 
		
		          மன பலம் எப்படி இருக்க வேண்டும்?
Category: நலன்
மனமானது திடமாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான திடம் என்றால் உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் இருத்தல் வேண்டும்.
 
		
		          வெற்றி அடைவதற்குத் தேவையான குணநலன்கள்
Category: நலன்
பொதுவாக மனிதர்கள் இரண்டு வகை குணங்களைப் பெற்றிருப்பார்கள்.
 
		
		          தலை விதியை மாற்றும் விதிகள்
Category: நலன்
ஒரு மனிதருடைய மகிழ்ச்சி ஆகட்டும்! சலிப்புகள் ஆகட்டும்! இரண்டும் அவனே உருவாக்கி கொள்வது ஆகும்.
 
		
		          அவசியம் தெரிய வேண்டிய குண நலன்கள்
Category: நலன்
உங்களை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
 
		
		          அவசியம் தெரிய வேண்டிய காடுகளின் நலன்கள்
Category: நலன்
வனவிலங்குகளும், கோடான கோடி உயிர்களும் வாழும் காடுகள் இயற்கை மணத்துடன் தூய்மையாக அமைதியாக அழகாக இருக்கின்றது.
 
		
		          மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?
Category: நலன்
புறவைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து வளர்த்து வழிகாட்டும் வரை ஆண் பெண் உறவை நாடாது.
 
		
		          மனித உறவுகளைப் பற்றி தெளிவான விளக்கம்
Category: நலன்
தாயின் கருவறையில் வளர்கிறான். தாயின் வயிற்றுக்குள் வளர்ந்தவன் பூமித்தாயின் மடியில் விழுகிறான்.
 
		
		          இன்று தாய்மை இருக்கிறதா?
Category: நலன்
மனித இனத்தை தவிர மற்ற அனைத்து உயிர்களிடமும் அன்று முதல் இன்றுவரை தாய்மையின் கடமை உணர்வில் சிறிதும் குறையவில்லை.
 
		
		          அன்பு உலகை ஆளுமா?...
Category: நலன்
கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?
 
		
		          நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க எப்படி வாழவேண்டும்?
Category: நலன்
நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன் கேட்டான்.
 
		
		          நல்ல குழந்தைகள் உருவாக்ககூடிய செயல் முறைகள்:
Category: நலன்
உங்கள் குழந்தைகளுடன் குறைந்தது இரண்டு முறையாவது உணவு உண்ணுங்கள். விவசாயிகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்பு பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்.
 
		
		          அழியப்போகும் உறவுமுறை?
Category: நலன்
இந்த தலைமுறையிலேயே தொடங்கிவிட்டது... சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பி .. அத்தை மாமா.. பாட்டி.. தாத்தா..யாரு வீட்டுக்கும் தன் குழந்தைகளை அனுப்புவதில்லை ... யார் தேவையிலும் யாரும் கலந்து கொள்வதில்லை .. நெருங்கிய உறவு தேவைகளுக்கு கூட குழந்தைகளோடு செல்வதில்லை...உறவு முறையே சரியாக தெரியவில்லை... எப்படி வளர்க்கிறோம் ஆனால் நிச்சயம் இனி வரும் காலங்களில்...
 
		
		          10 நிமிடம் ஒதுக்கினால் போதும்...
Category: நலன்
10 நிமிடம் மனைவி முன் உட்காருங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.
 
		
		          இக்கரைக்கு அக்கரை பச்சை:
Category: நலன்
அனைவரது வாழ்க்கையிலும் அவ்வப்போது வந்து செல்லும் நினைவுதான்.......
 
		
		          பொறுமை நம்பிக்கை இருந்தால் என்ன கிடைக்கும்?
Category: நலன்
ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... கவலை கொள்ளாதீர்கள்...
 
		
		          இளம்வயது மரணங்கள் ஏன்?
Category: நலன்
தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''
 
		
		          எப்படி பட்ட பாடங்களை படிக்க வேண்டும்?
Category: நலன்
ஒன்பதாவது படிக்கும் மகன் வகுப்பில் இரண்டாம் ரேங் வாங்கியிருந்தான். தந்தை சொன்னார். மகனே படிப்பதில் ரேங்கிற்காக படிப்பதைவிட நீ உன் பாடம் தொடர்பான புத்தகங்கள் நூல் நிலையத்தில் இருக்கின்றன. அவற்றைப்படி, அறிவு விரிவடையும். கிணற்றுத் தவளையாக இருக்காதே.
 
		
		          'செய்தார்க்கு செய்தவினை'
Category: நலன்
துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை இன்பங்களாக மாற்ற வேண்டுமானால்.. அனைத்தையும் ரசிக்க கற்றுக் கொள்..
 
		
		          என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
Category: நலன்
வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
 
		
		          வாழ்க்கை ரகசியம்
Category: நலன்
இயல்பாக சென்று கொண்டிருக்கும் வாகனத்தை ஒரு பெண்ணை பார்த்தவுடன் விரட்டுவது.
 
		
		          வெற்றி வேண்டுமா? வாயை திறக்காதீர்கள் !!!
Category: நலன்
உங்கள் இலக்கு நோக்கிய உங்கள் பயணப் பாதை எப்போதும் இலகுவாக இருக்கத் தேவையில்லை.
 
		
		          மகிழ்ச்சி பணத்தில்லா? அல்லது மனதில்லா?
Category: நலன்
எதற்காக வாழ்கிறோம் என்று நினைக்காதே.... எப்படி வாழ்கிறோம் என்று நினைத்து வாழுங்கள்...
 
		
		          எண்ணம்போல் வாழ்க்கை
Category: நலன்
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா?’ என்றார். ‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான். கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.
 
		
		          கடமை உணர்வோம்
Category: நலன்
ஒரு விமான பயணத்தின் போது ஒரு பயணிக்கு மது கொடுத்த போது அந்த பயணி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விமானப் பணிப்பெண்
 
		
		          கோடையை வரவேற்போம்
Category: நலன்
ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்? மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்:
 
		
		          பசுவுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கு தெரியுமா
Category: நலன்
பசுவுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்குப் புரியாது.. பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. எருமை சேற்றை விரும்புகிறது. பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை விரும்புகிறது.
 
		
		          வெயில் காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
Category: நலன்
வெயிலின் உக்கிரமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காலை வேளையில் எவ்வளவு புத்துணர்ச்சியாக வெளியே சென்றாலும் ஓரிரு மணி நேரத்திலேயே நம் எனர்ஜி அனைத்தும் போய் விடுகிறது.
 
		
		          அதிகமானால் என்ன கிடைக்கும்?
Category: நலன்
1. அதிகம் பேசினால் பொய் சொல்வீர்கள். 2. அதிகமாக யோசித்தால் மனச்சோர்வு ஏற்படும்.
 
		
		          உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றிக் கொள்ள சிறந்த வழிகள்.....
Category: நலன்
1. டச் ஃபோன தலைய சுத்தி தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நல்ல கீபேட் ஃபோன வாங்குங்க… முடியலையா கண்ணுக்கு படாத இடத்துல போய் வச்சுடுங்க..
 
		
		          மனிதர்கள் எப்படி இருப்பார்கள்?
Category: நலன்
01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது. 02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
		
		          உழைப்பின் அருமை...
Category: நலன்
ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணி செய்ய தனது மகனை மாத காலத்திற்கு அனுப்பி வைத்தார்.
 
		
		          கோபம் எதனால் வருகிறது
Category: நலன்
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்.
 
		
		          என்றும் செல்வ செழிப்புடன், சந்தோஷமும் இருக்க தேவையான ரகசியங்கள்:
Category: நலன்
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது. நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
 
		
		          ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை……
Category: நலன்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அது நூறு சதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
 
		
		          நேர மேலாண்மை...
Category: நலன்
வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். ஒன்று...வெற்றியைத் தேடி ஓடணும். இரண்டு...தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்.
 
		
		          வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது எப்படி
Category: நலன்
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள்.
 
		
		          எப்போதும் அமைதி வேண்டுமா? இதை படியுங்க...
Category: நலன்
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநாள் அவரை சந்திக்க வந்த ஒருவர், ""ஐயா! எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்'" என்று கேட்டார்.
 
		
		          வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க
Category: நலன்
4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.ஒருநாள் பயன் படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள். சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
 
		
		          ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்... - தெரிந்துகொள்வோம்
Category: நலன்
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களில் பாதிப் பேருக்கு, அது இருப்பதே தெரியாது என்பதுதான் அபாயமான விஷயம். உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள் ‘பளிச்’சென்று தெரிவதில்லை. ஆனால் இப்பிரச்சினையை அறிந்தும் அறியாமலும் விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடக்கூடும்.
 
		
		          நுகர்ந்தாலே மருத்துவப் பலன்களை அள்ளித் தரும் பச்சை கற்பூரம்.
Category: நலன்
பச்சை கற்பூரம் அனைத்து இனிப்புப் பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் யன்படுத்தும் பொருட்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள். கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு. பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். இது ‘காம் ஃபர் லாரல்’ என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. பச்சை கற்பூரம் சீனா, ஜப்பான் நாடுகளில் விளையும் கற்பூர மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கக் கூடிய பொருளாகும். இந்த பச்சை கற்பூரமானது எந்தவித பக்குவமும் அடையாத மரப்பட்டை மூலம் கிடைக்கிறது. இது உணவின் சுவைக்காகவும் வாசனைக்காகவும்ப போடப்படுகிறது என்பதுதான் பெரும்பாலானோருக்குத் தெரியும். பச்சைக் கற்பூரம் ஒரு சித்த மருத்துவப் பொருள். இது எட்டு விதமான குன்மங்களையும், மூட்டுகளில் ஏற்படும் வலி, வாதநோய் போன்றவற்றை நீக்கும். இதில் ஈசன், வீமன், பூதாச்சிறையன் என மூன்று வகை உண்டு.
 
		
		          உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே
Category: நலன்
மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..! ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்! உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும் பிடி சாம்பலாகி விடும்..! புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...! ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..! ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக, இருப்பது உன் உடலே...! அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..! உன் அக குடும்பம் சரியில்லை என்றால் சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..! உன் உள் குடும்பம் உன் உடலே! அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும் உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

நல்லதொரு உலகம் உருவாக உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு செயலும் நலனை குறிப்பதே ஆகும்.
: நலன் - குறிப்புகள் [ நலன் ] | : Welfare - Tips in Tamil [ Welfare ]
நலன் 
நலன்
என்பது நல்ல ஆரோக்யத்தையும், நல்ல உயர்ந்த சிந்தனைகள், நல்ல சமுகம், நல்ல உடல்,
நல்ல உள்ளம், நல்ல வருமானம், நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல குழந்தைகள், நல்ல
குழந்தைகளின் ஆரோக்கியம், நல்ல கலாச்சாரம், நல்ல வாழ்க்கை முறை, நல்ல சுற்றுச் சூழல்,
நல்லதொரு உலகம் உருவாக உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு செயலும் நலனை குறிப்பதே
ஆகும். அப்பேற்பட்ட நலன் சம்பந்தமான அனைத்து விசயங்களும் இந்தத் தலைப்பில்
பதிவிடப்படுகிறது. தமிழர் நலம் வலைதளத்தில் தமிழர் நலன்களை ஊக்குவிக்கும்
அனைத்தும் ‘நலன்’ தலைப்பில் பதிவிடப்படும். 
தொழிலாளர்கள்
நலன், வெற்றியாளர்களின் நலன், தனி மனிதனின் நலன், சமுதாயத்தின் நலன், வளர்ச்சியின்
நலன், புரட்சியின் நலன், தனி மனித உடல் நலன் மற்றும் ஊக்கம் அதாவது
தன்முனைப்பாற்றல் என்னவென்றால் ஒரு செயலை செய்வதற்கும், ஆரம்பிக்க நினைப்பதர்க்கும்,
செயலை தொடர்ந்து துவன்று விடாமல் செய்வதற்கும், செய்த செயலையே திரும்ப திரும்ப
செய்வதற்கும் சில ஊக்கம் கொடுக்கக்கூடிய உந்து சக்தி, நேர்மறை ஆற்றல், கிரியா
ஊக்கி  உடலுக்கோ மனதுக்கோ தேவைப்படுகிறது. இந்த
ஊக்கம் இருந்தால் தான் மனதானது திருப்தி அடையும். இன்னும் கூடுதல் சேர்த்து சொல்வதென்றால்
ஒரு செயலைச் செய்வதற்கு முன் மனதில் அந்த செயலை பற்றிய நேர்மறை சிந்தனைகள் இல்லை
என்றால் நம் மனதிற்கு ஊக்கம் இருக்காது. ஊக்கம் இல்லாமல் செய்யும் எந்தச் செயலும்
சிறப்பு பெறாது. ஏன் அந்தச் செயலில் வரும் தடைக்கற்களை கூட படிக்கற்களாக மாற்றி
முன்னேறிச் செல்வதற்கும் இந்த ஊக்கமே தேவை. இந்த ஊக்கம் செயல் முடியும் வரையிலும்
இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்த ஊக்கத்தை நாம் கங்காரு தன் குட்டியை
வயிற்றில் கட்டிக்கொண்டே செல்லுமே அது போல நாம் எப்போதுமே இந்த ஆற்றல், ஊக்கம், நேர்மறை
எண்ணங்கள் போன்றவற்றை உள்ளத்தில், ஆழ்மனதில் அசையா, அழியா சொத்தாய் வைக்க வேண்டும்.
அப்புறம் பாருங்கள் நீங்கள் விரும்பும் அனைத்து செல்வங்களையும், சொத்துக்களையும்
இந்த ஊக்கம் கொண்டு வந்துச் சேர்க்கும். உங்கள் மூலதனம் இந்த ஊக்கம் ஒன்று போதுமே.
மன உறுதி பெறுவதற்கே இந்த ஊக்கம் தான் மூலதனம். மனம் உறுதியாக இருந்தால் எப்படிப்பட்ட
செயல் ஆனாலும் முடிக்கும் திறன் இந்த மன உறுதிக்கு உண்டு என்பது அனைவருக்கும்
தெரிந்ததே.
பிரச்சனைகளை கையாள்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை தெரிந்தவர்கள்
எதையும் சாதித்து விடுவார்கள். எடுத்துக்காட்டாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு செயல்
திட்டம் தீட்டப்படுகிறது. அதில் எத்தனை மனிதர்கள் வேண்டும், அவர்களின் உழைப்பின்
நேரங்கள், செய்து முடிக்கும் வேலைகளின் காலங்கள் கொண்டு எப்போது முடிக்கலாம் என்று
உறுதியாக சொல்லப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தோரயமாக 20 பேர்கள் கொண்டு
ஆரம்பிக்கப்படுகிறது. 10 பேர்கள் தான் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். மீதி
10 பேர்கள் தேட காலம் தேவைப்படும். இல்லை என்றால் கலவைக்கு இயந்திரம் இருக்கிறது
என்றால் 10 பேர்கள் தேடும் காலம் சேமிக்கப்படும். இதுவெல்லாம் நாம் செய்யும்
செயலில் வரும் பிரச்சனைகள், தடைகற்கள் ஆகும். நாம் அதை கையாளத் தெரிந்தால் அது
நமக்கு பிரச்சனையே இல்லை. மாறாக நமக்கு கிடைக்கும் தீர்வுகள். எளிதாக முடிக்க
கூடிய கலவை இயந்திரத்தை பயன்படுத்தும் வசதிகளை நமக்கு காட்டும் வாய்ப்புகள் ஆகும்.
நாம் மைனஸ் என்று நினைக்கும் இணை கோடுகளின் மேல் நேர் கோடு போட்டு பிளஸ் ஆக்குவதே
நாம் கையாளும் திறன் ஆகும். இன்னும் பிரச்சனைகள் வரலாம். அஸ்திவாரம் அதிகமாக போட
வேண்டி வரலாம். மழைத் தண்ணீர் வராமல் இருக்க பாலம் போட வேண்டி வரலாம். இன்னும்
பிரச்சனைகள் பல. ஆனால் அதன் தீர்வு உங்கள் கையில் இருந்தால் தேர்வில் வெற்றியே.
இது போலத் தான் எந்தச் செயலிலும் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பிரச்சனைகள்
வரத் தான் செய்யும். நாம் தான் அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். ஏன் அறிவியல் கூற்றுப்படியும்
ஒவ்வொரு செயலுக்கும் எப்போதும் எதிர்ச் செயல் இருக்கத் தான் செய்யும் என்பது
உண்மை. எந்த ஒரு செயல் செய்யும் முன்னே தடைகளை பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால்
மனம் தடைப்படும். ஒரு செயலை செய்ய அதிக நேரம் சிந்தனை செய்தாலே அந்தச் செயல் செய்யாமல்
போவதற்கே அதிக வாய்ப்பு என உளவியல் சொல்கிறது. ஒருமுறை சிந்தித்தால் சிந்தனை.
பலமுறை சிந்தித்தாலே குழப்பம் தான் மிஞ்சும். நாளடைவில் இதைச் செய்யவே வேண்டாம் என
மனது தனது சுவாத்தியமான பிரதேசத்திலே நின்று விடும். சோதனைகளை பார்த்து சாதனைகளை
கைவிடும். மனதிலே எதுவும் பார்த்து கொள்ளலாம் கழுத்துக்கு கத்தியா வரப் போகுது
என்ற மன நிலையும், தோல்விகளை கண்டு துவளாத மன உறுதியும், அந்தச் செயலை செய்தே தீர
வேண்டும் என்ற விடாப்பிடியும், செயலின் மீது ஆர்வமும், இலக்கை நோக்கிய வெறியும்,
நேரங்களை சரியாக பயன்படுத்தும் திறமையும், எதையும் சமநிலையில் எடுத்துச் செல்லும்
பக்குவமும், அதாவது கடலில் மூழ்காமல் மிதக்க கற்றுக்கொள்ள நீச்சல் திறன் உதவுவது
போல, சரியான நேரத்தில் சரியாக தேவைப்படும் திறமைகளை கொண்டு இருத்தலும், அதிக முனைப்பும்
ஊக்கமும் கொண்டு ஈடுபடுதலும் செயல் வெற்றி அடைவதற்கான தகுதிகள் ஆகும். உடலிலே
ஆரோக்கியம் மட்டுமின்றி உள்ளத்திலும் ஆரோக்கியம் இருந்தால் செயலும் ஆரோக்யமாக
முடியும். ஒரு மனிதருக்கு உள்ளம், உடல், அறிவு நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றே.
இதுவே அவருக்கு தேவைப்படும் சொத்துக்கள் ஆகும். இழந்த அனைத்தையும் பல மடங்கு எதிர்
பாராத வெற்றியையும் சேர்த்து இழுத்து கொண்டு வரும் சக்தியாகும். என்றைக்குமே செயல்
பெருமை தருவது இல்லை. அதன் வெற்றியே பெருமை தரும். இதைத் தான் நம்மூரில்
பெருமைக்கு எருமை மேய்க்காதே என்பார்கள். ஊக்கம் இல்லாதவனை விலங்கிற்கு கூட
ஒப்பீடு செய்யாதீர்கள்! ஏன் என்றால் பறவைக் கூட இரை இருக்கும் இடம் தெரிந்தா அதி
காலையில் பறக்க செல்கிறது? இரண்டு அறிவு பெற்ற எறும்பு கூட தன் உணவை தானே தேடிச்
சென்று, வரும் தடைகளை வைத்தே, அதன் மேலே ஏறிச் சென்றே உணவை எடுத்து வருகிறது. அதிக
அறிவு கொண்ட இனம் எறும்பு என்று சொல்கிறார்கள். சின்ன சின்னப் பிரச்சனைக்கெல்லாம்
தீர்வு பண்ணி பழகி வந்தாலே பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு எடுக்க
நிபுணத்துவம் பெற்று விடுவீர்கள். பிரச்னைகளை கண்டு பயந்து ஓடி விடாதீர்கள்.
பிரச்சனைகளின் அஸ்திவாரத்தை பார்த்தாலே பாதி தீர்வு கிடைத்து விடும். மீதி தீர்வும்
பிரச்சனைக்கு உள்ளேயேத் தான் இருக்கிறது. பெரிய பெரியத் தலைவர்கள் எல்லாம் அடிக்கடிப்
படிப்பது ஒன்று திருக்குறள், மற்றொன்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
என்ற புத்தகம் தான். திருக்குறளில் ஊக்கம் பற்றிய அதிகாரங்களே உள்ளது. பிரச்சனை
என்பது கல் மாதிரி. அதை கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தால் கண்ணை மறைத்து
விடும். அதுவே கண்ணுக்கு தூரத்தில் வைத்து பாருங்கள். நீங்கள் பிரச்சனையை
மறைக்கலாம். ஜப்பானியர்கள் எல்லாம் பிரச்சனையை வரவேற்பார்களாம். எங்கே பிரச்சனை
என்று தேடி தேடி அனுபவத்தை பெறுவார்களாம். பிரச்சனைகளை முதலில் பிரித்துப்
பாருங்கள். தனித்தனி தீர்வு கிடைக்கும். பிறகு தீர்வுகளை மொத்தமாக்கி செயலில்
பதியுங்கள். அப்புறம் பாருங்கள் நாளடைவில் வந்த, வரக்கூடிய, வந்து இருக்கிற எல்லா
பிரச்சனைக்கும் தீர்வுகள் உங்கள் மனதில் இருக்கிறது. அப்புறம் என்ன நீங்கள் தான்
தீர்வுகளின் அரசன் ஆகி விடுவீர்கள். 
ஊக்கம் என்பது உள்ளம் சார்ந்தது ஒரு வகை
என்றால் உடல் சார்ந்தது இன்னொரு வகை. ஊக்கம் என்பது இலக்குகளை அடைதலையும், தேவையைப்
பூர்த்தி செய்ய தேவைப்படும் சக்தி தான் இந்த ஊக்கம். இந்த ஊக்கம் என்பது இன்றைய
உலகத்தில் இளைஞர்களுக்குத் தான் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் இளைஞர்களே நல்ல
விஷயம் என்றாலும், கெட்ட விஷயம் நடப்பதற்கும் காரணமானவர்கள். சுருங்கக்கூறின் இளைஞர்களே நாட்டின் முதுகெலும்புகள் ஆவார்கள். அவர்கள் உயிர்ப்புடனும்,
எதிர்கால லட்சியத்துடனும், நாட்டின் வளர்சிக்காகவும் துடிப்புடன் ஊக்கமாக
செயல்படக் கூடியவர்கள். ஊக்கம் கொடுத்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான். உண்மைத்
தான். மனித நலன் என்பது என்னவென்றால் தனி மனிதனின் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பது
அல்ல. சமூகத்தைப் பற்றி சமுகத்தில் உள்ள அனைத்து மனிதனைப் பற்றி சிந்திப்பதே
ஆகும். இளைஞர்களை அனுபவமிக்க பெரியோர்கள் வழி நடத்திச் செல்ல வேண்டும்.
அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தலே மிகச் சிறந்தப் பணியாகும். ஆசிரியர் பணியே அறப்பணி.
அதற்கே உங்களை அற்பனியுங்கள். உண்மைத் தான் உலகின் நலனுக்கு இந்த ஆசிரியர்களும்
மிகப் பங்காற்றுகிறார்கள். ஒரு செயலைச் செய்யும் போது மற்றவர்கள் கொடுக்கும்
ஆதரவும் ஒரு வகை ஊக்கமே. ஏன் கைத்தட்டல் கூட ஒருவரை மிகப் பெரிய கலைஞரை
உருவாக்கும். எந்த ஒரு செயலும் நினைத்த உடனே நடந்து விடுதல் கிடையாது. மாறாக அந்த
செயல் முடிந்தே தீர வேண்டும் என்ற ஊக்கமான மன வலிமையே அந்த செயலை முடித்து
வைக்கும். அந்த ஊக்கமே முடிக்கக் கூடிய வழிகளையும் காட்டிக் கொடுக்கும். மேலும்
ஊக்கம் உடையவருடைய ஆக்கம் அதாவது செயல்கள் அழகு பெறுமாம். உள்ளம் உறுதியாக
இருந்தால் உலகத்தில் எதை வேண்டும் என்றாலும் அடையலாம். எந்தத் தடைகள் வந்தாலும்
உடைத்து எறியலாம். ஊக்கம் இருக்கும்போது உங்களுக்கு இடையில் செங்கற்களை வைத்துத்
தடைக்கற்கள் போட்டாலும் அதை படிக்கற்களாக்கித் தாண்டி செல்வீர்கள். தேவைப்பட்டால் பாய்ந்தும்,
பறந்து கூடச் செல்வீர்கள். அப்பேற்பட்ட சக்தி, ஆற்றல் இந்த ஊக்கத்திற்கு உண்டு.
உள்ளம் என்பது ஒரு மரத்தின் வேர் என்றால் ஊக்கம் என்பது அதன் கிளைகளே. இந்த ஊக்கம்
நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கும். நேர்மறை ஊக்கம் என்பது ஒருவரிடம் அவர்
தெரிந்த கேள்விகளை கேட்டு, கைத்தட்டல் பாராட்டு வாங்கிக் கொடுப்பது ஒரு ரகம்
என்றால், இன்னொரு ரகமானது திறமை பெற்றவனை மேலும் மேலும் உசுப்பேத்தி,
ஊக்கப்படுத்தி இதே மாதிரி மேலும் மேலும் செய்து வர மிகப் பெரிய வளர்ச்சி
அடைவீர்கள் என்று சொல்லி ஊக்கம் கொடுப்பது இன்னொரு ரகமாகும்.  எதுவாயினும் இது ஊக்கம் கொடுப்பவர்களால்
தீர்மானம் செய்யப்படுகிறது. எதிர் மறை ஊக்கம் என்பது ஒருவருடைய கெட்ட செயல்களை, பழக்க
வழக்கங்களை நிறுத்துவதற்கும், தவிர்க்க வைப்பதற்கும் சிறு சிறு தண்டனை கொடுத்து
திருத்துவது எதிர் மறை ஊக்கம் ஆகும். எதுவாயினும் தண்டனை இல்லாமல் ஒருவரை
திருத்துவது மிகச் சிறந்த வழிகள் ஆகும்.
வாழ்க்கை
என்பது ஒரு முறைதான் வரும் நம் அனைவருக்கும். அந்த வாழ்க்கையை சாதாரணமாக்குவதும்,
சரித்திரமாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு
விதமாக இருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்த நான்கு பேர்களும் நாங்கு விதமாக
இருப்பார்கள். குணத்தால், நிறத்தால், மற்றும் பல காரணத்தினால் வேறுபட்டு
இருப்பார்கள். இதில் ஒருவர் தன்னுடைய சொந்த முயற்சி, சொந்தத் திட்டம், சொந்த உழைப்பு
அதாவது பிறர் உழைப்பு இல்லாமல் தானே உழைத்து கடைசியில் வெற்றியும் அடைவார்கள்.
இரண்டாம் நபர் ஒருவர் உதவியுடனும், ஏன் முதல் நபர் உதவியினால் கூட முன்னேற்றம்
காண்பார்கள். மூன்றாவது நபர்க்கு ஒன்னும் உதவிலாம் செய்ய வேண்டாம். ஊக்கம் மட்டும்
கொடுத்துக் கொண்டே இருந்தால் போதும். அவர் முன்னேற்றம் வேற லெவல்களில் இருக்கும்.
அந்த ஊக்கம் உன்னால் முடியும் என்ற சக்தியான வார்த்தைகளில் அவர் உடம்புக்குள் ஒரு
புது வித இரத்தம் பாய்ந்து ஓடுவது போல அவருக்குத் தோன்றும். அந்த ஊக்கம் மட்டுமே
அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் அவர் கரையேறி களத்தில் வெற்றி கொடி
ஏற்றி விடுவார்கள். நான்காம் நபர் இயல்பாகவே அவரிடம் அனைத்து குணநலன்களும் பெற்று
இருப்பார்கள். அவர்களுக்கு தோல்வியை விட வெற்றிகளின் எண்ணிக்கை தான் அதிகமாக
பெற்றவர்கள் ஆவார்கள். எதுவாயினும் கடைசி வரை ஊக்கத்தை கை விடுதல் கூடாது.
ஏனென்றால் கடைசி நொடிகளில் கூட நமக்கான வெற்றி காத்து கொண்டு இருக்கும். நான் மண்டி இடுவேன் என்று நினைத்தாயோ?
இது எவ்வளவு பெரிய ஊக்கமான வார்த்தைகள் தெரியுமா? எதிரியும் அஞ்சி விடுவார்கள்.
அப்படி எதிரிகள் அஞ்சித் தான் நாம் விடுதலையும் பெற்றோம் என்பதும் மறக்க, மறைக்க
முடியாத உண்மையாகும். என்னை வீழ்த்தவே முடியாது என்ற நம்பிக்கையை விட வீழ்ந்தாலும்
எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையே நாம் கொள்ளவேண்டியது. பத்து முறை வீழ்ந்தவன்
என்று சொல்வதைக் காட்டிலும் பத்து முறை எழுந்தவன் என்று சொல்வதில் தான் தனித்
திமிர் இருக்கிறது. நம்முடைய சிந்தனைகளைச் சாதிப்பதற்க்காகவே செலுத்துங்கள். சிந்தித்துச்
செயல்படுங்கள் அது தான் நம்முடைய வெற்றியைச் சந்திக்கும் செயல்பாடுகள் ஆகும். நல்லதை
விடாமல் துரத்துங்கள். கெட்டதை விட்டு விட, விடா முயற்சியுடன் முயற்சி
செய்யுங்கள்.  நம்முடைய பாதங்கள் தான்
மிகச் சிறியது. நம்முடைய பயணப் பாதைகள் மிகப் பெரியது. நீங்களே சுருக்கிக்
கொள்ளாதீர்கள். வேகமாக செல்ல முடிய வில்லையா? கவலை கொள்ளாதீர்கள். நிற்காமல்
செல்கிறோமே என்று சந்தோசம் கொள்ளுங்கள். ஊக்கம் என்னும் ரதத்தில்லே பயணம்
செய்பவர்களுக்கு வெற்றி கொடி தூரத்தில் இல்லை. மிக அருகிலே இருக்கிறது. இலக்கை
முடிவெடுப்பது என்பது பெரிய விசயமே இல்லை. ஆனால் எடுத்த முடிவுகளை முடிப்பது தான்
பெரிய விஷயம். அனைவரும் முடிவு எடுப்பதில் வல்லவர்களாக இருப்போம். வாழ்த்துக்கள்.
வணக்கம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு
தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: நலன் - குறிப்புகள் [ நலன் ] | : Welfare - Tips in Tamil [ Welfare ]