வகை பட்டியல்

மந்திரத்தின் பயன்கள் | Uses of Mantra

மந்திரத்தின் பயன்கள்

சப்த கோடி மஹா மந்திரம் என்று சொல்லப்படுகின்ற நமஹ, சுவாஹா, சுவதா, வௌஷட், வஷட், பட், ஹும் என்பதன் அர்த்தம் என்ன? நமது பெரியவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு அந்த வாக்கியம் "மந்திரத்தின் பலன் அதன் கோடியில்" என்பார்கள். இங்கே கோடி என்பது எண்ணிக்கை அல்ல கடைசி என்று பொருள்படும். தெருக் கோடி சொல்வோம்ல அப்படி. பொதுவாக கடவுளின் மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும் எதுவும் தெரியாத வேடன் கண்ணப்ப நாயனார் என்ன மந்திரம் சொன்னார்னு நமக்கு தெரியாது இப்ப நம்ம சப்த கோடி மந்திரத்துக்கு வந்துருவோம் சப்த - ஏழு கோடி - கடைசி, இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது. கடைசி இறுதி என்ற பொருளில் வருகிறது “நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, ஹீம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் கடைசி முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன. சமஸ்கிருதத்தில் மமஹ என்ற சொல்லிற்கு எல்லாம் என்னுடையது என்று பொருள். இந்த மமஹ என்ற சொல்லிற்கு முன்னால் ந என்ற எழுத்தைச் சேர்த்தால் நமஹ என்று எதிர் அர்த்தத்தை குறிக்கும் பொருளாக அமைந்துவிடும். அதாவது எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்று பொருள். எல்லாம் பகவானுடையதே என்று அர்த்தம். அர்ச்சனையின் போது சமர்ப்பிக்கப்படும் பூஜை பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானது, வழிபடும் நாமும் இறைவனுக்கே சொந்தம் என்ற பொருள் படத்தான் இறைவனின் திருநாம மந்திரங்களோடு நமஹ என்று உச்சரிக்கப்படுகிறது. நமஹ - வணங்குகிறேன் என்று பொதுவான அர்த்தம் உண்டு. சப்த கோடி மஹா மந்திரம் என்று சொல்லப்படுகின்ற நமஹ, சுவாஹா, சுவதா, வௌஷட், வஷட், பட், ஹும் என்பதன் அர்த்தம் என்ன? நமது பெரியவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு அந்த வாக்கியம் "மந்திரத்தின் பலன் அதன் கோடியில்" என்பார்கள். இங்கே கோடி என்பது எண்ணிக்கை அல்ல கடைசி என்று பொருள்படும். தெருக் கோடி சொல்வோம்ல அப்படி. பொதுவாக கடவுளின் மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும் எதுவும் தெரியாத வேடன் கண்ணப்ப நாயனார் என்ன மந்திரம் சொன்னார்னு நமக்கு தெரியாது இப்ப நம்ம சப்த கோடி மந்திரத்துக்கு வந்துருவோம் சப்த - ஏழு கோடி - கடைசி, இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது. கடைசி இறுதி என்ற பொருளில் வருகிறது “நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, ஹீம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் கடைசி முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன. சமஸ்கிருதத்தில் மமஹ என்ற சொல்லிற்கு எல்லாம் என்னுடையது என்று பொருள். இந்த மமஹ என்ற சொல்லிற்கு முன்னால் ந என்ற எழுத்தைச் சேர்த்தால் நமஹ என்று எதிர் அர்த்தத்தை குறிக்கும் பொருளாக அமைந்துவிடும். அதாவது எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்று பொருள். எல்லாம் பகவானுடையதே என்று அர்த்தம். அர்ச்சனையின் போது சமர்ப்பிக்கப்படும் பூஜை பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானது, வழிபடும் நாமும் இறைவனுக்கே சொந்தம் என்ற பொருள் படத்தான் இறைவனின் திருநாம மந்திரங்களோடு நமஹ என்று உச்சரிக்கப்படுகிறது. நமஹ - வணங்குகிறேன் என்று பொதுவான அர்த்தம் உண்டு. வேறு பொருளும் உண்டு. 'நமஹ' என்ற வடமொழிச்சொல்லிற்கு 'போற்றி' என்றோ 'வணங்குகிறோம்' என்றோ பொருள் கூறலாம். மற்றும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்த தத்துவமே அடங்கியிருக்கிறது. 'ந' என்றால் 'இல்லை' என்று பொருள். 'ம' என்ற மெய்யெழுத்து 'மம' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளான 'எனது' 'என்னுடையது' என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. அதனால் 'நமஹ' என்று உச்சரிக்கும்போது 'என்னுடையது இல்லை' என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம். அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள்.

கணவன் மனைவி உறவு | Husband wife relationship

கணவன் மனைவி உறவு

பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்! ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்! பெண் என்கிற கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்! கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்! அன்பாகப் பேசுங்கள் சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்!! மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்! உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்!

பாட்டி வைத்தியம் | Grandma's Remedies

பாட்டி வைத்தியம்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்? இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல். மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை எளிய வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். ⭐ போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். ⭐ காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். ⭐ வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல். இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும். ⭐ தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள். ⭐ தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. ⭐ இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும். ⭐ இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

விளம்பரம் | Advertising

விளம்பரம்

பின்வரும் காரணங்களுக்காக இந்தியாவில் விளம்பரத்திற்கான மிகவும் பிரபலமான தளங்களில் சினிமா தியேட்டர் ஒன்றாகும்:

பெண்களுக்கான அழகு மற்றும் ஆரோக்யா குறிப்புகள் | Beauty and health tips for women

பெண்களுக்கான அழகு மற்றும் ஆரோக்யா குறிப்புகள்

* உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுப்டலாம். * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும். * தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும். * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும். * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். * தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும்.

ஆண்களுக்கான அழகு மற்றும் ஆரோக்யா குறிப்புகள் | Beauty and health tips for men

ஆண்களுக்கான அழகு மற்றும் ஆரோக்யா குறிப்புகள்

டீ-ஷர்ட், ஃபிட் ஆன ஆடைகளை அணிய முடியவில்லையா? தொப்பை பற்றின கவலையா ? தொப்பை எல்லோருக்கும் இருக்கக்கூடியது. நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத போது தானாக தொப்பை வரும். சரியான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவை தடைப்படும்போது, உடலின் அமைப்பு மாறிவிடும். தொப்பை எதனால் வருகிறது என்றும் அதனை எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம். 1. ஆரோக்கியமற்ற உணவுகள் சீஸி ஃப்ரை, சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, ஜிலேபி போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்யும். இவ்வாறான உணவுகளில் உடலுக்கு தேவையான எந்த ஆரோக்கியமும் கிடையாது. இதுபோல சிற்றுனவுகளை தவிர்க்க வேண்டும். 2. உடற்பயிற்சி செய்யாதிருத்தல் கார்டியோ வொர்க் அவுட் செய்வதால், தொப்பை குறையும் என்று நீங்கள் நம்பினால் அது முற்றிலும் தவறு. தினமும் யோகா, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை செய்வது நல்லது. இதயம் பலப்படுவதோடு தட்டையான வயிறையும் பெறலாம். 3. மன அழுத்தம் மன அழுத்தமும் உடல் எடை மற்றும் தொப்பை வர ஒரு முக்கிய காரணம். மன அழுத்தமானது உடலில் கார்டிசாலை சுரக்க செய்கிறது. இது உடல் இயக்கத்துக்கு தேவையானதை விட அதிகமாக, கல்லீரலில் இருந்து சர்க்கரையை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை கூடும் வாய்புகள் உள்ளது.

சட்டம் | Law

சட்டம்

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

மனை | Real  Estate

மனை

நாம் வீடு, நிலம் வாங்கும்போது அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்பிக்கையின் அடிப்படையிலும் முழுமையில்லாத தகவல்களின் அடிப்படையிலும் பலர் சொத்துகளை வாங்கிவிடுகிறார்கள்.

பைரவர் | Bhairav

பைரவர்

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.

தோல்வி | Failure

தோல்வி

நாம எல்லோருமே எதையோ அடைவதற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எதையாவது அடைந்த பின்னும் மனதில் அமைதியில்லை. நமது உடலும் உள்ளமும் அதை கொண்டா இதை கொண்டா என்று நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.

பணம் | Money

பணம்

சிலர் எந்த நேரமும் பணம் பணம் பணம் இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி பணம் சம்பாதிப்பது. எப்படி அதை பாதுகாப்பது. அது எந்தெந்த வழியில் பெருக்குவது என்று சிந்தனையோடு மட்டுமே செயல்படுவார்கள். இப்படி செயல்படுபவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் செல்வம் இருக்கும் மீதி அனைத்தும் சென்றுவிடும்.

மஹாலட்சுமி தேவி | Goddess Mahalakshmi

மஹாலட்சுமி தேவி

ஜாதகத்தில் பணக்கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய திசா புத்திகள் நடப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த முறைகளை கடைபிடித்து வந்தால் ஸ்ரீ மஹாலட்சுமியின் அருள்பெற்று பணக்கஷ்டம் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். 1. விநாயகருக்கு தினம் மூன்று நாட்டு வாழைப்பழங்களை கோவிலில் சமர்ப்பித்து வணங்கி வரவும். தொடர்ந்து 41 நாட்கள் இதை செய்யவும். 2. ஆலமரத்தின் அடியில் சுத்தமான பசும் பால் மற்றம் சர்க்கரை சேர்த்து ஊற்றி ஈரமான மண்ணெடுத்து சிறிது நெற்றியில் இட்டுக்கொள்ளவும். 3. வியாபாரத்திலும் உத்யோகத்திலும் பணம் சம்பந்தமான நஷ்டம் ஏற்படாமல் இருக்க காய்ச்சாத பசும்பால் 4 மடங்கிற்கு 1 மடங்கு பார்லி அரிசி கலந்து ஆற்றுப்பிரவாகத்தில் சேர்க்கவும். 4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மாதுளம் பழம் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று கடவுளுக்கு சமர்ப்பிக்கவும். 5. உங்கள் படுக்கையறையில் சுத்தமான இடத்தில் மயிலிறகை வைக்கவும். 6. ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த செப்பு டாலர் கழுத்தில் தொங்கவிடவும். 7. ஆண்கள் வலது சுண்டு விரலிலும்¸ பெண்கள் இடது சுண்டு விரலிலும் வெள்ளி வளையம் போட்டுக்கொள்ளவும். 8. வெள்ளியில் செய்த சதுர வடிவ நாணயத்தை எப்போதும் பர்சில் அல்லது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.