே? அதற்கு முன் ஏன் இந்த
அவசரம் உறவே...
பொது நலத்திற்கு வருவதே குதிரை கொம்பாக இருக்கும் கலி
காலத்தில் உமக்கு மட்டும் பொதுவாகவே எப்படி அந்த குணம் அமைந்தது?
உயிர் பிரியும் அன்று கூட அழகாக பஞ்சாயத்து பைசல்
பண்ணி பெரிய சண்டை வராமால் சமாதானம் செய்து தடுக்கும் உன் பொது நலம் எங்கே? இப்படி யாருக்கு வரும் உயர்ந்த குணம்?
உம்முடயை தொழில் பக்திக்கு என்ன குறை?
பல பேருக்கு அல்லவா வேலை கொடுத்தாய்? அவர்களின் நிலை இனி எப்படி இருக்கப் போகுதோ? கடைசி மூச்சு கூட வேலை ஆட்களின் சம்பளம் கொடுப்பது
தானே இருந்தது? மாறாக கொஞ்சம் உம்மை
பற்றி கவனிக்காமல் போனது ஏன்? சுயநலமே பிடிக்காதோ..
கொஞ்சம் சுயநலமாய் இருந்திருந்தால் பல ஆயிரம் பேருக்கு அல்லவா வேலையும், வாழ்வு ஆதாரத்தையும் அல்லவா கொடுத்து இருப்பாய்...
உம்மால் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் உம்முடைய
அடையாளங்கள்...அனைத்திலும் வாழ்ந்து கொண்டு இருப்பாய்? எங்கள் வீடு உம்முடைய முதல் வீடு அல்லவா? முதல் அடையாள சின்னம் அல்லவா? நாங்கள் எப்படி இந்த பிரிவு வலியை தாங்க முடியும்
உறவே...
பிரிவு வலி இப்படி எல்லாம் வலிக்குமா என்பதை உணர
செய்து விட்டாயே...
உம்முடைய நண்பர்கள் நீர் எப்போதும் கண்ணிலே
இருக்கிறாய் என்று சொல்லும்போது அவர்களுக்கு தாங்கும் வலிமையை யார் கொடுப்பது? அவர்கள் கண்ணீரை யார் துடைப்பது?
உம்முடைய விழுதுகள், உறவுகள் எப்படி தாங்குவார்கள்?
வேர்கள் போல் தாங்கியே பழகிய உமக்கு அது தரும் பழம்
சுவையை அறியாமல் போய் விட்டாயே...நீங்கள் இல்லாமல் அவர்களுக்கும் பலம் எங்கிருந்து
வரும்? நீங்கள் இல்லாமல் எதை
சாதித்து விடப் போகிறோம்... புரியாத புதிராக நிர்க்கதியாய் நிற்கிறோம்..
உம்முடைய தானம் என்ன? தர்மம் என்ன?
ஓரு ஒருத்தர் துக்க விசயத்தில் இருக்கும் முதல் ஆள்
நீரே...
சுப விசயத்திலும் அப்படியே...
பல கல்யாண பந்திகளில் சேவை என்ன?
எத்தனை விசேஷங்களில் கடைசி பந்தியில் தான் உம்மை
பார்த்து இருக்கேன்... எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் உரிமையோடு கேட்டு இருப்பதை சாப்பிட்டு இருப்பதை
பார்த்து இருக்கேன்...
பல பேர்க்கு 
Any Time
MANI 
வாழ்ந்த வள்ளலே..இன்னும் பல வருடங்கள் வாழ்ந்தால்
எத்தனை பேர் வாழ்வார்கள் தெரியுமா?
காலமே உனக்கு கண்கள் தெரியாதா?
தவறி அல்லவா அழைத்து கொண்டீர்கள்?
எங்கள் குல சாமியை..
எத்தனை பில்லர்கள் கட்டி இருந்தாலும் எங்களுக்கு
பில்லரா இருந்தவர் அவர் அல்லவா? அவர் இடத்தை நிரப்ப
யாராவது வர முடியுமா?
அரசியல் வாழ்விலும் குறைந்த வாக்கில் தவற செய்து தவறு
செய்துவிட்டீர்... நல்ல அரசியல் சமூக சேவகர் இப்போதைய அரசியலுக்கு தேவை இல்லை
போல..
இந்த உலகத்திற்கும் இப்பேர்பட்ட நல்ல மனுசன் தேவை
இல்லையோ...சீக்கிரம் அழைத்து விட்டீரே...
காலக் கொடுமை என்று இதை தான் சொன்னார்களோ... கலி
காலமோ... என்னத்த சொல்ல...
ஒவ்வொரு நொடியிலும் அல்லவா நினைவில் வருகிறீர்...
எங்கே மனம் சுத்தினாலும் மறுபடியும் உன் நினைவில் உம்மையே சுத்தி வருகிறதே... 
விவரம் தெரிந்த வயதில் இருந்தே 40 வருட நட்பே...உம்முடைய உயிர் மூச்சும் நண்பர்களுடன்
அல்லவா பிரிந்து இருக்கிறது... அந்த நண்பர்களுக்கு யார் வலிமையை கொடுப்பது? நட்புக்கு நாயகரே....
உறவுக்கு உயிரை கொடுப்பவரே..
உறவுகள் எவருக்கேனும் எது என்றாலும் அர்த்த ராத்திரி
கூட விழித்து இருப்பவர் நீர்...அவர்கள் இனி யாரை துணைக்கு அழைப்பார்கள்...
உறவுகளின் முதுகெலும்பு நீர்...
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
இனி எந்த படைக்கு யாரை கூப்பிடுவார் உங்க அண்ணன்..
அண்ணாக்கு மலையாக இருந்தீரே..
எங்களின் நிலாவாக இருந்தீர்...இப்போ நாங்க நாதியற்ற
மேகங்கள் போல இருக்கிறோம்..மேகங்கள் களைவது எப்போ? இதுவும் கடந்து போகும் என்றா...இனி கடப்பதற்கு என்ன
இருக்கிறது என்றா... எங்க இதய சூரியரே...
உம்முடைய ஆன்மா கண்டிப்பாக சாந்தி அடையும்..நீர்
வாழும் போதே மோட்சத்திற்க்கு டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டீர்..
என் மனதிற்குள் இருக்கும்
நான் உன் மேல் கொண்ட
நேசம் என் மரணம் வரை
உன்னுடன் பேசும்.
ஒரு உயிருக்கு ஒரு முறை
மட்டும் தான் மரணம்
ஆனால் அந்த உயிரை
நேசித்தவர்களுக்கு
தினம் தினம் மரணம்.
சொல்லாமல் செல்லும்
உயிர் மிகக் கொடுமையானது
நிமிடங்களில் மரணம்...
கொடுமையானது மரணம்
மிகவும் வன்மையனதும்
இளமையில் மரணம்...!
ஊர் முழுக்க
பல நூறு
சாமி இருந்தாலும்..
அப்பாவுக்கு
இணையாக
ஒரு சாமி
கிடையாது..
உலகில் என்றுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு அப்பாவின்
பிரிவு தான்.
எப்படி கத்தி கதறி
அழுதாலும் சரி..
எத்தனை கோடி பணம்
கொடுத்தாலும் சரி..
மீண்டும் கிடைக்காத
நாட்கள் நான்..
அப்பாவுடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்த நாட்கள் தான்..
ஆயிரம் பேர் 
அருகில் இருந்தாலும்..
அப்பாவின்
அன்பிற்கு ஈடாக
இங்கு ஒருவரும் இல்லை..
அப்பாவின் கையை பிடித்து
வாழ்க்கை பயணத்தை கடந்து
விடலாம் 
ஆனால் அப்பா பாதியில்
இப்படி விட்டுட்டு
போனால் எப்படி?
காணும் காட்சி எல்லாம்
நீங்கள் தானே 
நான் தேடும் உலகம்
நீங்கள் தானே 
பிள்ளைகளை தவிக்க விட்டுட்டு
போயிட்டீங்களே ...
நிறைவாக, தந்தையை இழந்து வாடும்
அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று முதல் இன்று வரை - என்றும்
உன்முகம் வாடியதில்லை
உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும்
துன்முகத்தை நாடியதில்லை - இன்று
மூடிவைத்து உன்முகத்தை நாங்கள்
கூடிவந்து கொண்டு செல்லும்
கொடிய நிலை ஏன் நண்பா...?
பிரிவை தாங்கும் வலிமையை ஆண்டவன் அனைவருக்கும்
தரட்டும்.. 
ஆழ்ந்த இரங்கலுடன் எங்க கண்ணீரை காணிக்கை
செய்கிறோம்..
வலியுடன் எந்த வழியும் தெரியாது பிதுங்கிய விழிகள்
Miss
u............ நட்பே, உயிரே,உறவே....
 இதை விதி என்று கூறுவது விவேகம்மல்ல, இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு
முழுக்க முழுக்க காரணம். 
 மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே
போவதற்கான காரணங்களுள் தலையாயது பின்வருவனவையே ஆகும். 
1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை.
2. இரவில் கண் விழித்திருத்தல்.
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள
நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்.
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்.
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.
வாழ்வில்
உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை
தொட்டி அல்ல. 
உணவை
ரசித்து அவசரமின்றி பொருமையாக உண்ணுங்கள் நேரத்துக்கு உறங்குங்கள். 
இரவு
உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.
தினமும்
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்?
( பழகியவர்கள் இளம்சூடான நீர்) அருந்துங்கள்.
தினமும்
ஒரு பழத்தை வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு
நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது.
பச்சையாக
உண்ணக்கூடிய தேங்காய், ஊற
வைத்த நிலக்கடலை, வெள்ளரி
பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினசரி
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் காலை உணவை தவிர்க்கலாகாது
அளவாக
உண்ணுங்கள்.
எப்போதும்
சுறுசுறுப்பாக இருங்கள். 
தொடர்ந்து
உட்கார்வதை குறையுங்கள்.
உடற்பயிற்சி
உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. 
 தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். 
இறுக்கமாக
இருக்காது சிரித்து பேசி சந்தோசமாக இருங்கள். உங்கள் நட்பு வட்டத்தை பேணுங்கள்
ஆளை
கொல்லும் கவலைகளை புறந்தள்ளி ஆளுமையை தரும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள்.
 வாழ்க்கை ஒரு அற்புத பரிசு. அனுபவிக்க மனம் தான்
முதன்மையானது. 
புகழ், பணம், செல்வாக்கு எல்லாம் வேண்டுமானால் மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை குறிவைக்கவேண்டும்.
சுய முன்னேற்றமும், அறிவும் வேண்டும் என்றால் மக்களை விட்டு விலகி ஓடி தனிமையை நாடவேண்டும். அதனால் தான் புத்தர் முதலில் மக்களை விட்டு விலகி தனிமையை நாடி ஓடினார். உலகின் மிகசிறந்த தத்துவங்கள் எல்லாம் தனிமையில் தோன்றியவை. மிகப்பெரிய தத்துவநூல்கள் பலவும் சிறையில் எழுதபட்டவை
ஒன்றாக
இனைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள் பலரும் தனித்தனியாக வேலை செய்து கடிதம், இணையம், தொலைபேசி மூலம் இணைந்து
பணியாற்றியவர்களே
நாலைந்து
விஞ்ஞானிகள் குழுவாக சேர்ந்தால் என்ன செய்வார்கள் என நினைக்கிறீர்கள்?
நால்வரும்
சேர்ந்து டின்னருக்கு போவார்கள், தண்ணி
அடித்துவிட்டு "எந்த விஞ்ஞானி யாரை வைத்துக்கொன்டு இருக்கிறார்? எப்படி திருட்டுதனம் செய்து கிராண்ட்
வாங்கினார்" என தான் கதை பேசுவார்கள்.
அதே
தனியாக இருந்தால் தன் கண்டுபிடிப்பில் மூழ்கி ஆராய்ச்சிகளை செய்வார்கள்.
தனிமை
நம்மை ரீசார்ஜ் செய்யும் தன்மை கொண்டது. மக்களை அணுகுவதும் அவசியம். அது நம்
கண்டுபிடிப்பை உலகுக்கு நன்மை செய்ய பயன்படுத்தும் விசயம்.
ஆனால்
மக்களை அணுகுவதற்கு முன் தேவைப்படுவது தனிமை...
தனியாக
இருப்பவர்கள் சைக்கோக்கள், தனியாக
உட்கார்ந்து பழிவாங்க திட்டம் போட்டுக்கொண்டு இருப்பார்கள் எனும் அச்சம்
மக்களுக்கு உண்டு. ஆனால் தனிமை தான் காயங்களை ஆற்றும் மாமருந்து. தனிமையில்
இருந்து வலிகளை மறந்தால் மிகப்பெரிய தீமை செய்தவனை கூட அதன்பின் தண்டிக்க
தோன்றாது.
அசுரர்கள்
கூட தனிமையில் தவம் செய்து சக்தியை அடைந்தபின்னரே உலகை வென்றார்கள். அசுரர், தேவர், முனிவர்..அனைவருக்கும் வலிமை தருவது
தனிமை. ஆனால் அந்த வலிமையை மக்களிடம் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான்
அவ்ர்கள் அசுரரா, தேவரா, முனிவரா என்பது நிர்ணயம் ஆகிறது
அடுத்தவர்களின்
வளர்ச்சியை கண்டு பொறாமை படாதீர்கள்,
அடுத்தவர்களை
குறை கூறிக்கொண்ட இருக்காதீர்கள். நமது வளர்ச்சி பாதை என்ன என்பதை பற்றி மட்டுமே
சிந்தித்து செயல்படுங்கள்.
ஒரே
பக்கத்தில் எழுத வேண்டிய உங்கள் கவலைகளை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து உங்கள்
வாழ்க்கைப் புத்தகம் முழுவதும் நிரப்பி விடாதீர்கள்.
பிரச்சினைகளை
பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரச்சினைகள் வந்து சேரும்.
தீர்வுகளைப் பற்றி சிந்தித்தால் நிறையவே வாய்ப்புகள் உங்கள் எதிரே தோன்றும்.
ஒரு
வருடம் என்பது, 365
நாட்களை கொண்டதல்ல. 365
வாய்ப்புகளைக் கொண்டது. வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றியை உறுதி செய்யுங்கள்.
  
When Things Get Stopped Being Easy, Please Do
Understand, You are Moving on the Right Path.
வாழ்க்கை
அழகானது❤
உங்கள்
மீது அன்பு வைத்திருப்பவர்களை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்... பயன்படுத்திக்
கொள்ளாதீர்கள்.
ஆழ்கடலில்
தொலைத்த மழை துளியை ஆகாயம் தேடி என்ன பயன்.
குரங்கை
குட்டிக்கரணம் அடிக்க வைத்து கழைக்கூத்தாடி வித்தைக் காட்டுபவர் சுற்றியுள்ள
ஜனங்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்கு ஆவல் கொள்வது போன்றது அல்ல வாழ்க்கை.
"வாழ்க்கையில் 100% யாரையும் திருப்தி பண்ண
முடியாது".
காட்டாற்று
வெள்ளம் தன்னிச்சையாய் மேடுகளைக் கடந்து பள்ளங்களை நோக்கிப் பாய்வது போன்றே
அழகானது வாழ்க்கை.
நமது
சுயத்தோடு மகத்தான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.
சுற்றியுள்ள
மனிதர்கள் அந்த காட்டாற்றை நோக்கி தனது தாகம் தீர்க்கவும் வரலாம். தனது உடலைச்
சுத்தம் செய்யவும் வரலாம். வரட்டுமே ,
அதனால்
என்ன ... உலகுக்கு பயன் என்று நமது வாழ்க்கை இருந்துவிட்டுப் போகட்டுமே..!
திருப்தி
என்பது நமக்கு நாமே அடைந்தால் போதும்.
வார்த்தையால்
பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.
தனியே
நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
உங்களுக்கானது
உங்களை வந்தடையும் எனவே பிறரின் வளர்ச்சியைக் கண்டு மகிழுங்கள், வாழ்த்துங்கள். விரைவில் நீங்களும் அந்த
நிலையை அடைவீர்கள்.
தளராத
நம்பிக்கை,
இடை
விடாத முயற்சி ஆகிய இரண்டையும் எப்போதும் வழித்துணையாகக் கொள்ளுங்கள்..!!!
உலகில்
மனிதன் என்று யாருமே இல்லை...
எண்ணங்கள்தான்
இருக்கின்றன...
என்னைச்சுற்றி
உங்களைச்சுற்றி எங்கும் எங்கும் எண்ணங்கள்....
நான்
என்பதும் நீங்கள் என்பதும் எல்லாம் எண்ணங்களே...
நாம்
எண்ணத்தால் வாழ்கிறோம்.. எண்ணத்தால் வீழ்கிறோம். 
எண்ணி
எண்ணி வாழ்கிறோம்...
எண்ணி
எண்ணிச் சாகிறோம்..
எண்ணி
எண்ணி ஆறுதலடைகிறோம் எண்ணி எண்ணி அஞ்சுகிறோம்
எண்ணத்தால்
வாழ்கிறோம்.. எண்ணத்தால் சாகிறோம்...
எண்ணத்தால் எழுதினேன்...
என்னதான்......
என்னதான்
வானத்தில்
பறந்தாலும்
பறவை
கால்கள்
இருக்கும்
நம்பிக்கையில்தான்
தரையில்
இறங்குகிறது
என்னதான்
வானத்தில்
மிதந்தாலும்
சக்கரங்கள்
இருக்கும்
நம்பிக்கையில்தான்
விமானங்கள்
கீழே
இறங்குகின்றது
என்னதான்
தத்துவங்கள்
இருந்தாலும்
காதல்
கொடுக்கும்
தைரியத்தில்தான்
கவிதைகள்
இருக்கின்றது
என்னதான்
அழகு
இருந்தாலும்
கண்ணாடி
இருக்கும்
தைரியத்தில்தான்
அவை
கலையாமல் இருக்கின்றது
என்னதான்
சேர்த்து
வைத்தாலும்
செலவு
இருக்கும்
தைரியத்தில்தான்
சேமிப்பே
இருக்கிறது
என்னதான்
அவமானம்
வந்தாலும்
நம்பிக்கை
கொடுக்கும்
தைரியத்தில்தான்
உயிரே
இருக்கிறது
என்னதான்
மகிழ்ச்சி
வந்தாலும்
நீ
இருக்கும்
தைரியத்தில்தான்
கொண்டாட்டம்
இருக்கிறது
என்னதான்
கவலை
வந்தாலும்
மரணம்
இருக்கும்
தைரியத்தில்தான்
வாழ்க்கை நடக்கிறது.
"அமைதியைத் தேடி.."
நம்மைச்
சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில்
சாத்தியமில்லை.*
தொடர்
நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே
தான் இருக்கிறது. அது ஓய்வதில்லை.*
அந்த
வேலைகளுக்கு இடையேயும், அமைதியான
உறக்கம் போல, நம்
உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க
முடியாது.*
அந்த
அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.*
அனைத்து
வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி
அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல..
ஆயிரம்
துன்பத்திற்கு நடுவே, நிச்சயம்
ஒரு நாள் விடியும்” என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே அவர்களிடம்
இருப்பது தான் அமைதி.*
எத்தனையோ
தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு
நேரும் மான அவமானங்களை விட,*
'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப்
பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே… அவர்கள்
உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி...*
சாத்தியமில்லாத
இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!*
ஆம்., தோழர்களே.
தொல்லைகளும்
துன்பங்களும், பிரச்னைகளும்
சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''..✍🏼🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : இளம்வயது மரணங்கள் ஏன்? - தனிமை எப்படி இருக்க வேண்டும்? ஏன் அவசரம்? [ ] | Welfare : Why young deaths? - What should loneliness be like? Why the rush? in Tamil [ ]